For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி உதிர்வு மற்றும் வழுக்கையை பற்றிய சுவாரசிய கட்டுக்கதைகளும் உண்மைகளும்..!

By Haripriya
|

யாராக இருந்தாலும் தங்கள் முடியை மிகவும் அழகெனவே கருதுவார்கள். இது மிகவும் இயல்பான ஒன்றே. கண்ணாடியை பார்க்கும் போதும் தங்கள் முடியை கொதுவது ஆண் பெண் என இருவருக்கும் பிடித்தமான விஷயமாகும். இந்த முடி உதிர்வை யவராலும் நிச்சயம் பொருத்து கொள்ள முடியாதுதான். நம்மை மிகவும் அழகாக காட்டும் இந்த முடியை நாம் மிகவும் விரும்புவோம்.

Myths And Facts About Hair Loss

இவை உதிர்ந்தால் நிச்சயம் நமக்கு வேதனையாக இருக்கும். முடி உதிர்வை பற்றி பலரும் பல வகையான கருத்துக்களை சொல்லியே நம்மை வேதனைப்படுத்துவார்கள். உண்மையில் முடி உதிர்வுக்கான காரணங்கள் என்னதான், என்பதை பற்றியும் இவற்றை பற்றிய கட்டுக்கதைகளையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி உதிர்வு ஏன்..?

முடி உதிர்வு ஏன்..?

பொதுவாக முடி உதிர்வு ஏற்பட்டு மண்டை வழுக்கை பெறுவது பல காரணிகளாக சொல்லலாம். சீரற்ற உணவு முறை, பரம்பரை ரீதியாக, அசுத்தமான சூழல், வலிமையற்ற முடி, வேதி பொருட்களை பயன்படுத்துதல்... இப்படி ஒரு சில முதன்மையான காரணங்கள் இருக்கின்றன. மேலும், இவற்றை தவிர நாம் சில தவறான கருத்துக்களை எண்ணி கொண்டிருக்கின்றோம். அவை யாவை என்பதை பார்ப்போம்.

கட்டுக்கதை #1

கட்டுக்கதை #1

அடிக்கடி தலைக்கு குளித்தால் முடி உதிர்ந்து வழுக்கை பெரும்.

உண்மை :-

அடிக்கடி தலைக்கு குளிப்பது நன்மையே. ஏனெனில் அதிக படியான அழுக்குகளை தலையில் சேர்த்து கொண்டால் அது முடியின் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். எனவே, தலைக்கு குளிப்பது நல்லதுதான், என்றாலும் அதிக படியான வேதி பொருட்கள் நிறைந்துள்ள ஷாம்பூக்களை பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும்.

கட்டுக்கதை #2

கட்டுக்கதை #2

அம்மா வழியாக முடி உதிர்வு பிரச்சினை இருந்தால் அது நம் முடியையும் பாதிக்கும்.

உண்மை :-

பல வகையான கட்டுக்கதைகள் இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று. முடி உதிர்வு பரம்பரை ரீதியாகவும் நிகழும் என்பது உண்மைதான். ஆனால், அம்மா வழியில் மட்டும் இது நடக்காது. அப்பா வழி சொந்தங்களுக்கு முடி பிரச்சினை இருந்தாலும் இது நம் முடியையும் பாதிக்க செய்யலாம்.

கட்டுக்கதை #3

கட்டுக்கதை #3

தலையில் தொப்பி அணிந்தால் முடி உதிரும்.

உண்மை :-

தலையில் இறுக்கமான தொப்பிகளை அணிந்தால் அது மண்டையின் ரத்த ஓட்டத்திற்கு இடையூறாக இருக்கும்தான். என்றாலும் அவை முடியை உதிர செய்யும் என்பதற்கான நிரூபணங்கள் இல்லை என்றே ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

கட்டுக்கதையா..? #4

கட்டுக்கதையா..? #4

புகை பிடித்தால் முடி அதிகம் உதிர்ந்து, நரை வரும்.

உண்மை :-

இது மிகவும் உண்மையான தகவல்தான். முடி அதிகம் உதிர புகை பழக்கமும் முதன்மையான காரணம் என ஆய்வுகள் சொல்கிறது. மற்றவர்களை காட்டிலும் புகை பழக்கம் உள்ளவர்களுக்கு 3 மடங்கு முடி உதிர்ந்து, நரை ஏற்படுமாம்.

கட்டுக்கதையா..? #5

கட்டுக்கதையா..? #5

முடியை இறுக்கமாக கட்டினால் முடி உதிர்வு ஏற்படும்.

உண்மை :-

முடிக்கு அதிக அளவில் அழுத்தத்தை தந்தால் அது உதிரத்தான் செய்யும். பெரும்பாலும் பெண்கள் கிளிப், பேண்டு போன்றவற்றை அதிகம் தலைக்கு பயன்படுத்துவர். இது பெரும்பாலும் முடி உதிர்வை தருமாம்.

கட்டுக்கதையா..? #6

கட்டுக்கதையா..? #6

ஹேர் ட்ரையர் முடி உதிர்வை தந்து வழுக்கையை ஏற்படுத்தும்.

உண்மை :-

முடி உதிர்வு அதிகம் ஏற்பட இதுவும் ஒரு காரணம். முடியை காய வைக்க பயன்படுத்தும் ஹேர் ட்ரையர்கள் முடியை வலுவிழக்க செய்து உதிர்வை தரும். முடியின் ஈரப்பதத்தை இவை முற்றிலுமாக இழக்க செய்வதால் முடி உதிர்வு ஏற்படும்.

கட்டுக்கதையா..? #7

கட்டுக்கதையா..? #7

மன அழுத்தம் வழுக்கை பிரச்சினைக்கு காரணம்.

உண்மை :-

இது முற்றிலும் உண்மைதான். அதிக மன அழுத்தம் கொண்டிருந்தால் அது முடி உதிர்வை தந்து வழுக்கை பிரச்சினைக்கு வழி வகுக்கும். அத்துடன் இவை முடியின் அடி வேரை பலம் இழக்க செய்யுமாம்.

கட்டுக்கதையா..? #8

கட்டுக்கதையா..? #8

சீரற்ற உணவு பழக்கம் முடி உதிர்வை தரும்.

உண்மை :-

முடி பிரச்சினைக்கு சரியான உணவு பழக்கமும் காரணம்தான். முடி அதிகமாக உதிர்ந்தால், உணவும் முக்கியான காரணியாக கருதப்படும். அத்துடன் ஊட்டசத்துக்கள் குறைந்தாலும் முடி உதிர்வு ஏற்படும்.

கட்டுக்கதை #9

கட்டுக்கதை #9

முடி உதிர்ந்தால் கட்டாயம் அது புற்றுநோயாக தான் இருக்கும்.

உண்மை :-

உங்களுக்கு முடி உதிர்ந்தால் உடனே அது புற்றுநோயாக இருக்கும் என எண்ண வேண்டாம். அதிக படியாக முடி கொட்டினாலே புற்றுநோயிற்கான அறிகுறியாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மருத்துவரை முதலில் அணுகுவது முக்கியமாகும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Myths And Facts About Hair Loss

Hair loss doesn’t happen without reason. Many reasons for hair fall like heredity, foods, chemicals, medications..etc
Desktop Bottom Promotion