இவை உங்கள் முடியை வெட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டதை தான் குறிக்கிறது எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நம்மில் பெரும்பாலானோருக்கு எப்போதெல்லாம் தலைமுடியை வெட்ட வேண்டும் என்று சரியாக தெரியாது. தலைமுடி ஒருவருக்கு சிறப்பான தோற்றத்தைக் கொடுப்பதால், அந்த தலைமுடியை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க வேண்டியது என்பது அவசியம். அதிலும் தற்போதைய மாசு நிறைந்த சுற்றுச்சூழல், கெமிக்கல் கலந்த தலைமுடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் தலைமுடி அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறது.

இப்படி தலைமுடி பாதிக்கப்படும் போது, முடியின் வளர்ச்சியும் தடைபடுகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு தலைமுடியை சீரான இடைவெளிகளில் வெட்டுவது தான். ஆனால் எந்த மாதிரியான சூழ்நிலைகளின் போதெல்லாம் தலைமுடியை வெட்டுவது சிறந்தது என்று நீங்கள் கேட்கலாம். அத்தகையவர்களுக்கு இக்கட்டுரையில் விடை கிடைக்கும். சரி, இப்போது ஒருவர் தலைமுடியை வெட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் எவையென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி வெடிப்புகள்

முடி வெடிப்புகள்

தலைமுடியின் முனைகள் அசிங்கமாக பிளவுபட்டு காணப்படுமானால், உங்களுக்கு முடி வெடிப்புக்கள் அதிகம் உள்ளது என்று அர்த்தம். ஒருவருக்கு தலைமுடியின் முனைகளில் வெடிப்புக்கள் அதிகம் இருந்தால், அது தலைமுடி உதிர்விற்கு அதிகம் வழிவகுக்கும். ஆகவே உங்கள் தலைமுடி உதிராமல் இருக்க நினைத்தால், முடியின் முனைகளை ட்ரிம் செய்யுங்கள். ஒருவேளை அப்படியே விட்டுவிட்டால், அந்த பிளவுகள் அப்படியே அதிகரித்து, ஒட்டுமொத்த முடியையும் பாதித்துவிடும்.

வடிவமின்றி முடி வளர்ச்சி பெற்றிருப்பது

வடிவமின்றி முடி வளர்ச்சி பெற்றிருப்பது

நீங்கள் சில மாதங்களுக்கு முன் உங்கள் ஹேர் ஸ்டைலை மாற்றுவதற்காக தலைமுடியை வெட்டியிருக்கலாம். ஆனால் அப்படி வெட்டிய பின்பு, மீண்டும் வெட்டிய அனைத்து முடிகளும் வளரும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. ஒருவர் ஒருமுறை தலைமுடியை வெட்டிவிட்டால், அவற்றில் சில வேண்டுமானால் பழைய நீளத்திற்கு வளரும். எஞ்சிய முடிகள் குறிப்பிட்ட நீளம் தான் வளரும். எனவே இந்நிலையில் நீங்கள் தலைமுடியை வெட்டி தான், சரிசமமாக்க முடியும்.

மெலிந்த முடி

மெலிந்த முடி

சில சமயங்களில் தலைமுடி அதிகம் உதிரும். இப்படி அதிகம் தலைமுடி உதிர்ந்தால், அது தலைமுடியை மெலியச் செய்து, எலி வால் போன்று அசிங்கமாக காட்சியளிக்கும். இந்நிலையில் தலைமுடி வளரவில்லையே என்று புலம்புவதால், தலைமுடி வளரப் போவதில்லை. ஆனால் எலிவால் போன்று இருக்கும் தலைமுடியை வெட்டினால், தலைமுடி சற்று அடர்த்தியாக காட்சியளிப்பதுடன், மீண்டும் வளரவும் உதவியாக இருக்கும்.

தலைமுடியின் நிறம் மாறியிருப்பது

தலைமுடியின் நிறம் மாறியிருப்பது

பொதுவாக ஹேர் கலரிங் செய்தால், அதில் உள்ள கெமிக்கல்கள் தலைமுடியில் பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் அடிக்கடி ஹேர் கலரிங் செய்பவராக இருந்தால், தலைமுடியின் முனைகளி பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி ட்ரிம் செய்ய வேண்டியது அவசியம். உங்கள் தலைமுடி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கலரிங் செய்த முடியின் நிறம் மாறி காட்சியளிக்க ஆரம்பிக்கும். இந்நிலையில் உடனே தலைமுடியை வெட்டினால், பாதிப்பைத் தவிர்க்கலாம்.

ஹேர் கட்டைப் பொறுத்தது

ஹேர் கட்டைப் பொறுத்தது

நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஹேர் கட்டைப் பொறுத்து, எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை தலைமுடியை ட்ரிம் செய்ய வேண்டும் என்பது உள்ளது. அதாவது நீங்கள் சாதாரண ஹேர் கட் செய்திருந்தால், 2 மாதங்கள் வரை ஹேர் கட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அதுவே ஃபேன்ஸி ஹேர்கட் செய்திருந்தால், உங்கள் தலைமுடி விரைவில் வடிவமிழந்து அசிங்கமாக காட்சியளிக்க ஆரம்பிக்கும். இம்மாதிரியான நேரத்தில், தலைமுடியின் அழகிற்காக தலைமுடியை வெட்ட வேண்டியிருக்கும்.

ஹேர் ஸ்டைல் போர் அடித்தால்...

ஹேர் ஸ்டைல் போர் அடித்தால்...

உங்களது ஹேர் ஸ்டைல் குறித்து உங்கள் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் குறைக் கூற ஆரம்பித்தால், உங்கள் ஹேர் ஸ்டைலை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். அதிலும் உங்களுக்கு ஏற்கனவே இம்மாதிரியான எண்ணம் தோன்றி, உங்கள் நலன் விரும்பிகளும் கூறினால், சற்றும் யோசிக்காமல் ஹேர் ஸ்டைலை மாற்றிடுங்கள்.

பேங்க்ஸ் வைத்திருந்தால்...

பேங்க்ஸ் வைத்திருந்தால்...

நீங்கள் பேங்க்ஸ் வைத்திருந்தால், அதன் வடிவத்தைப் பராமரிப்பதற்கு அடிக்கடி ட்ரிம் செய்ய வேண்டியிருக்கும். அதாவது 3-4 வாரத்திற்கு ஒருமுறை ட்ரிம் செய்ய வேண்டியது அவசியம். எனவே உங்கள் பேங்க்ஸை கவனித்து, தலைமுடி வெட்டும் நேரம் வந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஷாம்புக்களை அடிக்கடி பயன்படுத்தினால்...

ஷாம்புக்களை அடிக்கடி பயன்படுத்தினால்...

நீங்கள் உங்கள் தலைமுடிக்கு அடிக்கடி கெமிக்கல் கலந்த ஷாம்புக்களைப் பயன்படுத்தினால், உங்கள் தலைமுடி ஆரோக்கியத்தை இழந்து, முடியின் முனைகளில் வெடிப்புக்கள் அதிகம் ஏற்பட்டு, தலைமுடி பொலிவிழந்து மோசமாக காட்சியளிக்கும். ஷாம்புக்களை பயன்படுத்தினால், 4-6 மாதத்திற்கு ஒருமுறை முடியை ட்ரிம் செய்வதன் மூலம், முடி வெடிப்புக்களில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

If You Notice These Signs, Then It's Time For A Haircut

A lot goes into planning before one gets a haircut done. A woman plans to go for a trimming only because she has got split ends or her hair looks really damaged. A good haircut not only enhances your look, but also makes you look young.
Story first published: Monday, April 16, 2018, 11:50 [IST]