For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தயிரை எப்படி தேய்த்தால் முடி கொட்றது நிக்கும்?... நீளமா வளரும்...

ஆரோக்கியமான தலைமுடி வளர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.

By Vathimathi S
|

ஆரோக்கியமான தலைமுடி வளர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதிக கவனம், ச க்தி, முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தலைமுடிக்கு வேகமாக ஆரோக்கியம் ஊட்ட உதவும் வகையிலான சில பொருட்கள் உள்ளன.

 beauty

இதில் யோகர்ட் என்று அழைக்கப்படும் சுவையூட்டப்பட்ட தயிர் பொதுவான தலைமுடி நலன் சார்ந்த பொருளாகும். இதில் வைட்டமின், கொழுப்பு ஆசிட் அதிகம் இருக்கும். இது தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமானதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகார்ட் நல்லதா?

யோகார்ட் நல்லதா?

ஆம், இந்த பொருள் செம்மையான கூந்தல் வளர்ச்சிக்கு உதவி செய்யக் கூடியதாகும். பொடுகு தொல்லையில் இருந்து விடுபட இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந் தலையில் நல்ல முறையில் செயலாற்றும். நீண்ட நேர ஈரப்பதத்துடன் கூடிய அமைதியான சுருண்ட கூந்தலை பெற உதவும். முடி உதிர்வதை தடுத்து உச்சந் தலைக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதோடு நுண் குமிழிகள் அடைபடுவதை குறைக்கும். உச்சந் தலையின் உள்ளூர செயல்பாட்டை நிலைநிறுத்தி, சரும உற்பத்தியை ஒழுங்குபடுத்தும். யோகர்ட் அதன் குளிர் தன்மை மோசமான உச்சந்தலையிலும் செயலாற்றும்.

பயன்படுத்தும் முறை

1. முட்டை மற்றும் யோகர்ட்

தேவையான பொருட்கள்

ஒரு முட்டை

2 டீ ஸ்பூன் யோகர்ட்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.

மஞ்சள் மற்றும் வெள்ளை கரு நன்றாக கலந்தவுடன் 2 ஸ்பூன் யோகர்ட் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்குங்கள்.

உங்கள் கூந்தல் முழவதும் இதை வேர் முதல் நுணி வரை தடவவும். முடி காய்ந்த அல்லது ஈரப்பதத்தில் இருக்கலாம்.

தலை முடியின் அனைத்து பகுதிகளிலும் இதை தடவியவுடன் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

பின்னர் இதை ஷாம்பு மற்றும் குளிர்ந்த நீரில் கழுவவும். நீங்கள் இந்த கலவயை வாரத்தில் 2 முறை செய்யலாம். முட்டையில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. இது உங்களது உச்சந் தலை மற்றும் தலைமுடிக்கு ஊட்டம் அளிக்கும்.

வாழைப்பழம் மற்றும் யோகர்ட்

வாழைப்பழம் மற்றும் யோகர்ட்

தேவையான பொருட்கள்

. அரை பழுத்த வாழைப்பழம்

. ஒரு டீ ஸ்பூன் யோகர்ட்

. 2 டீ ஸ்பூன் தேன்

. 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

2. பிசைந்த வாழைப்பழத்தோடு மற்ற அனைத்து பொருட்களையும் கலந்து நன்றாக பேஸ்ட் போல் கலக்க வேண்டும்.

3. இந்த பேஸ்டை உங்களது கூந்தலில் நுணி முதல் வேர் வரை நன்றாக அனைத்து பகுதிகளிலும் இரு க்கும் வகையில் தடவ வேண்டும்.

4. இதை 25 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

5. பின்னர் ஷாம்ப் உதவியுடன் கழுவவும். வாரத்தில் 2 முறை இதை செய்யலாம்.

இந்த கலவை கூந்தலை அதிக மிருதுவாகவும், சத்துள்ளதாகவும் மாற்றும். இதில் உச்சந் தலையை சுத்தம் செய்யும் பொருட்கள் அடங்கியுள்ளது. இது உச்சந் தலையையும், கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்திரு க்க உதவும்.

யோகர்ட் மற்றும் ஆலிவ் ஆயில்

யோகர்ட் மற்றும் ஆலிவ் ஆயில்

தேவையான பொருட்கள்

. 1 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில்

. 1 கப் யோகர்ட்

. 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு

. 2 கப் தண்ணீர்

செய்முறை

ஆயில் மற்றும் யோகர்ட்டை ஒரு பாத்திரத்தில் கலக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

1. ஒரு கூஜாவில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரை கலக்க வேண்டும்.

2. கூந்தலை ஷாம்ப் மூலம் கழுவி கூடுதல் நீரை கசக்கி பிழிந்துவிட வேண்டும்.

3. யோகர்ட் மற்றும் ஆயில் கலவையை ஈரமான கூந்தலில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊறவிடுங்கள்.

4. பின்னர் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் கூந்தலை கழுவுங்கள்.

5. இதை தொடர்ந்து எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை ஊற்றி கூந்தலை கழுவிவிடுங்கள். வாரத்தில் 2 முறை இதை செய்யலாம். ஆரோக்கியமான கூந்தலை வைத்திப்பது, முடி உடையாமல் இருப்பது போன்ற கூந்தல் வளர்ச்சி சார்ந்ததாகும். இந்த கலவை ஹேர் கண்டிஷன்ட் மற்றம் எளிதில் கையாளக் கூடிய வகையிலும் கூந்தலை வைத்திருக்கும். எலுமிச்சை கலவை உச்சந் தலையின் உள்ளூர செயல்பாட்டை நிலை நிறுத்தும். அதோடு முடிக்கு பளபளப்பை கொடுக்கும்.

யோகர்ட் மற்றும் தேன்

யோகர்ட் மற்றும் தேன்

தேவையான பொருட்கள்

. அரை கப் யோகர்ட்

. ஒரு டீ ஸ்பூன் தேன்

. ஒரு டீ ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினீகர்

செய்முறை

அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி கலந்து மென்மையான மற்றும் நிலையான பேஸ்ட்டை தயாரித்து கொள்ள வேண்டும்.

1. கூந்தலில் நுணி முதல் வேர் வரை அனைத்து பகுதிகளிலும் இந்த கலவையை தடவவும்.

2. இந்த கலவை 30 நிமிடங்கள் வரை கூந்தலில் ஊற வேண்டும்.

3. மென்மையான ஷாம்பு மூலம் கழுவவும். வாரத்தில் 2 முறை இதை செய்யலாம். இந்த கலவை உச்சந் தலையில் எண்ணெய் உற்பத்தியாவதை கட்டுப்படுத்தும். நுண் குமிழிகள் அடைப டுவதை தடுக்கும். உங்களுக்கு காய்ந்த கூந்தல் இருந்தால் இந்த கலவையோடு ஒரு வாழைப்பழத்¬யும் சேர்த்து தடவலாம். அல்லது பிசுபிசுப்பான முடி இருந்தால் ஸ்ட்ராபெரியை கலந்து பயன்படுத்தலாம்.

சோற்று கற்றாழை மற்றும் யோகர்ட்

சோற்று கற்றாழை மற்றும் யோகர்ட்

தேவையான பொருட்கள்

. 3 டீ ஸ்பூன் சோற்று கற்றாலை ஜெல்

. 2 டீ ஸ்பூன் யோகர்ட்

. 2 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில்

. ஒரு டீஸ்பூன் தேன்

செய்முறை

1. மென்மையான கலவை ஏற்படும் வரை அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி கல க்கவும்.

2. இந்த கலவையை உங்களது உச்சந்தலையில் 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.

3. கூந்தலின் அனைத்து பகுதிகளிலும் இதை மசாஜ் செய்தவுடன் கூடுதலாக 30 நிமிடங்களை வரை இந்த கலவையை உங்களது கூந்தலில் ஊறவிடுங்கள்.

4. பின்னர் ஷாம்பு மூலம் கழுவுங்கள். வாரத்திற்கு 2 முறை செய்யுங்கள். சோற்று கற்றாழையில் அதிகளவு அமிலோ ஆசிட் மற்றும் புரோட்டீன் உள்ளது. மேலும், இது நுண்ணுயிர் கொல்லி மற்றும் உச்சந் தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வெண்ணெய் மற்றும் யோகர்ட்

வெண்ணெய் மற்றும் யோகர்ட்

தேவையான பொருட்கள்

. ஒரு கப் யோகர்ட்

. அரை கப் வெண்ணெய்

. 2 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில்

. ஒரு டீ ஸ்பூன் தேன்

செய்முறை

கட்டிகள் கரையும் வரை வெண்ணெய்யை நன்றாக பிசைந்துவிடவும். பின்னர் மீதமுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் கலந்து மென்மையான, நிலையான பேஸ்ட் கிடைக்கும் வரை கலக்கவும்.

1. கூந்தலை பிரிவுகளாக பிரித்து இந்த கலவையை தடவுங்கள்.

2. ஊட்டச்சத்தை அதிகரிக்கவும், பழுதை சரி செய்யும் வகையில் கூந்தலின் நுணி முதல் அடி வேர் வரை நன்றாக தடவவும்.

3. 20 நிமிடங்கள் வரை இல்த கலவையை ஊறவைத்துவிட்டு பின்னர் ஷாம்பு பயன்படுத்தி கழுவிவிடுங்கள். வறண்ட கூந்தல் இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாளும், சாதாரண கூந்தல் இருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறையும் இதை செய்யலாம். வெண்ணெய்யில் வைட்டமின் இ மற்றும் ஆக்ஸைட் எதிர்ப்பு சக்தி அதிகளவில் உள்ளது. இது உச்ச ந்தலையின் ஆரோக்கியத்தை சரி செய்து, மெதுவான கூந்தல் வளர்ச்சியை கையாளும்.

கறிவேப்பிலை மற்றும் யோகர்ட்

கறிவேப்பிலை மற்றும் யோகர்ட்

தேவையான பொருடகள்

ஒரு கப் யோகர்ட்

ஒரு கையளவு கறிவேப்பிலை

செய்முறை

கறி இலைகளை நன்றாக கழுவி பேஸ்ட் ஆகும் வரை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

1. ஒரு பாத்திரத்தில் கறி இலை பேஸ்ட்டுடன் ஒரு கப் யோகர்ட்டை கலந்துவிட வேண்டும்.

2. இந்த கலவையை கூந்தலின் நுணி முதல் வேர் வரை நன்றாக தடவ வேண்டும்.

3. 30 நிமிடங்கள் வரை தலையில் ஊறவைத்து பின்னர் ஷாம்பு பயன்படுத்தி கழுவிவிடுங்கள். கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்க வாரம் ஒரு முறை செய்யலாம். கறி இலைகளில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. இதில் உள்ள பீட்டா கரோடீன் முடி உதிர்வதை தடுக்கும். அடர்த்தியான மற்றும் அதிக அளவிலான முடி வளர உதவி செய்யும்.

தேங்காய் பால் மற்றும் யோகர்ட்

தேங்காய் பால் மற்றும் யோகர்ட்

தேவையான பொருட்கள்

. ஒரு கப் தேங்காய் பால்

. அரை கப் யோகர்ட்

. 2 டீ ஸ்பூன் கற்பூர எண்ணெய்

செய்முறை

1. நிலையான கலவை ஏற்படும் வரை அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி கலக்க வேண்டும்.

2. இந்த கலவையை உங்களது உச்சந்தலையில் வைத்து மசாஜ் செய்யவும். அதேபோல் கூந்தலின் அனைத்து பகுதிகளிலும் தடவ வேண்டும்.

3. ஒரு மணி முதல் 2 மணி நேரம் வரை ஊறவிட வேண்டும்.

4. பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவிட வேண்டும். வாரத்தில் ஒரு முறை இந்த கலவையை பயன்படுத்தலாம். தேங்காய் பாலில் அத்தியாவசியமான கொழுப்பு ஆசிட் சக்தி உள்ளடக்கியுள்ளது. இதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் கூந்தல் ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும். இது உங்களது உச்சந் தலையில் செயலாற்றி ஊட்டச்சத்து மிக்க முடி வளர்ச்சிக்கு உதவும்.

வெந்தயம் மற்றும் யோகர்ட்

வெந்தயம் மற்றும் யோகர்ட்

தேவையான பொருட்கள்

. ஒரு கப் யோகர்ட்

. ஒரு கை நிறைய வெந்தய விதைகள்

செய்முறை

1. இரவு முழுவதும் வெந்தயத்தை யோகர்ட்டில் ஊறவைக்க வேண்டும்.

2. காலையில் விதை மற்றும் யோகர்ட் ஆகியவை பேஸ்ட் ஆகும் வரை அறைக்க வேண்டும்.

3. இந்த பேஸ்ட்டை உச்சந்தலை மற்றும் கூந்தலில் தடவுங்கள்.

4. அரை மணி நேரம் ஊறிய பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விட வேண்டும். வெந்தயம் என்பது ஒரு சிறந்த பொருளாகும். உச்சந் தலையை ஆரோக்கியமாக பராமரிக்க இது பயன்ப டும். இது நுண்ணுயிர் அடைப்புகளை சரி செய்யும். பொடுகு பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும்.

எலுமிச்சை சாறு மற்றும் யோகர்ட்

எலுமிச்சை சாறு மற்றும் யோகர்ட்

தேவையான பொருட்கள்

. 4 டீ ஸ்பூன் யோகர்ட்

. 2 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு

. ஒரு டீ ஸ்பூன் தேன்

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களை கொட்டி மென்மையாக கலக்க வேண்டும்.

2. இந்த கலவையை உச்சந்தலை மற்றும் கூந்தலில் தடவுங்கள்.

3. 15 முதல் 20 நிமிடங்கள வரை உறவைத்துவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். வாரத்தில் ஒரு முறை இந்த கலவையை பயன்படுத்தலாம்.

மோசமான உச்சந்தலையில் செயலாற்ற இது எளிமையான வழியாகும். இது கூடுதல் எண்ணெய் மற்றும் சரும உற்பத்தியை ஒழுங்குபடுத்தும். நுண்ணறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த முயற்சியால் ஆரோக்கிய கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

கூந்தர் வளர்ச்சி என்பது எளிமையான காரியம் கிடையாது. இதற்கு அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் கூந்தல் வளர்ச்சிக்கு யோகர்ட் பயன்படுத்துவது சிறந்த உதவியளிக்கும். இதற்கு முன்பு கூந்தல் பராமரிப்புக்கு நீங்கள் யோகர்ட் பயன்படுத்தியிருந்தால் உங்களது கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Yogurt For Hair Growth

While keeping your hair healthy is a task all by itself, focusing on growing your hair can be even harder.
Desktop Bottom Promotion