ஆண்களே! உங்கள் முன் தலையில் ஏற்படும் வழுக்கையை சரிசெய்வதற்கான சில வழிகள் இதோ!

Subscribe to Boldsky
வழுக்கை ஆகாமல் இருக்க...வீடியோ

30 வயதிற்கு மேலான பெரும்பாலான ஆண்கள் மற்றும் சில பெண்கள் சந்திக்கும் ஓர் பொதுவான தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனை தான் முன்பக்க தலையில் ஏற்படும் வழுக்கை. சில சமயங்களில் 25 வயதை எட்டிய இளம் ஆண்களுக்கு முன்பக்க தலையில் பிரகாசமாக ஒளி வீச ஆரம்பிக்கும். இந்த பிரச்சனையை சந்திக்கும் இளம் ஆண்கள் பலர் இதை நினைத்து பல நாட்கள் தங்களின் தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள்.

தலையின் முன்பக்கத்தில் ஏற்படும் வழுக்கைக்கு ஏராளமான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் தற்போது இருக்கின்றன. இருப்பினும் இவற்றில் சில மட்டுமே நல்ல பலனைத் தருவதாக உள்ளது. பெரும்பாலானவை ஏமாற்றும் வகையில் தான் இருக்கிறது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த பிரச்சனைக்கு ஒருசில எளிய இயற்கை தீர்வுகள் உள்ளன.

How To Treat Frontal Hair Loss Naturally

இந்த எளிய இயற்கை வழியால் உங்கள் பணத்தை அதிகம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் இந்த வழிகளால் உடனே பலன் கிடைக்காவிட்டாலும், நிச்சயம் விரைவில் எதிர்பார்த்த பலனைக் காண முடியும். இக்கட்டுரையில் முன்பக்க தலையில் ஏற்படும் வழுக்கையைத் தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதைப் படித்து பின்பற்றி, வழுக்கையைப் போக்கி, உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் அதிகரித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஒருவர் அடிக்கடி பின்பற்றினால், தலையின் முன்பக்கத்தில் வழுக்கை ஏற்படாமல் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்பூர எண்ணெய்

கற்பூர எண்ணெய்

* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் கற்பூர எண்ணெய், 2 டீஸ்பூன் தயிர் மற்றும் 3-4 துளிகள் ஜொஜோபா ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

* அதன் பின், அந்த கலவையை வழுக்கையுள்ள தலையின் முன்பக்கத்தில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வையுங்கள்.

* இறுதியில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலசுங்கள்.

* இந்த செயலை மாதத்திற்கு ஒருமுறை பின்பற்றினால், முன்பக்க தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வெங்காய சாறு

வெங்காய சாறு

* நற்பதமான வெங்காயத்தை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

* பின் ஒரு பஞ்சுருண்டை எடுத்து, வெங்காய சாற்றில் நனைத்து, பாதிக்கப்பட்ட தலையின் முன்பக்கத்தில் தடவுங்கள்.

* குறிப்பாக இச்செயலை இரவில் செய்து, இரவு முழுவதும் ஊற வையுங்கள்.

* மறுநாள் காலையில் எழுந்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள்.

* இந்த செயலை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், தலைமுடியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மிளகு

மிளகு

* மிக்ஸியில் சிறிது மிளகைப் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பௌலில் அந்த மிளகுத் தூளை எடுத்து, அதில் 2-3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* அதன் பின்பு அந்த கலவையை பிரச்சனையுள்ள பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* இறுதியில் மைல்டு ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 2 முறை செய்வது, முன்பக்க தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

* ஒரு சிறிய கிண்ணத்தில் 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்து, ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதனை வழுக்கை உள்ள தலையின் முன்பகுதியில் தடவி 40-45 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* அதன்பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

* இப்படி மாதத்திற்கு குறைந்தது 2-3 முறை செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

செம்பருத்தி

செம்பருத்தி

* ஒரு கையளவு செம்பருத்திப் பூ மற்றும் இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை நன்கு அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* அதன் பின் அந்த கலவையை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 30-35 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* இறுதியில் வெதுவெதுப்பான நீரால் தலையை அலச வேண்டும்.

* இச்செயலை மாதத்திற்கு 2 முறை செய்து வந்தால், முன் தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

* கற்றாழை செடியில் இருந்து அதன் ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.

* பின் அந்த ஜெல்லை ஸ்கால்ப்பில் படும்படி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்யுங்கள்.

* 40-45 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால், தலையை அலசுங்கள்.

* இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

* சிறிது ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ளுங்கள்.

* இரவில் படுக்கும் முன், இந்த எண்ணெயை தலையில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

* மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலையை அலசுங்கள்.

* இப்படி வாரத்திற்கு 2 முறை ஒருவர் செய்து வந்தால், தலையின் முன்பக்கத்தில் வழுக்கை வராமல் தடுக்கலாம்.

வெந்தயம்

வெந்தயம்

* ஒரு கையளவு வெந்தயத்தை எடுத்து நீரில் போட்டு, 5-6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* பின் அதை நன்கு மென்மையாக அரைத்து, அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின்பு அந்த கலவையை தலையின் முன் பகுதியில் மட்டுமின்றி, தலைமுழுவதும் ஸ்கால்ப்பில் படும்படி தடவுங்கள்.

* 1 மணிநேரம் நன்கு ஊறிய பின், தலைமுடியை அலசுங்கள்.

* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலையின் முன்பகுதியில் உள்ள முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

புடலங்காய்

புடலங்காய்

* புடலங்காயில் உள்ள ஆன்டி-பயாடிக் பண்புகள், ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை சரிசெய்து, மயிர்கால்களின் வளர்ச்சியைத் தூண்டும்.

* அதற்கு புடலங்காயை சிறிது எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, அந்த சாற்றினைத் தொட்டு ஸ்கால்ப்பில் படும்படி தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* மறுநாள் காலையில் தலையை நீரால் அலச வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், தலை சொட்டையாவதைத் தடுக்கலாம்.

சீரகம்

சீரகம்

* சீரகத்திற்கு 100-க்கும் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்து தலைமுடிக்கு மிகவும் நல்லது. சொல்லப்போனால் சீரகத்தைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், வழுக்கை விழுவதைத் தடுக்கலாம்.

* அதற்கு 1 டீஸ்பூன் சீரகத்தை 1 கப் ஆலிவ் ஆயிலில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* மறுநாள் காலையில் அந்த எண்ணெயால் ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலச வேண்டும்.

* இப்படி வாரம் ஒருமுறை செய்ய, நல்ல பலனைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    How To Treat Frontal Hair Loss Naturally

    Frontal hair loss, commonly referred to as a receding hairline, is an exceedingly common problem that most men and few women are facing. The best way to treat this are by using natural remedies, as they do not have any type of side effects. Some of the best natural remedies are fenugreek, camphor oil, onion juice, etc.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more