For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகு ஓவரா அரிக்குதா?... இத தடவுங்க... ஒரே வாரத்துல எப்படி காணாம போகுதுன்னு பாருங்க...

பொடுகு மேற்புறத் தோலினால் ஏற்படும் பொதுவான பிரச்சனை. இதன் அறிகுறியானது அரிப்பு மற்றும் தோல் செதில்களாக உதிர்தல் பிரச்னை ஏற்படும்.

|

ஒரு வாரம் அல்லது அதுக்கு முன்னாடியே பொடுகிலிருந்து விடுபட முடியுமா? கண்டிப்பாக முடியும். பொடுகு, வறட்சியான மற்றும் எண்ணெய்ப் பசை மிகுந்த தலையினால், மேற்புறத் தோலில் ஏற்படும் பிரச்சனைகள் மிக அதிகமாக இருக்கின்றன. இந்த அறிகுறிகளானது தலை அரிப்பு மற்றும் தோல் செதில்களாக உதிர்தல் போன்ற பிரச்னைகள் இருக்கும். இப்படி பொது இடங்களில் சென்று தலையை சொறிந்து கொண்டு நின்றால் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.அந்த சங்கடமான சூழ்நிலையை பொது இடங்களில் உண்டாகாமல் தவிர்ப்பது எப்படி?...

dandruff remedies in tamil

எவ்வளவு அதிகமாக பொடுகு பிரச்னை இருந்தாலும் நீங்கள் ஒரு வாரத்துக்குள் பொடுகுத் தொல்லையிலிருந்து எப்படி விடுபடுவது என்று பார்ப்போம். அதிலும் குறிப்பாக, நம்மிடம் வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு எப்படி ஹேர்மாஸ்க், ஹேர் பேக் போன்ற வகைகளில் எப்படி பொடுகைத் தீர்க்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஸ்பிரின்

ஆஸ்பிரின்

மற்ற ஆய்வக ஷாம்பூவைப் போல ஆஸ்பிரினிலும் சாலிசிலிக் அமிலம் உள்ளது. இரண்டு ஆஸ்பிரினை நன்கு தூளாக்கி பவுடர் செய்து கொள்ளுங்கள். இப்பவுடரை உங்கள் ஷாம்பூவுடன் கலந்து, தலையின் தோல் பகுதியில் படும்படி தேய்த்து பின்னர் சுத்தம் செய்யவும். பயன்படுத்தும் சமயங்களில் மட்டும் இக்கலவையை செய்யவும். இதனை வாரத்தில் 2-3 முறை பயன்படுத்தியதுமே நல்ல விளைவுகளை காண்பீர்கள்.

டீ ட்ரி ஆயில்

டீ ட்ரி ஆயில்

பல ஆய்வுகளின் அடிப்படையில் சில துளிகள் டீ ட்ரி ஆயிலை ஷாம்பூவுடன் சேர்த்து பயன்படுத்துவதால் 50% தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில துளிகள் இந்த ஆயிலை உங்கள் ஷாம்பூவுடன் கலந்து வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லை நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

எல்லா வீடுகளிலும் பேக்கிங் சோடா இருக்கும் ஆனால் அதன் பொடுகு நீக்கும் பண்பு நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஈரமான தலையில்,இதனை தலையின் மேற்புறப் பகுதியில் படுமாறு தேய்த்து பின்னர் நீரில் கழுவ வேண்டும். ஷாம்பூ பயன்படுத்தக்கூடாது. இது பூஞ்சைகளை அழிப்பதில் சிறந்தது.

மவுத்வாஷ்

மவுத்வாஷ்

இதுவும் நம் வீடுகளில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருளாகும். ஷாம்பூவை பயன்படுத்திய பின்னர் ஆல்கஹால் உள்ள மவுத்வாஷைப் பயன்படுத்தி தலையைக் கழுவுங்கள்.பின்னர் உங்கள் வழக்கமான கண்டீசனர் பயன்படுத்துங்கள். இது பொடுகை அழிக்கவும்,தடுக்கவும் சிறந்தது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

வறண்ட கேசத்தை சீரமைக்க தேங்காய் எண்ணெய் பரவலாக பயன்படுத்தபடுகிறது.பலர் இதனை பயன்படுத்தி நிவாரணம் பெற்றுள்ளனர். 3-4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை உங்கள் கையில் எடுத்து அதனை தலையின் தோலில் படுமாறு தேய்த்து ஒரு மணி நேரம் சென்றபின் சுத்தம் செய்யவும். வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்கள். இனை இரவு முழுக்க விட்டுவிட வேண்டாம். ஏனெனில் இது பொடுகை அதிகப்படுத்தும்.

சிடார் மர எண்ணெய்

சிடார் மர எண்ணெய்

இந்த அத்தியாவசிய எண்ணெயின் ஊறல் எதிர்ப்பு பண்புகள் பொடுகை ஒழிப்பதற்க்கும் அரிப்பை தடுக்கவும் சிறந்தது.ஒரு கப் சிடார் மர எண்ணெயுடன் சில துளிகள் லெமன் சாறு சேர்த்து நன்கு கலக்கி தலையில் தேய்க்கவும். இதனை 30-40 நிமிடங்கள் உலரவிட்டு பின் வீரியம் குறைந்த ஷாம்பினால் சுத்தம் செய்யுங்கள். இம்முறையை வாரமிருமுறை செய்யலாம்.

பூண்டு

பூண்டு

இது விடப்படியான பொடுகு செதில் தொல்லையிலிருந்து நிவாரணம் அளிக்கும். பூண்டை அறைத்து பசைபோல் செய்து அதனை தலையின் தோல்பகுதியில் படுமாறு தேய்க்கவும்.பின்னர் 15-20 நிமிடங்கள் கழித்து உங்கள் ஷாம்பூ கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

முட்டை எண்ணெய்

முட்டை எண்ணெய்

இதன் பலம் கொண்ட பண்புகள் பொடுகை ஒழிப்பதற்கு சால சிறந்தது மற்றும் சாதாரணமாக கடைகளில் கிடைக்கூடியது. சில துளிகள் முட்டை ஆயில் எடுத்து ஆலீவ் ஆயில் போன்ற மற்ற கேரியர் ஆயிலுடன் சேர்த்து ஒரு கலவை செய்யுங்கள். இதனை தலையில் தேய்த்து அடுத்த நாள் வீரியம் குறைந்த ஷாம்பூ கொண்டு தலையை சுத்தம் செய்யுங்கள்.இது பொடுகு செதில்களை நீக்கி தலையை சுத்தம் செய்கிறது.

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி

இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை நீக்கவும் மற்றும் தலையை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. ஒரு கப் தண்ணீரில் முல்தானி மெட்டி சேர்த்து பசைபோல் செய்து அதை தலையில் தேய்க்கவும்.30 நிமிடங்கள் கழித்து வீரியம் குறைந்த ஷாம்பூ பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.

வினீகர்

வினீகர்

வினீகரில் உள்ள ஆன்டி-ஃபங்கள் மற்றும் ஆன்ட-பாக்டீரியா பண்புகள் பொடுகை உருவாக்கும் பூஞ்சை மற்றும் மற்ற வேதிப் பொருட்களை நீக்கவல்லது.மேலும் இது பொடுகினால் ஏற்படும் அரிப்பை நீக்கி,சுத்தமான தலை சருமத்தை அளிக்கும்.

மருதாணி மற்றும் நெல்லிக்காய் ஹேர் மாஸ்க்

மருதாணி மற்றும் நெல்லிக்காய் ஹேர் மாஸ்க்

இந்த வீட்டு வைத்திய ஹேர் மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்தி பொடுகில்லா தலை சருமத்தை நிரந்தரமாக பெறலாம். சமபங்கு மருதாணி தூள் மற்றும் நெல்லிக்காய் தூளுடன் லெமன் சாறு மற்றும் டீ தூள் சேர்த்து நன்கு பசைபோல் கலக்குங்கள். இதனை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து வீரியம் குறைந்த ஷாம்பூ கொண்டு சுத்தம் செய்யுங்கள்.இது மருதாணியின் ஆன்டி-பாக்டீரியா பண்புகளை கொண்டிருப்பதால் மாயம் செய்கிற வீட்டுமுறை வைத்தியமாகும்.

மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருளும் எளிதில் கிடைப்பதும் வீட்டிலேயே செய்யக்கூடியதாகும். இவைகளை தொடர்த்து பயன்படுத்துவதனால் வெளிப்படையான சிறந்த தீர்வுகளை ஒரு சில நாள்களிலே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to get rid of dandruff in just one week? / Hair maks and packs

Dandruff is a very common scalp. The main reason for dandruff is dry and irritated oily skin.
Story first published: Monday, July 23, 2018, 12:11 [IST]
Desktop Bottom Promotion