For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களின் இளநரைகளை மறைய செய்யும் வகை வகையான பீட்ரூட் ஹேர் கலரிங்..!

பல ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சினை, பொடுகு தொல்லை, வழுக்கை விழுதல் போன்ற பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் இந்த நரை முடிகள் அவர்களின் இதயத்தை முழுமையாக வருத்தமடைய செய்கிறது.

By Haripriya
|

பெண்களுக்கு முடி என்றாலே அதிக பிரியம்தான். நீண்ட கூந்தல், அடர்த்தியான கூந்தல், வலிமையான கூந்தால், நரைகள் அற்ற கூந்தல் இப்படி பல வகையான விருப்பங்கள் பெண்களுக்கு இருக்கத்தான் செய்யும். பெண்களுக்கு மட்டும்தான் இந்த விருப்பங்களா..? அப்படினு கேட்டால் அது உண்மையாகாது. பெண்களுக்கு எப்படி முடியின் மீது அதீத ஆசையோ, அதே போன்றுதான் ஆண்களுக்கும் தங்களது முடியின் மீது அளவற்ற பிரியம்.

How to Prepare Variety Of Beetroot Hair Dye At Home

பல ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சினை, பொடுகு தொல்லை, வழுக்கை விழுதல் போன்ற பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் இந்த நரை முடிகள் அவர்களின் இதயத்தை முழுமையாக வருத்தமடைய செய்கிறது. இந்த நரை முடி பிரச்சினைக்கு பலவகையான டைகள் பயன்படுத்தி அலுத்து போய்விட்டர்களா..? இனி கவலையை விட்டு தள்ளுங்கள். உங்களுக்கென்றே இந்த வகை வகையான பீட்ரூட் ஹேர் கலரிங் இருக்கிறது. இந்த பதிவில் அவற்றை எவ்வாறு தயார் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறிப்பு #1

குறிப்பு #1

தேவையானவை :-

பீட்ரூட்

வாழை பழம்

ஆலிவ் எண்ணெய்

எலுமிச்சை சாறு

நெல்லிக்காய் பவுடர்

செய்முறை :-

முதலில் ஒரு பாத்திரத்தில் பீட்ரூட், வாழை பழம் ஆகியவற்றை அரைத்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். பிறகு அதனுடன் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 1 எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை தலையில் நன்கு தேய்த்து 2 மணி நேரதிற்கு பிறகு தலையை அலசி விடவும். இந்த குறிப்பு கண்டிப்பாக உங்கள் நரை முடிகளை கலரிங் செய்து மாற்றும். மேலும் இந்த குறிப்பை மாதத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.

குறிப்பு #2

குறிப்பு #2

தேவையானவை :-

பீட்ரூட்

மருதாணி பவுடர்

செய்முறை :-

பீட்ரூட்டை நன்கு அரைத்து சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அதன்பின் 3 டீஸ்பூன் மருதாணி பவ்டரை சேர்த்து கலக்கி கொள்ளவும். 2 மணி நேரம் இதனை ஊற விட்டு, அதன்பிறகு தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். வெதுவெதுப்பான நீரில் தலையை 2 மணி நேரம் கழித்து அலசினால் உங்கள் வெள்ளை முடிகள் மறைந்து போகும்.

குறிப்பு #3

குறிப்பு #3

தேவையானவை :-

பீட்ரூட்

முட்டை

நெல்லிக்காய் பவுடர்

மருதாணி பவுடர்

செய்முறை :-

முதலில் பீட்ரூட் சாற்றை எடுத்து கொண்டு, அதனுடன் 1 முட்டையை நன்கு கலக்கவும். பின் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர், 2 டீஸ்பூன் மருதாணி பவுடர் கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதனை தலைக்கு தேய்த்து 2 மணி நேரம் கழித்து தலையை அலசினால் நரைகள் அற்ற முடிகள் வரும். இந்த குறிப்பை மாதத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.

குறிப்பு #4

குறிப்பு #4

தேவையானவை :-

பீட்ரூட்

காபி டீகாஷன்

டீ டீகாஷன்

மருதாணி பவுடர்

செய்முறை :-

நன்கு அரைத்த பீட்ரூட்டை சாறு பிழிந்து, அதனுடன் 3 டீஸ்பூன் மருதாணி பவ்டரை கலந்து கொள்ளவும். பின் 2 டீஸ்பூன் காபி டீகாஷன், 1 டீஸ்பூன் டீ டீகாஷன் ஆகியவற்றை சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் அதனை தலையில் தடவினால் முடியில் உள்ள வெள்ளைகள் நீங்கும். மேலும் முடி அழகாக கலராக மாறும்.

குறிப்பு #5

குறிப்பு #5

தேவையானவை :-

பீட்ரூட்

மாதுளை

காபி டீகாஷன்

மருதாணி பவுடர்

செய்முறை :-

முதலில் மாதுளை மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை அரைத்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். பிறகு அதனுடன் 3 டீஸ்பூன் மருதாணி பவுடர் சேர்த்து கலக்கவும். கடைசியாக 1 டீஸ்பூன் காபி டீகாஷன் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து தலைக்கு தடவினால் வெள்ளை முடிகள் காணாமல் போய் விடும். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் தலை முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Prepare Variety Of Beetroot Hair Dye At Home

Nowadays, hair products like dyes and colors seem to be filled with chemicals that give you great color, but also cause serious damage to your hair. This is why it may be the time to start considering vegetable hair dyes.
Desktop Bottom Promotion