For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகுத்தொல்லை தாங்கலையா?... அப்போ முட்டையை இப்படி கலந்து தடவுங்க...

நீளமான தலைமுடி என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் அதனைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.

By Kripa Saravanan
|

நீளமான தலைமுடி என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் அதனைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. குறிப்பாக தலைமுடி தொடர்பான பல பிரச்சனைகள் இந்நாட்களில் உண்டாகிறது. தலைமுடி உதிர்வு, தலைமுடி உடைதல், பொடுகு போன்றவை சில முக்கிய பிரச்சனைகளாக பார்க்கப்படுகின்றன. தலைமுடி எண்ணெய்ப்பசை இன்றி வறண்டு போகும்போது, உச்சந்தையில் வெடிப்பு ஏற்பட்டு பொடுகு உண்டாகிறது. இதனால் அரிப்பு தோன்றுகிறது. தலை சீவும்போது, இந்த வெடிப்புகள் சிறு சிறு வெள்ளை செதில்களாகி , முதுகிலும், தோளிலும் விழுகிறது.

beauty

இவை பொதுவாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்த துகள்கள் எண்ணெய் தன்மை உடையதாக இருந்தால், இவை உச்சந்தலையில் ஒட்டிக் கொள்கிறது. உச்சந்தலையில் இந்த துகள்கள் ஒட்டிக்கொள்வதால் இதனை ஓட்டும் தன்மை உள்ள பொடுகு என்று அழைக்கிறோம். குளிர் காலங்களில் பொதுவாக தலைமுடி அதிகமாக வறண்டு காணப்படுகிறது .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொடுகு

பொடுகு

பொடுகு தொந்தரவு உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் தொல்லையும் இருக்கும். இவை இரண்டு பிரச்சனைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை.

பொடுகு ஏற்படப் பல காரணங்கள் உண்டு. பருவ நிலை மாற்றம், உடலில் ஹார்மோன் மாற்றம், தலையை சரியாக அலசாமல் விடுவது , முடி ஈரமாக இருக்கும்போதே பின்னல் போடுவது, உச்சந்தலையில் சீரற்ற pH அளவு , பொடுகால் பாதிக்கப்பட்டவரின் டவலை பயன்படுத்துவது, அல்லது அவருடன் சேர்ந்து உறங்குவது என்று இன்னும் பல காரணிகள் உள்ளன. காரணம் எதுவாக இருந்தாலும், அழகான அடர்ந்த கூந்தலைப் பெற பொடுகு இல்லாமல் கூந்தலை பராமரிக்க வேண்டும்.

இங்கே எளிமையான முறையில் பொடுகைப் போக்க ஒரு தலைமுடி மாஸ்க் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே இதனைப் பின்பற்றி பொடுகைப் போக்கலாம்.

மருதாணி மற்றும் முட்டை பேக்

மருதாணி மற்றும் முட்டை பேக்

தேவையான பொருட்கள் :

3 ஸ்பூன் மருதாணி பவுடர்

1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்

2 ஸ்பூன் முட்டையின் வெள்ளைக் கரு

தண்ணீர் தேவைக்கேற்ப

செய்முறை

மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக கலந்து கட்டியில்லாமல் ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.

தடவும் முறை

முடியின் வேர்கால்களில் இருந்து நுனி முடி வரை இந்த பேஸ்டை தடவவும். அரை மணி நேரம் இந்த பேஸ்ட் உங்கள் முடியில் இருக்கட்டும். பின்பு மிதமான ஷம்பூவால் தலையை அலசவும். இதன் பிறகு வறண்ட தலைமுடி என்றால் தேவைப்பட்டால் கண்டிஷனர் பயன்படுத்தவும் . இல்லையென்றால் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டாம். முட்டையும் மருதாணியும் ஒரு சிறந்த கண்டிஷனர் ஆகும்.

குறிப்பு

குறிப்பு

தலை முடியில் எண்ணெய் தடவி இருந்தால் இந்த பேக்கை பயன்படுத்த வேண்டாம். எண்ணெய் தடவிய முடியில், இந்த மருதாணி பேக் பொடுகைப் போக்க பயன்படாது.

எத்தனை முறை இதனை பின்பற்றலாம்

எத்தனை முறை இதனை பின்பற்றலாம்

பொடுகின் தீவிரத்தைப் பொறுத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இதனைப் பின்பற்றலாம். மருதாணி , தலைமுடியின் வறட்சியை அதிகரிக்கலாம். ஆகவே இதனை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மேலே கூறிய முறைப்படி இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் பொடுகு தொல்லை விரைவில் காணாமல் போகும்.

இந்த பேக்கின் நன்மைகள்

இந்த பேக்கின் நன்மைகள்

இந்த பேக் பொடுகை எதிர்த்து போராடுவதுடன், சேதமடைந்த முடிகளுக்கு மறுவாழ்வைத் தருகின்றது . உச்சந்தலையின் pH அளவை மீட்க உதவுகின்றது ,உங்கள் கூந்தலுக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றது அடர்த்தியான மற்றும் பளபளப்பான முடியைத் தருகின்றது. இது சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது.

இந்த பேக்கில் பயன்படுத்தப்படும் முட்டை, உச்சந்தலையில் உண்டாகும் செதில்களைப் போக்க உதவுகின்றது. ஆகவே பொடுகு எளிதில் மறைகிறது.

ஆலிவ் எண்ணெய் பொடுகைக் குறைக்கிறது, முடி வறட்சியைக் குறைக்கிறது இதன்மூலம் முடியின் வேர்க்கால்கள் வலிமை அடைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது.

மருதாணி எவ்வாறு உதவுகிறது ?

மருதாணி எவ்வாறு உதவுகிறது ?

பழங்காலம் முதல் மருதாணி தலைமுடி பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பலவித நன்மைகள் உள்ளன. மருதாணி, தலைமுடிக்கு ஒரு இயற்கை நிறமூட்டியாக செயல்படுகிறது. தலைமுடி சிகிச்சைகளில் மருதாணி பயன்படுத்தப்படுகிறது.

பொடுகுடன் தொடர்புடைய அரிப்பு போன்ற அறிகுறிகளையும் மருதாணி கட்டுப்படுத்துகிறது. இதனால் தலைமுடி தொற்றுகள் இன்றி ஆரோக்கியமாக வளர்கிறது. தலைமுடியின் pH அளவை மீட்க உதவுகிறது.

மருதாணி தலைமுடியை ஆழமாக கண்டிஷன் செய்து முடி உதிர்வை குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நுனி முடி உடைவதைத் தடுக்கிறது. தலை முடியில் உள்ள துளைகளை திறந்து அழுக்குகளை அகற்ற உதவுகிறது. தலை முடியின் அழகை மீட்டுத் தருகிறது.

முட்டை எவ்வாறு உதவுகிறது?

முட்டை எவ்வாறு உதவுகிறது?

முட்டையில் புரதம் அதிகமாக உள்ளது. தலைமுடியின் வேர்க்கால்கள் புரதத்தால் ஆனது. ஆகவே முட்டை முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது, சேதமடைந்த முடிகளை சீராக்குகிறது, முடியை கண்டிஷன் செய்கிறது, பொடுகை எதிர்த்து போராடுகிறது. முட்டையில் உள்ள புரதம், பயோடின் மற்றும் சல்பர் பொடுகுடன் போராடி , முடியை வலிமை அடையச் செகிறது. மேலும் தலைமுடி பளபளப்பாகவும் மாறுகிறது. முடி உதிர்தலுக்கும் இது சிறந்த தீர்வைத் தருகிறது.

பயோடின் தவிர, முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, வைடமின் டி, மற்றும் போலேட் உள்ளது. இவை எல்லா ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கூந்தலைத் தருகின்றன. தலைமுடிக்கு முட்டையின் மஞ்சள் கருவை தடவுவதன் மூலம், முடி உதிர்வு, முடி உடைதல் போன்ற பிரச்சனைகள் எளிதில் தீர்க்கப்படுகிறது. முட்டையின் மஞ்சள் கரு, முடி சேதமடையாமல் இருக்க உதவுகிறது. வறண்ட தலைமுடிக்கு ஈரப்பதத்தைத் தருகிறது.

முட்டையை தலைமுடியில் தடவுவதால், அதில் இருக்கும் வைட்டமின்கள் தலை முடியின் வேர்கால்களால் உறிஞ்சப்படுகின்றன. அதனால் உங்கள் முடி வலிமை அடைந்து முடி உதிர்தல் தடுக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசு மற்றும் செயற்கை பராமரிப்பு பொருட்களால் தலை முடியில் உள்ள இயற்கை எண்ணெய் மற்றும் புரதம் வெளியேறுகிறது. இதனைத் தடுக்க முட்டை பெரிதும் உதவுகிறது, மேலும் தலை முடிக்கு ஈரப்பதத்தை வழங்கி, முடியின் தன்மையை பலமாக்குகிறது. உச்சந்தலையை கண்டிஷன் செய்து, வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

பொடுகைப் போக்க

பொடுகைப் போக்க

பொடுகு பாதிப்பு அதிகாமாக இருந்தால், தினமும் தலைக்கு பயன்படுத்தும் சீப்பு மற்றும் பிரஷ் போன்றவற்றை கழுவுங்கள், தலையணை உறைகளை தினமும் மாற்றுங்கள். இவற்றை கழுவும்போது கிருமிநாசினிகளை பயன்படுத்திக் கழுவுங்கள்.

பழங்கள், சாலட், முளை விட்ட தானியங்கள் போன்றவற்றைக் கொண்ட ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுங்கள். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின், பயோடின் போன்ற மினரல் அதிகம் உள்ள உணவை உண்ணுங்கள். இதனால் தலை முடி பாதுகாக்கப்பட்டு ஆரோக்கியமாக வளர்கிறது, மேலும் பொடுகு குறைகிறது. தினமும் ஆறு முதல் எட்டு கிளாஸ் அளவு தண்ணீர் குடியுங்கள். சில எளிய உடற் பயிற்சிகளை செய்யுங்கள்.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை உங்கள் தலையை மென்மையான ஷாம்பூ கொண்டு அலசுங்கள். இதனால் உங்கள் தலைமுடி சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்கும். சில நேரங்களில் சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளும் பொடுகிற்கு காரணமாக இருக்கலாம். அந்த நேரத்தில் தயங்காமல் தோல் சிகிச்சை நிபுணரிடம் சென்று அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Egg And Henna Pack To Get Rid Of Dandruff

Dandruff is a common scalp condition, accompanied by consistent dryness and itchiness
Story first published: Thursday, May 31, 2018, 10:15 [IST]
Desktop Bottom Promotion