For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே வாரத்தில் தலை பேனை எப்படி ஒழிக்கலாம்?... எந்த செலவும் இல்லாம...

பேன் என்பது உச்சந்தலையில் வாழும் சிறிய ஒட்டுண்ணிகள். அவை மனித இரத்தத்தை உண்பதோடு கடுமையான அரிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

|

பேன் என்பது உச்சந்தலையில் வாழும் சிறிய ஒட்டுண்ணிகள். அவை மனித இரத்தத்தை உண்பதோடு கடுமையான அரிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

home remedies for headlice in tamil

பேன் பெரியவர்கள் தலையில் மட்டுமில்லாமல் சிரயவர்கள் தலையிலும் தோன்றும். இது குழந்தைகளின் உச்சந்தலையை கடிப்பதோடு எரிச்சலையும் உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைப்பேன்

தலைப்பேன்

தலைப்பேன்கள் மூலம் எரிச்சல் அடைந்தாலும் அது அவர்களுக்கு ஆபத்தானது கிடையாது. மேலும், இது எந்தவொரு தீவிர நோய்களையும் பரப்பாது. பேனை அகற்றுவது என்பது மிக கடினமான ஒன்று. இந்த எரிச்சல் நிலை உங்கள் உச்சந்தலையில் சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும். சாதாரண மருந்துகள் பேன்களை நீக்குவதில் பெரிய விளைவு கொடுக்காது.

இருப்பினும், நமக்கு பல இயற்கை சிகிச்சைகள் உள்ளன. இவை எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் எளிதில் பேன்னை நமது தலையில் இருந்து அகற்ற உதவுகின்றன.

வேம்பு/நீம்

வேம்பு/நீம்

அரிப்பூட்டும் தலைக்கு வேம்பு/நீம் ஒரு மிகச்சிறந்த மருந்தாகும். தலையில் இருந்து பேன்னை முற்றிலும் அகற்றும் ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாக இது செயல்படுகிறது. நீங்கள் பேன் தொல்லையிலிருந்து விடுபட வேப்பிலை அல்லது அத்தியாவசிய வேப்பெண்ணெய் பயன்படுத்தலாம்.

உபயோகிக்கும் முறை

ஒரு கிண்ணத்தில், ஒரு கை வேப்பிலை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்க்கவும். அதை 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதிக்கவிட்ட நீரை அப்படியே இரவு முழுவதுவும் விட்டுவிட்டு மறுநாள் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இதை உங்கள் தலையில் பயன்படுத்தி உங்கள் முடியை கழுவி வர உச்சந்தலையில் வளரும் பேன்களை பேன்கள் அழியும்.

நீங்கள் எஞ்சியிருக்கும் இலைகளை நன்கு அரைத்து எடுத்து உங்கள் முடிக்கு மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம். மாஸ்க் போட்டு 20 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பூ கொண்டு உ ங்கள் முடியை அலசவும்.

பிறகு, உங்கள் முடி ஈரமாக இருக்கும் போதே சீப்பை கொண்டு வாரினால் பேன் குறையும்.

எச்சரிக்கை

வேப்பிலை பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் தடவினால் உங்கள் முடி உலர்ந்துவிடும். எனவே, உங்கள் முடியின் இயற்கை ஈரப்பதத்தை மீட்டெடுக்க நல்ல கண்டிஷனரை பயன்படுத்தவும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஸ்கேல்பில் இருக்கும் பேன் இறப்பதற்கான காரணம், உமிழ்நீர் அவற்றின் சுவாச துளைகளை தடுப்பதே. ஆலிவ் எண்ணெயை இரவு தூங்கும் முன் தடவவேண்டும். ஆனால் பல மணிநேரம் சுவாசிக்காமல் பேன் உயிர்வாழ முடியும் என்பதால் நீங்கள் கண்டிப்பாக ஷவர் கேப் பயன்படுத்தவும். பிறகு பேன்னை அகற்ற நீங்கள் உங்கள் கூந்தலை பேன் சீப்பு பயன்படுத்தி வாரவேண்டும்.

உபயோகிக்கும் முறை

ஒரு சிறிய பாத்திரத்தில் மில்லி 50-100 மில்லி ஆலிவ் எண்ணெய் அல்லது உங்கள் முடி நீளத்துக்கு ஏற்றவாறு எண்ணெயை எடுத்து கொள்ளவும். அதை லேசாக சூடு செய்து அதை உங்கள் ஸ்கேல்பில் தேய்க்கவும். மெதுவாக உங்கள் உச்சந்தலை மசாஜ் செய்து ஷவர் கேப் கொண்டு முடியை மூடவும். அப்படியே இரவு முழுவதுவும் விட்டுவிட்டு மறுநாள் பேன்னை அகற்ற நீங்கள் உங்கள் கூந்தலை பேன் சீப்பு பயன்படுத்தி வாரவேண்டும். நல்ல முடிவுக்கு வாரத்திற்கு இருமுறை இதை செய்யவும்.

எச்சரிக்கை

உச்சந்தலையில் சிகப்பு புடைப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், உங்கள் தலைமுடியை அழுத்தி வாரக்கூடாது.

மயோனீஸ்

மயோனீஸ்

மயோனீஸ்ஸை பேன் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படலாம். பல பயனுள்ள முடிவுகளுக்கு, முழு கொழுப்பு மயோனீஸ்ஸை பயன்படுத்தவும்.

உபயோகிக்கும் முறை

ஒரு கிண்ணத்தில், முழு கொழுப்பு மயோனீஸ்ஸை எடுத்து கொள்ளவும். ஹேர் பிரஷ் பயன்படுத்தி அதை உங்கள் ஸ்கேல்பில் தடவி ஷவர் கேப் போட்டு முடியை மூடி வைக்கவும். இரவு முழுவதுவும் அப்படியே

விட்டுவிட்டு மறுநாள் லேசான ஷாம்பு பயன்படுத்தி உங்கள் முடியை அலசவும். பேன்னை அகற்ற நீங்கள் உங்கள் கூந்தலை பேன் சீப்பு பயன்படுத்தி வாரவேண்டும். இதை இரண்டு அல்லது மூன்று வாரம் தொடர்ந்து செய்தல் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

எச்சரிக்கை

மயோனீஸ் பயன்படுத்துவது ஒரு விருப்பமற்ற வாசனையை ஏற்படுத்தும் அதனால் நீங்கள் கண்டிஷனர் உபயோகிப்பது நல்லது.

வினிகர்

வினிகர்

ஒரு பெண் பேன் அதன் முட்டைகளை முடியில் இணைக்க பயன்படுத்தும் ஒரு ஓட்டும் தன்மை கொண்ட பொருளை அகற்ற வினிகர் உதவுகிறது.

வினிகரில் உள்ள அசிட்டிக் ஆசிட் பேன் சீப்பு பயன்படுத்தி தலை வாரும் போது, பேன்களை அகற்ற மிகவும் உதவுகிறது.

உபயோகிக்கும் முறை

ஒரு கிண்ணத்தில், 25 மில்லி வினிகரை 100ml தண்ணீரில் சேர்க்கவும். இதை பயன்படுத்தி உங்கள் முடியை கழுவவும். ஒரு மணிநேரம் கழித்து உங்கள் தலை முடியை வாரவும். இந்த செயல்முறை ஏற்கனவே இருக்கும் பெண்ணையும் பேன் முட்டைகளையும் அழிக்கவல்லது.

எச்சரிக்கை

வைட் வினிகரை தண்ணீரில் கலக்கி பயன்படுத்தவும். ஏனென்றால் அதை அதிகமாக பயன்படுத்துகையில் அது உ ங்கள் தலை முடியை வறட்சியாக்கும். எனவே நீங்கள் இந்த வீடு வைத்தியம் செய்யும் போது மைல்டு ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது.

பூண்டு

பூண்டு

பூண்டு ஒரு வலுவான வாசனை பெற்றது. அதனால் அது பேன்னை கொல்ல உதவுகிறது. பூண்டில் ஆன்டிபாக்டீரியல், ஆன்டிசெப்டிக், மற்றும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

உபயோகிக்கும் முறை

10-15 பூண்டு பல்லை எடுத்து அதை நன்றாக பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த பேஸ்ட்டில் 2 அல்லது 3 ட்ராப் எலுமிச்சை சாறு விடவும். பிறகு அதை உங்கள் ஸ்கேல்பில் தடவவும். பின்பு வெதுவெதுப்பான நீர் கொண்டு உங்கள் தலையை அலசவும்.

மாறாக நீங்கள், 10-15 பல் பூண்டுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, சமையல் எண்ணெய் மற்றும் ஷாம்பூ சேர்த்து பேஸ்ட் செய்து அதையும் பயன்படுத்தலாம். இதை உங்கள் ஸ்கேல்பில் தேய்த்து பின்பு ஷவர் கேப் போட்டு உங்கள் முடியை மூடிவைக்கவும். இதனை பேன் போகும் வரை வாரத்திற்கு ஒரு முறை செய்யவும்.

எச்சரிக்கை

பூண்டு இயற்கையில் வலுவானது. எனவே, அதை உச்சந்தலையில் பயன்படுத்துவதற்கு முன் அதை டைல்யூட் செய்ய வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த ஈரப்பதமூட்டுகிற முகவராக செயல்படுகிறது. இது மனித இரத்தத்தை உண்ணும் பேன்னை கொல்ல உதவுகிறது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் பேன்னை அதன் வாசனை மூலம் கொல்லக்கூடிய சக்தி கொண்டது. தேங்காய் எண்ணெய் தேய்த்து பேன் சீப்பு போட்டு தலை வாரினால் அது உங்கள் தலையிலுள்ள பேன்னை அகற்ற உதவுகிறது.

உபயோகிக்கும் முறை

ஒரு கிண்ணத்தில் 50 மில்லி தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இதை லேசாக சூடாக்கி உங்கள் ஸ்கேல்பில் மசாஜ் செய்யவும். ஷவர் கேப் போட்டு உங்கள் முடியை மூடி 12 மணிநேரம் அப்படியே விடவும். பிறகு நீங்கள் பயன்படுத்தும் சீப்பில் எண்ணெய் தேய்த்து தலைமுடியை வாரவும். பின்பு மைல்டு ஷாம்பூ பயன்படுத்தி உ ங்கள் தலையை கழுவவும். பிறகு வேறொரு சீப்பை பயன்படுத்தி உங்கள் ஈரமான முடியை வாரவும்.

எச்சரிக்கை

இது முடி வீழ்ச்சி மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கும் என்பதால் கடுமையாக வருவதை தவிர்க்கவும். இது உச்சந்தலையில் சிவப்பு புடைப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.

தேயிலை எண்ணெய்

தேயிலை எண்ணெய்

தேயிலை எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை பூச்சிக்கொல்லியாகும். அதனால் இது உச்சந்தலையில் உள்ள பேன்களை அகற்ற மிகவும் உதவுகிறது. தேயிலை எண்ணெய் மிகவும் வலுவானது என்பதால் நீங்கள் அதை தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும்.

உபயோகிக்கும் முறை

5 மில்லி தேயிலை எண்ணெயை 15 மில்லி ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ளவும். கலந்த எண்ணெயை உங்கள் ஸ்கேல்பில் தேய்த்து மசாஜ் செய்யவும். பிறகு பேன் சீப்பு பயன்படுத்தி லேசாக உங்கள் தலையை வாரினால் பேன்கள் கொட்டிடும். பின்பு ஷாம்பூ பயன்படுத்தி உங்கள் தலைமுடியை அலசி மீண்டும் வேறு சீப்பு உபயோகித்து லேசாக உங்கள் ஈரமான முடியை வாரவும்.

எச்சரிக்கை

தேயிலை எண்ணெயை நேரடியாக பயன்படுத்த வேண்டாம். ஏதேனும் ஒரு கேரியர் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தவும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர் பேன் சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முடியின் தண்டுகளில் அல்லது வேர்களில் ஒட்டக்கூடிய ஓட்டும் பசையை தற்பதன் மூலம் இது பேன்களை அகற்ற உதவுகிறது. மேலும், கேரியர் எண்ணெய்கள் பயன்படுத்துவதன் மூலம் முடியை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

உபயோகிக்கும் முறை

முதலில், உங்கள் தலையை அலச 50ml டைலியூடெட் ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுத்தவும். முடி காயும் வரை அப்படியே விட்டுவிட்டு பிறகு உங்கள் ஸ்கேல்பில் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒரு கேரியர் எண்ணெயை தடவவும். ஷாவர் கேப் போட்டு உங்கள் கூந்தலை மூடி இரவு முழுவதும் அப்படியே விடவும்.

எச்சரிக்கை

ஷாவர் கேப் போடுவதன் மூலம் பேன்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு செத்துவிடும் ஆனால், பேன் முட்டைகள் சாவது கடினம். அதனால் நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை இதை பின்பற்றவும்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயங்களில் இருக்கும் சல்பர் தலையில் இருக்கும் பேன்களை கொல்ல உதவுகிறது. மேலும் பேன்களால் ஏற்படும் அரிப்புகளையும் நீக்கக்கூடியது.

உபயோகிக்கும் முறை

3-4 வெங்காயத்தை எடுத்து அவற்றை நன்கு அரைத்து கொள்ளவும். அறத்தை பேஸ்ட்டை முடியின் வேர்களில் தேய்க்கவும். ஷாவர் கேப் போட்டு உங்கள் கூந்தலை மூடி 8 அல்லது 12 மணிநேரம் அப்படியே விடவும். பிறகு மைல்டு ஷாம்பூ கொண்டு கூந்தலை அலசி பேன் சீப்பு பயன்படுத்தி பேன்களை அகற்றவும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைப் பின்பற்றவும்.

எச்சரிக்கை

நீங்கள் உச்சந்தலையில் அதை பயன்படுத்துவதற்கு முன், வெங்காய பேஸ்ட்டில் எலுமிச்சை சாறு அல்லது நீங்கள் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம்.

அத்தியாவசிய எண்ணெய்

அத்தியாவசிய எண்ணெய்

அத்தியாவசிய எண்ணெய்கள் இரத்தத்தை உண்ணும் பேன்களை அழிப்பதோடு தலையில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யவும் உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டிய வை என்னவென்றால் உங்களுக்கு அல்ர்ஜி இல்லாத அத்யாவசிய எண்ணெயை கண்டறிவதே.

உபயோகிக்கும் முறை

30 மில்லி காய்கறி எண்ணெயுடன் 15 ட்ராப் தைம் எண்ணெய், 10 ட்ராப் எலுமிச்சை சாறு, 10 ட்ராப் ரோஸ்மேரி ஆயில், 15 ட்ராப் லாவெண்டர் ஆயில் மற்றும் 20 ட்ராப் தேயிலை எண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும்.

அவற்றை நன்றாக கலந்து, அதை கொண்டு உங்கள் தலைமுடியை மசாஜ் செய்யவும். ஷாவர் கேப் போட்டு உங்கள் கூந்தலை மூடி அதற்கு மேல் துண்டு போட்டு மூடவும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, உங்கள் தலையை அலசி பேன் சீப்பு போட்டு தலை வாரினால் பேன்கள் அகன்றுவிடும்.

எச்சரிக்கை

இந்த சிகிச்சையில் நீங்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய எண்ணெயால் உங்கள் எந்த அல்ர்ஜியும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சிகிச்சையைச் செய்வதற்கு முன்பு ஒரு பேட்ச் சோதனை செய்வதும் நல்லது.

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி

பெட்ரோலியம் ஜெல்லி பேன்னை அகற்ற ஒரு நல்ல வைத்தியமாக அமைகிறது. இது உச்சந்தலையில் வளரும் பேன் மீது ஒரு மூச்சுத்திணறல் போன்ற விளைவை ஏற்படுத்தும்.

உபயோகிக்கும் முறை

உச்சந்தலையில் நேரடியாக பெட்ரோலிய ஜெல்லியைப் பயன்படுத்துங்கள். ஷாவர் கேப் போட்டு உங்கள் கூந்தலை மூடி இரவில் அதை அப்படியே விட்டு விடுங்கள். அடுத்த நாள், பேபி ஆயில் அல்லது கனிம எண்ணெய் பயன்படுத்தி பேன்களையும் பெட்ரோலியம் ஜெல்லியையும் அகற்றவும்.

எச்சரிக்கை

முடியில் இருக்கும் பெட்ரோலிய ஜெல்லியை நீக்க நீங்கள் நிறைய ஷாம்பூ பயன்படுத்த வேண்டியிருக்கும்.

முட்டை

முட்டை

முட்டையிலுள்ள மஞ்சள் கருவானது தலையில் பேன்களைக் குணப்படுத்துவதற்கு ஒரு சிறந்த தீர்வாகப் பயன்படுகிறது.

உபயோகிக்கும் முறை

இரண்டு முட்டை கருவை சிறுதுளி எலுமிச்சை சாறு மற்றும் 25 மில்லி வைட் வினிகருடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு அடித்துக்கொள்ளவும். இதை நேரடியாக உங்கள் உச்சந்தலையில் பயன்படுத்தலாம். பிறகு வெதுவெதுப்பான நீரில் உங்கள் தலைமுடியை கழுவவும். இந்த தீர்வு உங்கள் தலையில் இருக்கும் பேன்களை அகற்றுகிறது.

எச்சரிக்கை

இந்த தீர்வு உங்கள் முடியை உலர செய்யும். எனவே, லேசான ஷாம்பூவுடன் சிறந்த கண்டிஷனெரி பயன்படுத்துவது நல்லது.

உப்பு

உப்பு

உப்பு தலைப் பேன்னை மூச்சுத்திணறச் செய்வதன் மூலம் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. மேலும் இது தலை அரிப்பையும் போக்கக்கூடியது.

உபயோகிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் கால் கப் வினிகர் மற்றும் கால் கப் உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் ஸ்கேல்பில் தேய்த்து முடி ஈரமாகும் வரை விட்டு பிறகு ஷவர் கேப் போட்டு உங்கள் கூந்தலை மூடியை மூடவும். ஒரு மணிநேரம் கழித்து ஷாம்பூ போட்டு தலையை அலசி நல்ல கண்டிஷனர் பயன்படுத்தவும். இந்த முறையை பேன் போகும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி வரவும்.

எச்சரிக்கை

இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக இந்த கலவையை உங்கள் முடிவில் விட்டு விடாதீர்கள். குறிப்பாக நல்ல கண்டிஷனர் பயன்படுத்தவும்.

விட்ச் ஹேசல்

விட்ச் ஹேசல்

விட்ச் ஹேசல் ஆஸ்ட்ரிஜென்டாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது pH சமநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது பேன்களை அகற்ற ஒரு நல்ல வீட்டு வைத்தியமாக அமைகிறது. இந்த மூலிகையில் ஆன்டி - பாக்டீரியல் பண்பு உள்ளதால் அது உச்சந்தலையில் வளரும் நுண்ணுயிர்களைக் கொல்ல உதவுகின்றன. இதன்மூலம் இது தலைமுடியை பேனில்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

உபயோகிக்கும் முறை

விட்ச் ஹேசல் பல மூலிகை கடைகளில் கிடைக்கிறது. 100 மில்லி தண்ணீரில் 30 கிராம் ஹஜல் பவுடர் சேர்க்கவும். இந்த பேஸ்டை உங்கள் ஸ்கேல்பில் தடவி காயும் வரை அப்படியே விடவும். காய்ந்தவுடன் மைல்டு ஷாம்பூ கொண்டு உங்கள் கூந்தலை அலசவும். பிறகு பேன்களை அகற்ற உங்கள் ஈரமான தலைமுடியை லேசாக பேன் சீப்பு போட்டு வரவும்.

மாற்றாக, நீங்கள் தலையில் பேன்களை அகற்றுவதற்காக ஆர்கானிக் விட்ச் ஹேசல் தண்ணீரும் பயன்படுத்தலாம்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, வாரத்தில் இரண்டு முறை இந்த வைத்தியத்தை செய்யவும்.

எச்சரிக்கை

இது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது தான். இருப்பினும், சென்சிடிவ் ஸ்கின் உடையவர்களுக்கு இது ஸ்கின் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Head Lice

These methods are tried and tested to bring the maximum possible effect for hed lice.
Story first published: Thursday, August 2, 2018, 12:57 [IST]
Desktop Bottom Promotion