For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ம வீ்ட்டு குழந்தைக்கு இப்படி முடி இருந்தா எப்படி இருக்கும்?... அதுக்கு என்னலாம் பண்ணணும்?

இந்த மாதிரியான முடி உதிர்தல் பிரச்சினையிலிருந்து உங்கள் குழந்தையை காப்பாற்ற சில வீட்டு முறைகளை நாங்கள் கூறப் போகிறோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

|

கூந்தல் உதிர்தல் பிரச்சினை என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக் கூடிய விஷயம். அதிலும் சிறு வயதிலேயே கூந்தல் உதிர்தல் என்பது வருத்தத்திற்குரிய விஷயமும் கூட. அமெரிக்க கூந்தல் உதிர்வுக்கான சங்கம் சுமார் 3% குழந்தைகள் இந்த கூந்தல் உதிர்வால் சிகச்சையை நாடுகின்றனர் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.

hair care tips for kids in tamil

Image Courtesy

குழந்தைகளுக்கு கூந்தல் உதிர்தல் ஏற்படக் காரணங்கள்
அலோப்சியா ஐரேட்டா (கொத்தாக முடி இழப்பு), டீனா கேபிட்டிஸ் (தலையில் ஏற்படும் படர்தாமரை), டெலோஜென் எர்ல்ளுவ்யம்(முடி ஒல்லியாகுதல் மற்றும் வெளிரிப் போதல்), ட்ரைச்சோட்டிலோமோனியா(முடி பிடுங்குதல் டிஸ்ஆர்டர்) மற்றும் நாளமில்லா சுரப்பி பிரச்சினைகள், ஊட்டச்சத்து பற்றாக்குறை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதர காரணங்கள்

இதர காரணங்கள்

கெமிக்கல் நிறைந்த ஹேர் பராமரிப்பு பொருட்கள், சூடாக ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது, ஈரமான தலையில் வேகமாக சீப்பை பயன்படுத்துவது, இறுக்கமான சிகை அலங்காரம்.

எனவே இந்த மாதிரியான முடி உதிர்தல் பிரச்சினையிலிருந்து உங்கள் குழந்தையை காப்பாற்ற சில வீட்டு முறைகளை நாங்கள் கூறப் போகிறோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

தினசரி கூந்தல் பராமரிப்பு

தினசரி கூந்தல் பராமரிப்பு

உங்கள் குழந்தையின் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க தினசரி கூந்தல் பராமரிப்பை அவர்களுக்கு பழக்கப்படுத்துங்கள். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை மைல்டு சாம்பு கொண்டு குழந்தையின் கூந்தலை சுத்தப்படுத்துங்கள்.

குழந்தையின் கூந்தலை சுத்தப்படுத்த சூடான நீர் வேண்டாம். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையின் கூந்தல் ரெம்ப சென்ஸ்டிவ் ஆக இருந்தால் குறைந்த சோப்பை பயன்படுத்துங்கள்.

ஈரமான கூந்தலை வாருவதோ அல்லது இறுக்கமாக பின்னுவதோ கூடாது. நன்றாக காயும் வரை விட்டு விடுங்கள். ப்ளோ ட்ரையர் போன்ற கூந்தல் காய வைக்கும் கருவிகளை முடிந்த வரை பயன்படுத்த வேண்டாம்.

ஒரு நாளைக்கு ஒரு முறை சீப்பை கொண்டு தலைவாரினால் போதும்.

கூந்தலை இழுத்து இறுக்கமாக போடப்படும் போனி ஸ்டைல் போன்ற ஹேர் ஸ்டைல்கள் வேண்டாம்.

சூடான எண்ணெய் மசாஜ்

சூடான எண்ணெய் மசாஜ்

சூடான ஆயில் மசாஜ் கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த முறையாகும். எண்ணெய்யை கொண்டு தலையில் மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது. எண்ணெய் முடிக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து கூந்தல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

தினமும் 24 வாரங்களுக்கு தொடர்ந்து 4 நிமிடங்கள் தலையில் மசாஜ் மேற்கொண்டு வந்தால் கூந்தலின் அடர்த்தி அதிகமாகும் என்று 2016 ல் வெளியிடப்பட்ட எப்லாஸ்ட்டி தகவல் தெரிவிக்கிறது.

என்ன எண்ணெய்?

என்ன எண்ணெய்?

தேங்காய் எண்ணெய், பாதாம், ஆலிவ், ஜோஜோபா ஆயில் வேப்ப எண்ணெய் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலை சமஅளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த ஆயிலை லேசாக சூடுபடுத்தவும். வெதுவெதுப்பாக இருந்தால் போதும். இப்பொழுது குழந்தையின் தலையில் ஆயிலை இட்டு நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள் அல்லது இரவு முழுவதும் அப்படியே வைத்து இருங்கள். பிறகு மைல்டு சாம்பு கொண்டு முடியை அலசி விடுங்கள். ஒரு வாரத்திற்கு 2 - 3 முறை இதை செய்யவும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

குழந்தையின் கூந்தல் வளர்ச்சிக்கு நெல்லிக்காய் சிறந்தது. இதிலுள்ள விட்டமின் சி முடி உதிர்தல் பிரச்சினைக்கு உதவுகிறது. மேலும் இதிலுள்ள கரோட்டீன் மற்றும் இரும்புச் சத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

இந்த நெல்லிக்காய் முடி வளர்ச்சியை தூண்டுகிறது என்று 2017 ல் வெளியிடப்பட்ட எவிடன்ஸ் பேஸிடு காம்ப்ளிமென்ட்ரி ஆன்ட் அல்டர்நேட்டிவ் மெடிசன் ரிப்போர்ட் என்ற நாளிதழ் தெரிவிக்கிறது.

சம அளவு லெமன் ஜூஸ் மற்றும் நெல்லிக்காய் சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு காலையில் எழுந்து அலசவும். வாரத்திற்கு ஒரு முறை என இதை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அடுப்பில் தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கவும், அதில் உலர்ந்த நெல்லிக்காய் துண்டுகளை போட்டு நன்றாக அதன் சாறு எண்ணெய் யுடன் கலக்கும் வரை வதக்கவும். பிறகு எண்ணெய்யை மட்டும் வடிகட்டி ஆற விடவும். 30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். இதைத்தவிர தினமும் உங்கள் குழந்தைக்கு நெல்லிக்காய் கொடுங்கள்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

மற்றொரு பாதுகாப்பான முறை என்றால் கற்றாழை ஜெல். கற்றாழை ஜெல்லில் விட்டமின் ஏ, சி மற்றும் இ போன்ற பொருட்கள் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது தலையில் உள்ள pH அளவை சமன் செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

கற்றாழை ஜெல்லில் உள்ள என்சைம் முடி உதிர்வை தடுக்கிறது என்று 2010 ல் வெளிவந்த இரசாயன மற்றும் மருத்துவ நாளிதழ் ஆய்வு தெரிவிக்கிறது.

முடி வளர்ச்சியை தவிர இது கூந்தலுக்கு நல்ல போஷாக்கையும் ஈரப்பதத்தையும் தருகிறது

கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும். பிறகு இந்த ஜெல்லை குழந்தையின் தலையில் தேயுங்கள்.

சில மணி நேரம் அப்படியே வைத்து இருந்து பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு 2-3 முறை என செய்து வாருங்கள்.

செம்பருத்தி

செம்பருத்தி

செம்பருத்தி பூ மற்றும் இலைகள் முடி உதிர்தல் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இதில் உள்ள விட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை முடி வளர்ச்சிக்கு துணை புரிகிறது.

2003 ல் வெளியான எட்னோபார்மகோலஜி இதழில் செம்பருத்தியின் மகத்துவம் வெளியிடப்பட்டுள்ளது. முடி வளர்ச்சிக்கு ஏதுவான ஒரு பொருளாகும்.

7-8 செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை எடுத்துக் கொண்டு அதனுடன் 2 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். இலைகள் மற்றும் பூவில் உள்ள சாறு எண்ணெய்யில் இறங்கும் வரை லேசாக சூடுபடுத்தவும்.

பிறகு எண்ணெய்யை மட்டும் வடிகட்டி ஆற விடவும். இரவில் தூங்குவதற்கு முன்பு இந்த எண்ணெய்யை கொண்டு உங்கள் குழந்தையின் தலையை மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலையில் எழுந்ததும் அலசி விடவும். ஒரு வாரத்திற்கு சில முறை என இதை செய்து வரலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் விட்டமின் பி, சி மற்றும் ஈ மற்றும் இரும்புச் சத்து, புரோட்டீன் போன்ற கூந்தலுக்கு தேவையான போஷாக்குகள் உள்ளன.

இது கூந்தலை மென்மையாக்கி அடர்த்தியாக குகிறது.

தேங்காய் பால் எடுத்து அதை உங்கள் குழந்தையின் தலையில் தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.

பிறகு குளிர்ந்த நீரில் சாம்பு கொண்டு அலசவும். வாரத்திற்கு 2 - 3 முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். மேலும் தேங்காய் பாலை உங்கள் உணவிலும் சேர்த்து கொள்ளுங்கள்.

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர்

ஆப்பிள் சிடார் வினிகர் இரண்டு விதமான முறையில் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

இதன் அல்கலைன் தன்மை நமது உடலில் ஏற்படும் தொற்றை போக்குகிறது. அப்புறம் இதிலுள்ள ஊட்டச்சத்து முடிக்கு போஷாக்குகள் தருகிறது.

2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகருடன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது இதை குழந்தையின் தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.

5 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு சாம்பு கொண்டு தலையை அலசவும். மாதத்திற்கு சில முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயம் உங்கள் குழந்தையின் கூந்தலில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்கிறது.

இதில் லெசிதின் உள்ளது. இது கூந்தலுக்கு வலிமையையும் ஈரப்பதத்தையும் தருகிறது.

வெந்தய விதைகள் ஆன்டி பாக்டீரியல் குணத்தை கொண்டுள்ளது. இது பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் தொற்றை போக்குகிறது.

ஒரு கைப்பிடியளவு வெந்தயத்தை இரவில் ஊற வைத்து விடுங்கள்.

காலையில் எழுந்ததும் அதை மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

இதை குழந்தையின் தலையில் நன்றாக அப்ளே செய்யுங்கள்.

40 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு நீர் கொண்டு அலசவும்.

வாரத்திற்கு 2-3 முறை என இதை செய்து வாருங்கள்.

உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்

குழந்தையின் முடி வளர்ச்சியில் அவர்கள் சாப்பிடும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான ஊட்டச்சத்து உடலுக்கு கிடைக்காவிட்டால் முடி உதிர்தல், குறைந்த முடி வளர்ச்சி போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

2017 ல் வெளியிடப்பட்ட டெர்மட்டாலஜி பிராக்டிகல் & கருத்தாய்வு அறிக்கைகள் கருத்துப்படி முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை முக்கிய காரணம் என்கின்றனர். புரோட்டீன் மற்றும் விட்டமின்கள் போதுமான அளவு இல்லாத தே இதற்கு காரணம். இந்த ஊட்டச்சத்து பற்றாக்குறை பொதுவாக மரபணு கோளாறுகள், உணவு பழக்கம் இவற்றால் ஏற்படலாம்.

எனவே உங்கள் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ அடங்கிய பச்சை காய்கறிகள், ஸ்ட்ரா பெர்ரி, தக்காளி மற்றும் ஆரஞ்சு போன்றவற்றை உணவில் சேருங்கள். இவை தலைமுடியை நன்றாக வைத்துக் கொள்ள உதவும்.

விட்டமின் சி அடங்கிய பழச்சாறுகள் கூந்தல் வலிமையாக இருக்க உதவும்.

கீரைகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற விட்டமின் ஈ அடங்கிய உணவுகளையும் சேருங்கள். விட்டமின் ஈ கூந்தலுக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.

ஜிங்க், இரும்புச் சத்து அடங்கிய பூசணிக்காய், முழு தானியங்கள், ஓட்ஸ், கீரைகள், வெல்லப்பாகு போன்றவற்றை உணவில் சேருங்கள்.

நமது தலைமுடி புரோட்டீனால் ஆனது. எனவே புரோட்டீன் அடங்கிய உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

பயோடின் மாத்திரைகள்

பயோடின் மாத்திரைகள்

பயோடின் ஒரு விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரை. இது குழந்தைகளின் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

முடியின் வளர்ச்சிக்கு காரணமான கரோட்டீன் உற்பத்திக்கு இந்த பயோடின் உதவுகிறது. மேலும் புதிய முடி வளர ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.

எனவே இந்த பயோடின் மாத்திரைகளை மருத்துவ ஆலோசனை பெற்று தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் முடி வளர்ச்சி சீராகும்.

பயோடின் நிறைந்த உணவுகள்

பயோடின் நிறைந்த உணவுகள்

முட்டை, யோகார்ட், பாதாம், நட்ஸ், பருப்பு வகைகள், முழு தானியங்கள், பால் மற்றும் இறைச்சி போன்றவற்றை குழந்தையின் உணவில் சேருங்கள்.

மேலும் பயோடின் அடங்கிய சாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி வாருங்கள்.

டிப்ஸ்கள்

டிப்ஸ்கள்

குழந்தைகள் அடிக்கடி தங்கள் முடியை இழத்து விளையாடுவதை தவிருங்கள். அந்த பழக்கத்தை விட அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

தலைமுடியை பராமரிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்.

அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் முடி இழுபட்டு உடைந்து போவது தடுக்கப்படும். முடியை சுருட்டும் கருவி, காய வைக்கும் சூடான கருவிகளை பயன்படுத்தாதீர்கள்.

சூரிய ஒளி நேரடியாக குழந்தையின் முடிகளில் படுவதை தவிருங்கள்.

உங்கள் குழந்தை முடி உதிர்தல் பிரச்சினையை சந்தித்து வந்தால் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுங்கள். இது சரியாகி விடும் என்று உற்சாகப்படுத்துங்கள். மருத்துவரை அணுகி உடனே அதற்கான தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies for Hair Growth in Children

there are several home remedies for hair growth and fighting hair loss in children.
Story first published: Monday, August 6, 2018, 17:47 [IST]
Desktop Bottom Promotion