உங்களுக்கு சுருட்டை முடியா? சிக்கு அதிகமா விழுதா? இந்த மாஸ்க் போடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான தலைமுடி இருக்கும். அதில் சுருட்டை முடி ஒருவருக்கு நல்ல தோற்றத்தைக் கொடுத்தாலும், சுருட்டை முடியைப் பராமரிப்பது என்பது கடினமான ஒன்று. அது சுருட்டை முடி உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும். சாதாரணமாக தலைமுடியில் சிக்கு ஏற்பட்டால், அதைப் போக்குவதற்குள் எவ்வளவு வேதனையை சந்திப்போம். சுருட்டை முடி உள்ளவர்களுக்கு எப்பவுமே சிக்கு நிறைந்து தான் இருக்கும்.

Hair Masks For Curly Locks

மேலும் சுருட்டை முடி உள்ளவர்களின் தலைமுடி வறண்டு, பஞ்சு போன்று காணப்படும். பெரும்பாலும் இந்த வறட்சியே அவர்களுக்கு தலைமுடியில் சிக்கை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணம் எனலாம். இந்த சிக்கைப் போக்குவதற்கு வெறும் எண்ணெய் மட்டும் போதாது. அவ்வப்போது சுருட்டை முடிக்காரர்கள், ஒருசில மாஸ்க்குகளைப் போட வேண்டும்.

இக்கட்டுரையில் சுருட்டை முடியில் விழும் சிக்கைப் போக்க உதவும் சில ஹேர் மாஸ்க்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை அடிக்கடி பயன்படுத்தினால், முடியில் சிக்கு ஏற்படுவதைத் தடுப்பதோடு, தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாஸ்க் 1: தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய்

மாஸ்க் 1: தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய்

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை ஸ்கால்ப் முதல் தலைமுடியின் நுனி வரை தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

* அதன் பின் ஷவர் கேப் கொண்டு தலையை சுற்றி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலசுங்கள்.

* இந்த மாஸ்க் தலைமுடியில் விழும் சிக்கை போக்குவதோடு, தலைமுடி வறண்டு இருப்பதையும் தடுக்கும்.

மாஸ்க் 2: மயோனைஸ் மற்றும் விளக்கெண்ணெய்

மாஸ்க் 2: மயோனைஸ் மற்றும் விளக்கெண்ணெய்

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை தலையில் நன்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.

* பின்பு 1 மணிநேரம் நன்கு ஊற வையுங்கள்.

* இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலசுங்கள்.

* இந்த மாஸ்க் தலைமுடிக்கு மென்மையை அளிப்பதோடு, சுருட்டை முடியில் சிக்கு விழாமல் தடுக்கும்.

மாஸ்க் 3: ஆலிவ் ஆயில் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

மாஸ்க் 3: ஆலிவ் ஆயில் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் தலைமுடியை பகுதிகளாகப் பிரித்து, இந்த கலவையைத் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

* 40-45 நிமிடம் நன்கு ஊற வைத்த பின்னர், ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலையை அலசுங்கள்.

* இந்த மாஸ்க்கால் தலைமுடியில் உள்ள சிக்கு போவதோடு, பொடுகுத் தொல்லையும் அகலும்.

மாஸ்க் 4: வாழைப்பழம் மற்றும் கற்றாழை ஜூஸ்

மாஸ்க் 4: வாழைப்பழம் மற்றும் கற்றாழை ஜூஸ்

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு பௌலில் வாழைப்பழத்தைப் போட்டு நன்கு மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த கலவையை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.

* 40-45 நிமிடம் நன்கு ஊற வைத்த பின்பு, ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலசுங்கள்.

* அதைத் தொடர்ந்து கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.

* இந்த மாஸ்க்கினால் தலைமுடி மென்மையாவதோடு, முடியில் சிக்கு விழாமலும் இருக்கும்.

மாஸ்க் 5 : வெங்காய சாறு, இஞ்சி மற்றும் பாதாம் எண்ணெய்

மாஸ்க் 5 : வெங்காய சாறு, இஞ்சி மற்றும் பாதாம் எண்ணெய்

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாறு, 1 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை தலையில் தடவி, ஷவர் கேப்பை அணிந்து கொள்ள வேண்டும்.

* 1 மணிநேரம் இந்த மாஸ்க்கை தலையில் ஊற வையுங்கள்.

* இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலசுங்கள்.

* இந்த மாஸ்க்கினால் தலைமுடி வெடிப்பு தடுக்கப்படுவதோடு, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.

மாஸ்க் 6: தேன் மற்றும் அவகேடோ

மாஸ்க் 6: தேன் மற்றும் அவகேடோ

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு பௌலில் அவகேடோ பழத்தின் கனிந்த பகுதியைப் போட்டு நன்கு மசித்துக் கொள்ளுங்கள்.

* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* அதன் பின் அந்த கலவையை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 1 மணிநேரம் ஊற வையுங்கள்.

* இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலசுங்கள்.

* இந்த மாஸ்க்கினால் ஸ்கால்ப் புத்துணர்ச்சி பெறுவதோடு, தலைமுடியும் பொலிவோடு சிக்கு இல்லாமல் இருக்கும்.

மாஸ்க் 7: முட்டை, பால் மற்றும் எலுமிச்சை சாறு

மாஸ்க் 7: முட்டை, பால் மற்றும் எலுமிச்சை சாறு

எப்படி பயன்படுத்துவது?

* ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 3-4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யுங்கள்.

* பின்பு ஷவர் கேப் கொண்டு தலையை சுற்றி, 40-45 நிமிடம் நன்கு ஊற வையுங்கள்.

* இறுதியில் ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் தலையை அலசுங்கள்.

* இந்த மாஸ்க்கினால் தலைமுடியின் மயிர்கால்கள் வலிமையடைந்து, தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியில் சிக்கு ஏற்படாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hair Masks For Curly Locks

If you have curly hair and want to get it to stay perfectly curled then this is all you need to do. Try these amazing homemade ingredients and follow the correct procedure to get that gorgeous curly hair.
Story first published: Thursday, March 1, 2018, 18:33 [IST]