ஈஸ்ட் வாங்கி வச்சுக்கோங்க! வாரம் 2 நாள் யூஸ் பண்ணினா உங்க முடி நீளமா, அடர்த்தியா மாறும்!!

Posted By:
Subscribe to Boldsky

முடிப் பிரச்சனை நிறைய பேருக்கு தொல்லையாகவே இருக்கிறது. 20 களின் இறுதியிலேயே மெதுவாக சொட்டை ஆரம்பித்துவிடுகிறது. மரபணு பிரச்சனையென்ரால் முடி மாற்று சிகிச்சை மட்டும்தான் செய்ய முடியும். வேறு வழியில்லை. ஆனால் பராமரிப்பு இல்லையென்றாலலும் நாளைடவில் சொட்டை விழுந்துவிடும்.

ஆண்களுக்கு சொட்டை விழுவது பிரச்சனையென்றால், பெண்களுக்கு முடி எலிவால் போல் மாறுவதும், நீளம் குறைவதும்தான் பிரச்சனை உண்டாக்குகிறது. முடி குறிப்பிட்ட நீளத்தை தாண்டி வருவதில்லை.

நிறைய பேர் தோள் அளவு முடி வைத்திருப்து ஃபேஷன் என்று நாம் நினைத்தாலும், உண்மையில் அதில் பாதி பேர் முடி வளரவில்லையென்றுதான் அந்த அளவில் முடியை கட் செய்து கொள்கிறார்கள்.

Grow your hair faster with yeast

முடி வளர்ச்சியை தூண்டும் பல பொருட்களை நாம் பயன்படுத்துவதில்லை. அதில் முக்கியமானதுதான் ஈஸ்ட். ஈஸிட்டில் அதிக ஃபோலிக் அமிலம் இருப்பதால், முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அதில்ருக்கும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது நல்ல மாற்றங்கள் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடிக்கு தரும் நன்மைகள்:

முடிக்கு தரும் நன்மைகள்:

ஈஸ்ட்டை மேற்சொன்ன முறைகளில் பயன்படுத்தினால், முடியின் வேர்கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இறந்த செல்களை வெளியேற்றும் தலை சருமத்தை சுத்தப்படுத்தும். முடி உதிர்வை கட்டுப்படுத்தும். துரிதமாக முடி வளரத் தூண்டும்.

ஈஸ்ட் மற்றும் தேன் :

ஈஸ்ட் மற்றும் தேன் :

தேவையானவை :

ஈஸ்ட் - 3 ஸ்பூன்

தேன் - 6 ஸ்பூன்.

செய்முறை :

செய்முறை :

இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். தேவைப்படுமெனில் சிறிது நீர் கலந்து கொள்ளலாம். இதனை தயாரித்த உடன் உடனடியாக பயன்படுத்துதல் முக்கியம். அப்போதுதான் இதன் பலன் அதிகமாக கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

உங்கள் தலைமுடியை ஈரப்படுத்துங்கள். பின்னர் இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 20 நிமிடங்கள் ஊற விடுங்கள்.

அதன் பின் தலைமுடியை அலச வேண்டும். வாரம் இரு முறை செய்தால் முடி நீளமாக வளரும்.

ஈஸ்ட் மற்றும் வினிகர் :

ஈஸ்ட் மற்றும் வினிகர் :

தேவையானவை :

முட்டையின் மஞ்சள் கரு - 2

ஈஸ்ட் - 1 ஸ்பூன்

ஆப்பிள் சைடர் வினிகர் - 1/2 ஸ்பூன்

தேன்- 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

முதலில் முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக க்ரீம் பதத்திற்கு அடித்துக் கொள்ளுங்கள். அதன் பின் ஒன்றன்பின் ஒன்றாக ஈப்பிள்சைடர் வினிகர், தேன், ஈஸ்ட் போன்ற்றவற்றை கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

உங்கள் தலைமுடியை ஈரப்படுத்துங்கள். பின்னர் இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 20 -30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் இரு நாட்கள் செய்து பாருங்கள். டல்லான கூந்தலுக்கு நல்ல சிகிச்சை இது.

ஈஸ்ட் , தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை :

ஈஸ்ட் , தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை :

ஈஸ்ட் - 1 டீஸ்பூன்

கற்றாழை - 4 டேபிள் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

மேலே சொன்ன 3 பொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள். சிறிய மிக்ஸியில் போட்டாலும் க்ரீம் போல் ஆகிவிடும். இதனை இப்போது உபயோகிக்கலாம்.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

முதலில் உங்கள் தலைமுடியை ஈரப்படுத்துங்கள். பின்னர் முடியை ஒவ்வொரு பாகமாக பிரித்து இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் இரு நாட்கள் செய்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Grow your hair faster with yeast

Grow your hair faster with yeast
Story first published: Thursday, January 4, 2018, 14:00 [IST]