For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நரைமுடியை மீண்டும் கருகருவென மாற்றிவிடும் கற்பூரம்... எப்படி பயன்படுத்த வேண்டும்?

|

இளநரையை போக்க கற்பூரத்தை எப்படி பயன்படுத்துவது எனத் தெரியுமா? வாங்க சொல்றேன். சில பேர்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வந்து அழகை கெடுக்க ஆரம்பித்து விடும். அவர்களும் சாயங்கள், டை என்று தங்கள் நரைமுடியை மறைக்க முயன்றாலும் மிஞ்சுவது என்னவோ சிரமமாகத்தான் இருக்கும். ஆமாங்க இயற்கையாக ஏற்பட்ட நரைமுடியை செயற்கையாக மறைப்பது ஒண்ணும் அவ்வளவு சுலபமான காரியமல்ல. எனவே இதற்கு நாம் இயற்கையான வழியைத் தான் நாம் நாடிச் செல்ல வேண்டும்.

hair care tips

இந்த இளநரையை போக்க நிறைய வழிகள் இருந்தாலும் பக்க விளைவுகள் இல்லாத இயற்கை முறை தான் இது. இதை வீட்டில் இருந்த படியே எளிதாக நீங்கள் செய்யலாம். இதற்கு உங்கள் கையில் கற்பூரம் இருந்தால் போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளநரை ஏற்படக் காரணங்கள்

இளநரை ஏற்படக் காரணங்கள்

கெமிக்கல்கள்

நிறைய கெமிக்கல்களை நம் தலைக்கு பயன்படுத்தும் போது நரைமுடி ஏற்படுகிறது. உங்கள் முடியை கலராக்க பயன்படுத்தும் அனைத்து கெமிக்கல்கள் நிறைந்த சாயங்களும் உங்கள் தலை முடியை பாதிக்கின்றன. எனவே கெமிக்கல்கள் கலந்த சாம்பு, ஹேர் டை, ஹேர் கண்டிஷனர் போன்றவற்றை தவிருங்கள்.

உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்

உங்கள் தலைமுடி இளமையிலேயே நரையாக மாற உங்கள் உணவுப் பழக்கமும் ஒரு காரணமாக அமைகிறது. எனவே நீங்கள் உள்ளே ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் தான் வெளியே இளநரை இல்லாத ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும்.

MOST READ: நண்டு யாரெல்லாம் சாப்பிடலாம்? எவ்வளவு சாப்பிடுவது என்னென்ன நன்மை தரும்?

மன அழுத்தம்

மன அழுத்தம்

இளநரை ஏற்பட மற்றொரு காரணம் மன அழுத்தம். எனவே பரபரப்பான வாழ்க்கை முறையை தவிர்த்து மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியாக வாழ வேண்டும். ஜங்க் ஃபுட், ஆல்கஹால் போன்றவையும் இளநரைக்கு முக்கிய காரணம்.

மெலானின் பற்றாக்குறை

மெலானின் பற்றாக்குறை

திடீரென்று தலையில் உள்ள மெலானின் நிறமி உருவாக்கம் தடை பெறுவதால் இளநரை ஏற்படுகிறது. இதுவும் ஊட்டச்சத்து பற்றாக்குறையாலும், போதிய போஷாக்குகள் கூந்தலுக்கு இல்லாததாலும் ஏற்படுகிறது.

தடுப்பது எப்படி?

தடுப்பது எப்படி?

இளநரையை சில வழிகளை நாம் கடைபிடிப்பதன் மூலம் தடுக்கலாம்.

கூந்தலுக்கு பொருத்தமான அதிக கெமிக்கல்கள் இல்லாத சாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல்

இளநரையை மாற்றும் மருத்துவ சிகிச்சையான ரீ பிக்மெண்டேஷன் தெரபி, ஹார்மோன் தெரபி போன்ற முறைகளை மேற்கொள்ளலாம். ஆனால் இவற்றை விட இயற்கையான வழி மிகவும் சிறந்தது.

அப்படி பார்க்கையில் இந்த இளநரையை தடுப்பதில் கற்பூரம் சிறந்த பங்காற்றுகிறது. சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

கற்பூர சிகிச்சை

கற்பூர சிகிச்சை

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

4 செம்பருத்தி பூ

2 கற்பூர துண்டுகள்

MOST READ: வீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டியது லட்சுமி மந்திரங்கள்

செய்முறை

செய்முறை

ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.

தேங்காய் எண்ணெய் சூடானதும் செம்பருத்தி பூ சேர்த்து சில நிமிடங்கள் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

இப்பொழுது கற்பூர துண்டுகளை அதில் சேர்க்கவும்.

சில நிமிடங்கள் இந்த கலவையை ஆற விடுங்கள். ஆறிய பிறகு இதைக் கொண்டு தலையை நன்றாக மசாஜ் செய்யவும்.

இந்த முறையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் இளநரை கூடிய விரைவில் மறைந்தே போய்விடும்.

வேலை செய்யும் விதம்

வேலை செய்யும் விதம்

கற்பூரத்தில் அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி செப்டிக் பொருட்கள் உள்ளன. இவை பேன்கள், முடி உதிர்தல், இளநரை இவற்றிற்கு எதிராக செயல்படுவதோடு கூந்தலுக்கு வலிமை கொடுக்கிறது.

மயிர்க்கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கூந்தல் மென்மையாக ஆரோக்கியமாக பட்டு போல் இருக்க உதவுகிறது.

இந்த எளிய வீட்டு முறையை நீங்கள் மேற்கொண்டு உங்கள் இளநரை க்கு பை பை சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dealing With Grey Hair? Here's How Camphor Can Help!

grey hair is a very big problem. so, we are giving some easy and simple tips for grey hair to turn black. try it.
Story first published: Thursday, September 20, 2018, 12:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more