சொட்டைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில அற்புத வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் கவலைப்படும் விஷயங்களுள் ஒன்று தலைமுடி உதிர்வது. அதற்காக பெண்களுக்கு இப்பிரச்சனை இல்லை என்று நினைக்காதீர்கள். தலைமுடி உதிர்வால் பெண்களை விட ஆண்களுக்கு தான், முடியெல்லாம் கொட்டி சொட்டையாகிறது. இதனால் பல ஆண்கள் இளமையிலேயே முதியவர்கள் போன்று காட்சியளிக்கிறார்கள். இந்த காரணத்தினால் பல ஆண்கள் திருமணமாவதில் பிரச்சனையை சந்திக்கிறார்கள்.

தலைமுடி உதிர்ந்து சொட்டையாவதற்கு மரபணுக்கள் மட்டும் காரணமல்ல, வேறு சில காரணங்களும் உள்ளன. அதில் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது, மன அழுத்தம், பதற்றம் போன்றவைகளும் அடங்கும். பல ஆண்களுக்கு சொட்டைத் தலையே அவர்களது தன்னம்பிக்கையை குறைத்துவிடுகிறது.

Best Herbal Remedies For Hair Loss In Men

சொட்டையை மறைக்க பல ஆண்கள் கடைகளில் விற்கப்படும் பல எண்ணெய்கள், மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்திருக்காது. மாறாக ஆண்களின் மனம் தான் பெரும் வருத்தத்திற்கு உள்ளாகியிருக்கும். ஆனால் அப்படி கண்ட மருந்து, எண்ணெய்களை நம்புவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களால் தலைமுடியைப் பராமரித்தால், இருக்கும் முடியையாவது பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லவா.

அதோடு, இயற்கை பொருட்கள் சொட்டைத் தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே இங்கு சொட்டைத் தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடுகு எண்ணெய் மசாஜ்

கடுகு எண்ணெய் மசாஜ்

* ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடுகு எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அதில் 4 டேபிள் ஸ்பூன் மருதாணி இலைகளை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அந்த எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்து, தினமும் தலையில் தடவி வந்தால், சில வாரங்களில் சொட்டையான இடத்தில் முடியின் வளர்ச்சியைக் காணலாம்.

வெங்காய பேஸ்ட் மசாஜ்

வெங்காய பேஸ்ட் மசாஜ்

வழுக்கைத் தலைக்கு வெங்காயம் சிறப்பான பலனைத் தரும். அதற்கு சொட்டையான இடத்தில் வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தடவி சிறிது நேரம் கழித்து அவ்விடத்தில் தேனை தடவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், வெங்காயத்தில் உள்ள சல்பர் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை தூண்டி, முடியின் வளர்ச்சிக்கு உதவும்.

முட்டை மஞ்சள் கரு

முட்டை மஞ்சள் கரு

ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வர, சொட்டையில் முடி வளர்வதைக் காணலாம்.

தயிர்

தயிர்

2 டேபிள் ஸ்பூன் தயிருடன், 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் அலசுங்கள். இதன் மூலமும் மயிர்கால்களின் வளர்ச்சி தூண்டப்படும்.

வெந்தய மாஸ்க்

வெந்தய மாஸ்க்

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து, தலையில் தடவி 40 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். அதன் பின் தலையை கடுமையாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு 2 முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், தலைமுடி நன்கு வளர்ச்சி பெறும்.

சரிவிகித டயட்

சரிவிகித டயட்

தலைமுடி உதிர்வால் ஆண்களுக்கு ஏற்படும் சொட்டையைத் தடுக்க சரிவிகித டயட்டை மேற்கொள்ள வேண்டும். அதிலும் கனிமச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம் மற்றும் ஜிங்க் நிறைந்த உணவுகளையும், பச்சை இலைக் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். டென்சன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க தியானத்தை தினமும் செய்யுங்கள். குறிப்பாக தலைமுடி ஈரமாக இருக்கும் போது அடிக்கடி சீவ வேண்டாம்.

சீகைக்காய்

சீகைக்காய்

நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காயை 2 லிட்டர் நீரில் போட்டு, பாதியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்நீரில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

திரிபலா

திரிபலா

திரிபலா பொடியை கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி மூன்று முதல் ஆறு மாதம் வரை தொடர்ந்து பின்பற்றி வந்தால், சொட்டையில் முடி வளர்வதைக் காணலாம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

* நெல்லிக்காயை துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளுங்கள். பின் எண்ணெய் குளிர்ந்ததும், கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

* இந்த நெல்லிக்காய் எண்ணெயை தினமும் தலைக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

எலுமிச்சை, நெல்லி

எலுமிச்சை, நெல்லி

எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய் சாற்றினை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்வதால் முடி உதிர்வது நின்று, தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

லெட்யூஸ் மற்றும் பசலைக்கீரை

லெட்யூஸ் மற்றும் பசலைக்கீரை

லெட்யூஸ் மற்றும் பசலைக்கீரையை ஒன்றாக சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரித்து, தினமும் 1/2 லிட்டர் குடித்து வந்தால், ஊட்டச்சத்துக் குறைவால் உதிரும் முடியின் அளவைக் குறைக்கலாம். இதனால் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் தலைமுடி உதிர்வது குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தலைமுடி உதிர்வைத் தடுக்கும் மற்றொரு சிறப்பான பொருள் தான் தேங்காய் பால். தினமும் தேங்காய் பாலால் ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால், முடி ஊட்டம் பெற்று, தலைமுடியின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Herbal Remedies For Hair Loss In Men

Here are some best herbal remedies for hair loss in men. Read on to know more about it...
Story first published: Friday, January 5, 2018, 15:45 [IST]