வாரத்திற்கு 2 முறை இந்த எண்ணெயை பயன்படுத்தினால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று ஏராளமானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. தலைமுடி அதிகம் உதிர்ந்தால், நாளடைவில் அது முடியின் அடர்த்தியைக் குறைத்து, ஒல்லியாக எலி வால் போன்று காட்டும். இது முடியின் அழகையே மிகவும் அசிங்கமாக காட்டும். இதற்கு முக்கிய காரணம் தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறை தான். மன அழுத்தம் ஒருவரது ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, தலைமுடியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த தலைமுடி உதிர்வைத் தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. தலைமுடி உதிர்விற்கு இயற்கை வழிகளை நாடினால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல், தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். பெரும்பாலானோர் தலைமுடி உதிர்வதைத் தடுக்க முதலில் தேடுவது எண்ணெய்களைத் தான். ஏனெனில் எண்ணெய்கள் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று.

Advantages Of Using Castor Oil And Sesame Oil For Treating Hair Loss

இக்கட்டுரையில் தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் அற்புத எண்ணெய் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெயானது பல மருத்துவ பண்புகள் நிறைந்த எண்ணெய்களின் கவலையாகும். அது வேறொன்றும் இல்லை, விளக்கெண்ணெயும், நல்லெண்ணெயும் கலந்த கலவையே. இதில் விளக்கெண்ணெயில் உள்ள புரோட்டீன் தலைமுடியின் ஆரோக்கியத்தையும், நல்லெண்ணெய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இப்போது இந்த எண்ணெய்களின் நன்மைகளையும், தலைமுடி உதிர்வைத் தடுக்கும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்றும் விரிவாக காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளக்கெண்ணெயின் நன்மைகள்

விளக்கெண்ணெயின் நன்மைகள்

பழங்காலம் முதலாக விளக்கெண்ணெய் தலைமுடியின் வளர்ச்சி, பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளக்கெண்ணெயில் ஆன்டி-வைரல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் போன்றவை உள்ளது. இவை ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களைப் போக்கும். மேலும் இந்த எண்ணெயில் உள்ள புரோட்டீன், தலைமுடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமானது.

தொடர்ச்சி...

தொடர்ச்சி...

விளக்கெண்ணெயில் உள்ள ரிசினோலியின் அமிலம், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தலைமுடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அத்துடன் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், தலைமுடிக்கு ஊட்டச்சத்தை வழங்க உதவி, தலைமுடி வறட்சியின்றி, மென்மையாகவும், பட்டுப்போன்றும் வைத்துக் கொள்ளும்.

நல்லெண்ணெயின் நன்மைகள்

நல்லெண்ணெயின் நன்மைகள்

வறட்சியான தலைமுடியைக் கொண்டவர்களுக்கு நல்லெண்ணெய் மிகவும் சிறந்தது. இந்த எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள், தலைமுடிக்கு ஊட்டமளிக்கும். குறிப்பாக இந்த எண்ணெயில் புரோட்டீன்கள், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. அதோடு இதில் மக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும் கனிமச்சத்துக்கள் உள்ளன. முக்கியமாக இந்த எண்ணெய் எளிதில் ஸ்கால்ப்பால் உறிஞ்சி, ஸ்கால்ப் வறட்சியுடன் இருப்பதைத் தடுக்கும்.

தொடர்ச்சி...

தொடர்ச்சி...

ஒருவர் நல்லெண்ணெயை தலைமுடிக்கு அடிக்கடி பயன்படுத்தி வந்தால், இளமையிலேயே நரைமுடி வருவது தடுக்கப்படும் மற்றும் இந்த எண்ணெய் தலைமுடியை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். இதனால் நல்லெண்ணெய் தலைமுடிக்கு ஏற்ற ஆரோக்கியமான எண்ணெயாக கருதப்படுவதோடு, தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும் எண்ணெய்களுள் ஒன்றாகவும் உள்ளது.

தலைமுடி உதிர்வைத் தடுக்கும் விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்

தலைமுடி உதிர்வைத் தடுக்கும் விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்

நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயில் நல்ல அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புரோட்டீன்கள் உள்ளது. இவை வறண்ட தலைமுடியைத் தடுக்கத் தேவையான சத்துக்களாகும். மேலும் இந்த எண்ணெய்களில் நல்ல அளவில் வைட்டமின் ஈ மற்றும் கனிமச்சத்துக்களான மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அதிகம் உள்ளது. இந்த இரண்டு சத்துக்களின் குறைபாடும் ஏற்பட்டால தான், தலைமுடி உதிர்வு ஏற்படும். இங்கு தலைமுடி உதிர்வைத் தடுக்க விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமுடி உதிர்வைத் தடுக்கும் எண்ணெயின் செய்முறை:

தலைமுடி உதிர்வைத் தடுக்கும் எண்ணெயின் செய்முறை:

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயை எடுத்து, மைக்ரோ ஓவனில் சில நொடிகள் வைத்து எடுக்கவும்.

* பின் அந்த எண்ணெயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

* இப்போது தலைமுடி உதிர்வைத் தடுக்க உதவும் எண்ணெய் தயாராகிவிட்டது.

எண்ணெயைப் பயன்படுத்தும் முறை:

எண்ணெயைப் பயன்படுத்தும் முறை:

* முதலில் தலைமுடியை நீரில் நனைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெயை வெதுவெதுப்பான நிலையில் தலைமுடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

* நன்கு மசாஜ் செய்து 5-10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியை தலையில் சுற்றி 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* விருப்பமிருந்தால், இந்த முறையை இரவில் படுக்கும் முன் செய்து, இரவு முழுவதும் ஊற வையுங்கள்.

* பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.

நினைவில் கொள்ள வேண்டியவைகள்:

நினைவில் கொள்ள வேண்டியவைகள்:

* விளக்கெண்ணெய் சிலருக்கு அழற்சியை உண்டாக்கும். எனவே இந்த எண்ணெயைப் பயன்படுத்தும் முன் தலையின் சிறிது பகுதியில் தடவி சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

* விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் கலவை ஈரமான முடியில் தான் நன்கு வேலை செய்யும். எனவே ஈரமான தலைமுடியில் மட்டும் இந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.

இப்போது தலைமுடி உதிராமல் இருப்பதற்கான சில டிப்ஸ்களைக் காண்போம்.

டிப்ஸ் #1

டிப்ஸ் #1

தலைமுடி உதிராமல் இருக்க வேண்டுமானால், புரோட்டீன், நார்ச்சத்து, நல்ல கொழுப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பால், முட்டை போன்ற உணவுப் பொருட்களை அன்றாடம் சாப்பிடுங்கள்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

மன அழுத்தமும் தலைமுடி உதிர்விற்கு காரணம் என்பதால், மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு தியானம், யோகா போன்ற மனதை அமைதியாக்கும் செயல்களில் ஈடுபடுங்கள். முக்கியமாக எப்போதும் சந்தோஷமாக இருங்கள்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

தலைமுடிக்கு கெமிக்கல் அதிகம் நிறைந்த ஹேர் கலரிங் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அவற்றில் அமோனியா இருக்கும். இந்த அமோனியா தலைமுடியை வறண்டு போகச் செய்வதோடு, ஸ்கால்ப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி தலைமுடி உதிரச் செய்யும். தலைமுடியை கலரிங் செய்ய விரும்பினால், மருதாணியைப் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Advantages Of Using Castor Oil And Sesame Oil For Treating Hair Loss

If you are having severe hair loss, then castor oil and sesame oil are said to be the best to treat hair loss problems. Mixing the castor oil and sesame oil together can reduce hair loss to a great extent.
Story first published: Thursday, March 8, 2018, 9:20 [IST]