Latest Updates
-
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
ஆண்களே...! இந்த 8 மூலிகைகள் உங்கள் நரை முடிகளை கருகருவென மாற்றும்...
இப்போதெல்லாம் இதை போன்ற கேள்விகளே அதிகம் நமக்குள் ஓடி கொண்டிருக்கிறது. நரை முடி பிரச்சனை ஏற்படுவதற்கு காரணங்கள் பல உள்ளது. அதிலும் குறிப்பாக உணவு பழக்கங்கள், பரம்பரை ரீதியாக பாதிப்பு, மது பழக்கம், தேவ
இந்த சின்ன வயசிலே இவ்வளவு இளநரையா..? முடிகள் அனைத்தும் வெள்ளையாகி விட்டதா...? நரை முடிகளை நினைத்து மன அழுத்தம் ஏற்படுகிறதா..? இப்போதெல்லாம் இதை போன்ற கேள்விகளே அதிகம் நமக்குள் ஓடி கொண்டிருக்கிறது. நரை முடி பிரச்சனை ஏற்படுவதற்கு காரணங்கள் பல உள்ளது.

அதிலும் குறிப்பாக உணவு பழக்கங்கள், பரம்பரை ரீதியாக பாதிப்பு, மது பழக்கம், தேவையற்ற டைகளை பயன்படுத்துதல் இவையே அதிக அளவிலான காரணங்களாக இருக்க கூடும். இதனை சரி செய்ய பல இயற்கை சார்ந்த வழி முறைகள் உள்ளது. அதிலும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய சில அற்புத மூலிகைகள் நரை முடி பிரச்சனையை எளிதாக சரி செய்கிறது. அவை என்னென்ன மூலிகைகள் என்று இப்போது தெரிந்து கொள்வோம்.

#1 கோதுமை புல் சாறு
கோதுமை புல்லில் வைட்டமின் எ,பி,சி,இ போன்றவை அதிக அளவில் இருக்கிறது. இவை முடியின் கருமை தன்மையை பாதுகாக்கிறது. அத்துடன் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், அமினோ அசீட்ஸ், ஐயோடின் ஆகிய மூல பொருட்கள் முடியை வெள்ளையாக மாற்றும் ஹைட்ரஜன் பேரொக்ஸிட்-டை நீக்கும். இந்த சாற்றை குடித்து வந்தால் நரைமுடியை தடுப்பதோடு முக சுருக்கங்கள், கரும்புள்ளிகள் முதலிய பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும்.

#2 பிரிங்கராஜ்
தலை முடி என்றாலே அதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பிரிங்கராஜ். இந்திய மருத்துவத்தில் இதனை "மூலிகைகளின் ராஜா" என்றே கூறுவார்கள். இதில் உள்ள மருத்துவ குணங்கள் இளநரைகளில் இருந்து காக்கும். மேலும் முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான முடியை கொடுக்கும். உடல் செல்களை சுறுசுறுப்பாக வைத்து, எப்போதும் இளமையாக இருக்க இந்த மூலிகை உதவுகிறது. முடியை மிக மென்மையாக வைக்க இதன் பவ்டரை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தடவுங்கள்.

#3 நெல்லிக்காய்
வைட்டமின் சி அதிகம் நிறைந்த நெல்லி, தலை முடி வெள்ளை ஆவதை முற்றிலுமாக தடுக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் இளநரையை தடுத்து உங்கள் முடிகளை புத்துயிர் பெற செய்கிறது. உடல் உஷ்ணமும் நரை முடிக்கு ஒரு முக்கிய காரணம். நெல்லிக்காய் உடல் சூட்டை குறைத்து சீரான தட்பவெப்பத்தை உடலுக்கு தருகிறது. மேலும் முடி கருகருவென வளரவும், அடர்த்தி அதிகரிக்கவும் நெல்லி பயன்படுகிறது. நெல்லி சாற்றை தினமும் குடித்து வந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.

#4 அஸ்வகந்தா
வெள்ளையாக இருக்கும் முடிகளையும் கருப்பாக மற்றும் தன்மை கொண்டது அஸ்வகந்தா. இந்த மூலிகை, வயது முதிர்ச்சியை தடுக்க கூடியது. மேலும் இளநரைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். இது ஹார்மோன்களை சமமான நிலையில் வைத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாலுடன் 1/2 டீஸ்பூன் அஸ்வகந்தா பவ்டரை கலந்து சாப்பிட்டால் முடி சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமடையும்.

#5 கருப்பு எள்ளு
இது முடிகளின் போஷாக்கை அதிகரிக்க உதவும் மருத்துவ குணம் கொண்ட ஒன்று. கருப்பு எள்ளு சாப்பிடுவதால் முடியின் அடி வேர் உறுதியாக இருக்கும். மேலும் இளநரைகளை வரவிடாமல் பாதுகாக்கும். மேலும் மெலனின் நிறமியை அதிகம் சுரக்க செய்யும். இதனால் முடி எப்போதும் கருமையாகவே இருக்கும். உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரித்து, நரைகளை போக்க வேண்டுமென்றால் இந்த கருப்பு எள்ளை வாரத்துக்கு 2 நல்லது 3 முறை சாப்பிடுங்கள்.

#6 மருதாணி
இயற்கையான முறையில் உங்கள் வெள்ளை முடிகளை கலர் செய்ய விரும்பினால் அதற்கு எளிமையான வழி மருதாணிதான். உங்கள் முடி பொலிவுடன், மினுமினுப்பாக இருக்க மருதாணி பவ்டரை தலைக்கு தேய்த்து குளியுங்கள். அல்லது மருதாணி பவ்டரோடு சிறிது நெல்லி பவ்டரையும் சேர்த்து, தயிரில் 3 மணி நேரம் ஊற வைத்து தடவினால் முடியின் நரையை தவிர்க்கலாம். மேலும் முடி உடைவதையும் இது குணப்படுத்துகிறது.

#7 ரோஸ்மேரி (Rosemary)
இளநரையை கருப்பாக வைக்க உதவும் மூலிகைகளில் ஒன்று ரோஸ்மேரி. நம் முன்னோர்கள் ரோஸ்மேரியை இளநரைகளை போக்க பயன்படுத்தினர். உங்களுக்கு அதிக முடி உதிரும் பிரச்சனை இருந்தால் இந்த மூலிகையை தலையில் தடவி வாருங்கள். ஒரே வாரத்தில் தலை முடி உதிரும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பொடுகு தொல்லை இருந்தால் இதனை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகை போக்கும்.

#8 சீமை சாமந்தி
தலை முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சீமை சாமந்தி ஒரு நல்ல மருந்தாகும். Apigenin என்ற நிறமி இதில் உள்ளதால் நரை முடிகளில் இருந்து உங்களை காக்கும். மேலும் கூந்தலை பொலிவாக இருக்க செய்கிறது. இயற்கையாகவே இது முடி உடைவதை தடுக்கிறது. வறண்ட தலையின் சருமத்தை மென்மையாக வைக்க இந்த பூவை மிதமான நீரில் கொதிக்க விட்டு, பிறகு அதனை வடிகட்டிய தண்ணீரால் தலை முடியை அலச வேண்டும். இவ்வாறு செய்தால் முடி பொலிவடையும்.



Click it and Unblock the Notifications