உடற்பயிற்சி செய்கிறவர்கள் தலைமுடியை பாதுகாக்க என்ன செய்கிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உங்களுடைய ஃபிட்னஸில் அதிக அக்கறை கொண்டு டயட் இருப்பது, பிட்னஸுக்காக ஏரோபிக்ஸ்,ஜும்பா போன்ற நடனப் பயிற்சிகளும் ஜிம் செல்வதும் உண்டு.

ஜிம் செல்கிறவர்கள் சந்திக்கிற முதன்மையான பிரச்சனைகளில் ஒன்று தலையில் அதிகம் வேர்ப்பது. உடலில் இருக்கும் கலோரிகளை எரிக்க வேர்த்து விறுவிறுக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் தலைமுடி??

அதனை அப்படியே விடுவதால் தலையில் அழுக்க சேர்ந்து நாற்றமெடுக்கும், அல்லது தலைமுடி வலுவிழந்து அதிகமாக கொட்டும். அதற்காக தினமும் ஷாம்பு போட்டும் குளிக்க முடியாது. இதனால் தலை சீக்கிரத்திலேயே வறண்டு பொடுகு வருவதற்கும் வாய்ப்புண்டு .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைமுடியை டைட்டாக கட்ட வேண்டாம் :

தலைமுடியை டைட்டாக கட்ட வேண்டாம் :

பெரும்பாலான பெண்கள் உடற்பயிற்சி செய்யும் போது டைட் போனிடெயில் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தலைமுடி பயங்கரமாக டேமேஜ் ஆகிடும்.

டைட்டாக போனிடெயில் போடுவதை விட லூஸாக ஹேர் லாக் செய்வது தான் நல்லது.

ஹெட் பேண்ட் :

ஹெட் பேண்ட் :

அதிக வியர்வை தரும் வேலைகளை செய்யும் போது, குறிப்பாக் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது ஹெட் பேண்ட் பயன்படுத்துவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

தலையில் சுரக்கும் வியர்வையை அந்த துணி உறிந்துவிடும். அதேபோல முடி முகத்திற்கு விழாமல் தடுத்திடும்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் :

வியர்வையை உறியும் அதே சமயம் தலைக்கு அதிக வறட்சியை கொடுக்காது தேங்காய் எண்ணெய். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னால் சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து முடியின் வேர்கால்களுக்கு படுமாறு லேசாக மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

இது வியர்வையினால் ஏற்படும் பாக்டீரியாக்களை தடுத்திடும்.

டவல் :

டவல் :

உடற்பயிற்சி முடிந்ததும் முகத்தை,கை,கால்களை துடைக்க டவல் பயன்படுத்துவது போல தலைமுடிக்கும் டவல் பயன்படுத்துங்கள்.

இது தலையில் இருக்கும் வியர்வையை உறிந்திடும். ஈரப்பதம் கொஞ்சம் நீக்கப்படுவதால் வியர்வை நாற்றம் தவிர்க்கப்படும்.

ஷாம்பு :

ஷாம்பு :

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே தலையை ஷாம்பு போட்டு தலைக்குளித்தால் போதும். பிறநாட்களில் வெறும் நீரைக்கொண்டு தலையை அலசலாம்.

தலைக்கு தினமும் ஹேர் ட்ரையர் போடுவதையும் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to workout without hair damage

Tips to workout without hair damage
Story first published: Wednesday, September 13, 2017, 16:34 [IST]
Subscribe Newsletter