ஆண்களே! கோடைக்காலத்தில் தலைமுடி அதிகம் உதிராமல் இருக்க, இத ஃபாலா பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலும் கோடைக்காலத்தில் சருமத்திற்கு தான் அதிக பராமரிப்புக்களையும், பாதுகாப்பையும் கொடுப்போம். ஆனால் சருமத்தைப் போன்றே தலைமுடியும் சூரியக்கதிர்களால் பெரிதும் பாதிக்கப்படும். எனவே சருமத்திற்கு கொடுக்கும் அதே அளவு பராமரிப்பை, தலைமுடிக்கும் கொடுக்க வேண்டியது அவசியம்.

Summer Hair Care Tips For Men

குறிப்பாக ஆண்கள் தான் வெயில் என்றும் பாராமல் ஊர் சுற்றுவார்கள். இதனால் பெண்களை விட ஆண்கள் கோடைக்காலத்தில் அதிக தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களுக்கான சில கோடைக்கால தலைமுடி பராமரிப்பு டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

கோடைக்காலத்தில் ஆண்கள் குட்டையாக தலைமுடியை வைத்துக் கொள்வதன் மூலம், தலையை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் ஷாட் ஹேர் கட் செய்வதால், ஸ்கால்ப்பை சுத்தமாகவும், அதிக வியர்வையினால் தலையில் நீர்கோர்ப்பதையும், சளி பிடிப்பதையும் தடுக்கலாம்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

கோடையில் அதிகமாக வியர்ப்பதால், தலையில் அழுக்குகள் அதிகம் தேங்கும். எனவே கோடைக்காலத்தில் தினமும் தலைக்கு குளிப்பதன் மூலம், ஸ்கால்ப்பை சுத்தமாகவும், தலைமுடியை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக இக்காலத்தில் சீகைக்காய் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

கோடைக்காலத்தில் ஆண்கள் நிறைய பேர், உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள நீச்சல் குளத்திற்கு அடிக்கடி செல்வார்கள். ஆனால் நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின் அதிகம் உள்ளதால், தலைமுடி அதிக வறட்சியடையும். இதனைத் தவிர்க்க, ஸ்விம்மிங் கேப் அணிந்து கொள்ளுங்கள்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

கோடையில் எப்படி தினமும் தலைக்கு குளிக்க வேண்டியது அவசியமோ, அதேப் போல் தலைக்கு எண்ணெயை அதிகம் வைக்கவும் வேண்டும். இதனால் ஷாம்புவால் ஸ்கால்ப் அதிகம் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, மயிர்கால்களுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். மேலும் எண்ணெய் வைப்பதால், உடல் சூடு தணியும்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

பலரும் சருமத்திற்கு மட்டும் தான் சன் ஸ்க்ரீன் என்று நினைக்கின்றனர். ஆனால் அது தலைமுடிக்கும் சிறந்தது. எனவே நல்ல தரமான சன் ஸ்க்ரீன் லோசனை வாங்கி, ஸ்கால்ப்பிலும் தடவுங்கள்.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

கோடை வெயிலில் சுற்றும் போது, சூரியனின் புறஊதாக் கதிர்களிடமிருந்து தலைமுடியைப் பாதுகாக்க தொப்பி அணிந்து கொள்ளுங்கள். இது சூரியனின் நேரடி தாக்கத்தைக் குறைக்கும். முக்கியமாக இறுக்கமாக இருக்கும் தொப்பியைப் பயன்படுத்த வேண்டாம். இது தலைமுடியை அதிகம் உதிரச் செய்யும்.

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

கோடையில் ஹேர் கலரிங் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டாம். இது தலைமுடிக்கு தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உங்கள் தலை முடிக்கு ஏற்ற தலைமுடி பராமரிப்பு பொருட்களை மட்டும் பயன்படுத்துங்கள்.

டிப்ஸ் #8

டிப்ஸ் #8

கோடைக்காலத்தில் சீப்பை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் மற்றும் தலைமுடியை சூடேற்றும் எந்த ஒரு பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம். இது முடிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Summer Hair Care Tips For Men

Here are some useful hair care tips for men that ensure the best hair care in summer. Read on to know more...
Story first published: Monday, April 10, 2017, 11:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter