தலைமுடிக்கான இயற்கை கண்டிஷ்னர்! செய்வது எப்படி?

Written By:
Subscribe to Boldsky

தலைமுடி அழகாகவும், பளபளப்பாக இருந்தால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். தலைமுடி அவ்வாறு பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க, தலைக்கு குளித்த உடன் முடிக்கு கண்டிஸ்னர் பயன்படுத்த வேண்டியது அவசியம். அவ்வாறு நீங்கள் பயன்படுத்தும் கண்டிஸ்னர் ஆனது இயற்கையானதாக இருந்தால், கூடுதல் பலனும் தலைமுடிக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். இந்த பகுதியில் தலைமுடியை வலிமையாக்கும் சில கண்டிஸ்னர்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை முடியை மென்மையாக்கும். அதனுடன் தேன், கிளிசரின் மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து தலைமுடிக்கு உபயோகிக்கலாம். இக்கலவையை தலைமுடியில் தடவி 30-45 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் மையில்டு ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.

தேன்

தேன்

தேன் முடிக்கு பளபளப்பை தரக்கூடியது. இது முடியில் உள்ள வறட்சியை போக்குகிறது. இதில் பல சத்துக்கள் உள்ளன. கால் பங்குச் தேனுடன் அதே அளவில் கண்டிஷனரைக் கலக்கவும். இதனை தலைக்கு தடவி, வேர்ப்பகுதி முதல் முடியின் நுனிப்பகுதி வரை நன்றாக மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

அவகேடோ

அவகேடோ

அவகேடா பழம் தலைமுடிக்கு மிகச்சிறந்த ஒன்றாகும். அவேகேடாவை நன்றாக மசித்து, தேங்காய் பால் மற்றும் ஆலிவ் ஆயிலுடன் கண்டிஸ்னர் பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இதனை பிரிட்ஜில் வைத்து, ஒவ்வொரு முறையும் கண்டிஸ்னராக பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மிகவும் சிறந்தது என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒன்றாகும். ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயையு ம் தேனையும் கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி அதனுள் வைக்கவும். அந்த கலவை சூடாகும் வரை சிறிதுநேரம் வைக்கவும். பின்னர், குளித்து முடித்தவுடன், ஈரம் வடிந்த தலை முடியில் ஊற்றவும். 20 நிமிடங்கள் ஊறிய பின்னர் அலசவும்.

வினிகர் அலசல்

வினிகர் அலசல்

ஆப்பிள் சீடர் எனப்படும் வினிகர், ஒரே சமயத்தில் தலைமுடியை சுத்தம் செய்வது மட்டுமல்லாது, pH அளவையும் சமப்படுத்துவதால், இது மிகச்சிறந்த ஹேர் கண்டிஷனர் ஆகும். 2 கப் தண்ணீருடன் வினிகர் சேர்த்து தலை முடியில் தடவி 20-30 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.

தலையில் தடவிய பின்பு 4-5 முறை விரல்களால் கோதி விடுங்கள். குளிர்ச்சியான தண்ணீர் விட்டு அலசுங்கள். இது முடியை கண்டிஷனிங் செய்வது மட்டுமல்லாது, இரசாயனப் பொருள் மற்றும் தலையில் போகாமல் இருக்கும் ஷாம்பு / கண்டிஷனரை நீக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

natural hair conditioner

natural hair conditioner
Story first published: Saturday, September 16, 2017, 9:35 [IST]
Subscribe Newsletter