நீண்ட வளமான கூந்தலுக்கு தேனை எப்படி பயன்படுத்தலாம்!

Written By:
Subscribe to Boldsky

இன்றைய பிஸியான காலகட்டத்தில், நாம் ஆரோக்கியத்தை பற்றி கவலை பட மறந்துவிடுகிறோம். ஆண்கள் பொதுவாக தங்களது அழகில் பெண்கள் அளவுக்கு ஈடுபாடு காட்டுவதில்லை.

இதனால் நாளடைவில் முடி உதிர்தல் பிரச்சனை உண்டாகிவிடுகிறது. எனவே வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது தங்களது அழகை பாதுகாப்பதற்காகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி பாதிப்படைய காரணம்

முடி பாதிப்படைய காரணம்

ஹேர் கலரிங் செய்வது, காற்று மாசுபடுதல், தண்ணீர், கெமிக்கல்களை முடிகளுக்கு உபயோகிப்பது போன்றவை முடிகளை வறட்சியடையச் செய்கின்றன. முடிகளில் வெடிப்புகளை உண்டாக்கி, கூந்தலின் ஆரோக்கியத்தை கெடுக்கின்றன.

1. யோகார்ட் மற்றும் தேன்:

1. யோகார்ட் மற்றும் தேன்:

யோகார்ட் தலைமுடியை மென்மையாக வைக்க உதவுகிறது. இதில் புரோட்டின் அதிகளவில் உள்ளது. தேன் முடிக்கு மென்மையளிக்கிறது. இது பொலிவிழந்த முடிக்கு பொலிவை கொடுக்கிறது. மேலும் முடி உதிர்வை குறைக்கிறது.

தயாரிப்பது எப்படி?

தயாரிப்பது எப்படி?

தேவையானவை :

2 டேபிள் ஸ்பூன் தேன்

4 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

செய்முறை:

தேன் மற்றும் யோகார்ட்டை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிரஸ் அல்லது கையால் தடவி தலைமுடிக்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த மாஸ்க்கை 30 நிமிடங்கள் அப்படியே வைத்து தலைமுடியை அலசி விட வேண்டும்.

2. தேன் மற்றும் முட்டை

2. தேன் மற்றும் முட்டை

முட்டையில் அதிகளவு புரோட்டின் அடங்கியுள்ளது. புரோட்டின் தலைமுடிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதனால் தான் முட்டை தலைமுடிக்கு மிகச்சிறந்த மாஸ்க்காக இருக்கிறது. தேன் முடியை மிருதுவாக்கி முடியை மினுமினுப்பாக்குகிறது.

தயாரிப்பது எப்படி?

தயாரிப்பது எப்படி?

தேவையானவை

1. 1 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்

2. 3 டீஸ்பூன் தேன் ( இயற்கையான தேன்)

3. 2 முட்டை

செய்முறை

முட்டைகளையும் எண்ணெய்யையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மெதுவாக தேனை அதில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். முடியை கவர் செய்து 60 நிமிடங்கள் கழித்து, மைல்ட் ஷாம்புவினால் முடியை முட்டை வாசம் போகுமாறு கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get super silky hair using Honey

How to get super silky hair using Honey