For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைவலியா இருக்கா? உங்க லவ்வரோட கைய கொஞ்ச நேரம் பிடிச்சுகங்க! தீராத வலி எல்லாம் தீரும்!

துணையின் கரங்களை பிடித்தால் தீராத வலியும் தீரும்

By Lakshmi
|

நமது அன்றாட வேலைகளாலும், மன அழுத்தம் காரணமாகவும் நமக்கு உடல் வலி மற்றும் தலைவலி ஏற்படலாம். இது நம்மை மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளிவிடும். சிலருக்கு டென்ஷன் ஆனாலே தலைவலி வந்து விடும்...

Holding Hands With Your Partner Can Help Get Rid of Your Headache

மற்றும் சிலருக்கு யாராவது பிடிக்காத விஷயத்தை பத்தி பேசுவதை கேட்டாலும் தலைவலி வந்துவிடும். இந்த உடல் மற்றும் தலைவலியை எப்படி போக்குவது என்பதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலி நிவாரணிகள்

வலி நிவாரணிகள்

நமக்கு உடல் வலி வந்தால் உடனடியாக கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணிகளை வாங்கி பயன்படுத்துவோம். இந்த பாட்டில்களில் கிடைக்கும் வலி நிவாரணிகளை வாங்கி பயன்படுத்துவது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே வலிநிவாரணிகளை அதிகம் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுவதில்லை.

துணையின் கைகள்!

துணையின் கைகள்!

உங்களுக்கு மன அழுத்தத்தினால் தலைவலி மற்றும் உடல் வலி இருந்தால் உங்களது துணையின் கைகளை பிடித்துக்கொள்வது சிறந்த தீர்வாக அமையும். கைகளை பிடித்துக்கொள்வது எப்படி சிறந்த தீர்வாக அமையும் என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு பிடித்தமானவர்களின் கரங்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை.

எப்படி சாத்தியம்?

எப்படி சாத்தியம்?

ஒருவரின் சருமத்தின் மீது மற்றொருவரின் சருமம்படும் போது ஏராளமான வியக்கத்தக்க மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால் தான் நீங்கள் உங்களது துணையின் கைகளை பிடிக்கும் போது உங்களது மனதிற்கும் உடலுக்கும் இதம் கிடைக்கிறது. எனவே வலிகள் பறந்து போகும்.

எப்படி செய்ய வேண்டும்?

எப்படி செய்ய வேண்டும்?

உங்களது துணையின் கைகளை பிடித்துக்கொண்டு ஒரு அமைதியான புல்வெளியில் நடைபோடுங்கள். இவ்வாறு செய்வதால் உங்களது இருதய துடிப்பில் வேறுபாடு தெரியும். வலிகளில் இருந்து நிவாரணம் கிடைத்து மனம் லேசாவதை உணர்வீர்கள்.

உயிரை கூட காப்பாற்றும்

உயிரை கூட காப்பாற்றும்

இறந்து பிறந்த குழந்தை ஒன்று தனது தாயின் மார்சூட்டினால் உயிர் பெற்றுள்ளது. இது போன்ற பல மாயங்கள் சருமத்துடன் சருமம் சேர்வதால் உண்டாகியுள்ளது. இது கட்டிப்பிடி வைத்தியத்தின் ஒரு வகை என்று கூட சொல்லலாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Holding Hands With Your Partner Can Help Get Rid of Your Headache

Holding Hands With Your Partner Can Help Get Rid of Your Headache
Desktop Bottom Promotion