சொட்டைத் தலைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்!!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

முடி கொட்டுவது என்பது ஒரு சாதாரணமான விஷயம் தான் . ஆண் பெண் என இருவருக்கும் முடி கொட்டும். ஆனால் வழுக்கை என்பது ஆணுக்கு மட்டுமே பெரும்பாலும் ஏற்படுகிறது. முடி கொட்ட ஆரம்பித்த சில வருடங்களில் அதாவது குறைந்த பட்சம் 5 வருடங்களில் வழுக்கை ஏற்படுகிறது. சில காலங்களுக்கு முன்பு 50 வயதை தாண்டி தான் இந்த வழுக்கை தொந்தரவு ஏற்படும். இன்றைய கால கட்டத்தில் 30களின் இறுதியிலேயே வழுக்கை ஏற்பட தொடங்கிவிடுகிறது.

ஆண்களுக்கு குறிப்பாக இந்த பிரச்சனை ஏற்படுவது பலவேறு காரணங்கள் இருக்கலாம். கவலை, மன அழுத்தம், மரபுக் குறைபாடு என அதிகம் பாதிக்கபப்டுவது ஆண்கள்தான்.

hair transplantation is only permanent solution for baldness

இந்த வழுக்கைக்கு தீர்வு என்று பல இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள் கூறி வந்தாலும் அவை முற்றிலும் பலன்களை தருவதில்லை. எதை தின்னால் பித்தம் தணியும் என பலர் சொல்ல நிறைய உபயோகித்து, இருப்பதும் போச்சுடா என பலரும் கவலை கொள்ளும்படி ஆயிற்று.

சொட்டை தலைக்கான காரணங்களை கண்டுபிடிக்க தகுந்த ட்ரைகாலஜிஸ்டை அணுகி அவர்கள் மூலமாக என்ன மாதிரியான பிரச்சனை என கண்டறிய வேண்டும். அதன் பின் அதற்கான வழிகளை தேடுவதே சிறந்தது.

உச்சந்தலையில் இருக்கும் முடியின் வேர்க்கால்கள் செயலற்று போகும் நிலை வரும்போது வழுக்கை தோன்றுகிறது. அந்த செயலாற்ற நிலை ஏற்படுவதற்கு முன்பு வரை முடி கொட்டுவதும் வளர்வதும் இயல்பாக நடந்து கொண்டு இருக்கும். வேர்க்கால்களில் செயலற்ற நிலைக்கு நமது பாரம்பரியமும் ஒரு காரணம்.

hair transplantation is only permanent solution for baldness

சிகிச்சைப் பெற்ற பிரபலங்கள் :

வழுக்கைக்கு பல வித சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவற்றுள் ஒன்று ஹேர் ட்ரான்ஸ்பிளண்டஷன் என்னும் முடி மாற்று அறுவை சிகிச்சை, பல பிரபலங்கள் தற்போது இந்த சிகிச்சையை மேற்கொண்டு அழகான முடி வளர்ச்சி பெற்றுள்ளனர். அமிதாப் பச்சன் , சல்மான் கான், அர்விந்த் ஸ்வாமி, கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் போன்றோர் இந்த பட்டியலில் உள்ளனர். முடி மாற்று அறுவை சிகிச்சை பற்றிய பதிவு தான் இது. தொடர்ந்து படியுங்கள்!

இதனால் பக்கவிளைவுகள் ஏதுமில்லை. ஆனால் கொஞ்சம் காஸ்ட்லியான மருத்துவ சிகிச்சை என்பதால் தீர ஆராய்ந்து நல்ல மருத்துவ மனைகள் மற்றும் ட்ரைகாலஜிஸ்ட் பற்றி வபரங்களை சேகரித்து அதன் பின் உங்கள் சிகிச்சைகளை தொடர்வது முக்கியம்.

முடி மாற்று சிகிச்சை :

முடி மாற்று அறுவை சிகிச்சையில் உடலில் மற்ற பகுதியில் இருக்கும் முடிகளை எடுத்து வழுக்கை ஏற்பட்ட பகுதிகளில் பொருத்துவர். இந்த வகை முடிகள் பாரம்பரிய முறையில் வழுக்கையை ஏற்படுத்த முடியாது. ஆகவே இந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக தோன்றுகிறது. முடி கொட்டுவதில் இருந்து நிரந்தர தீர்வை தருகிறது. முடி மாற்று அறுவை சிகிச்சை என்பது முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்க கடைசி தீர்வாகும்.

முடி மாற்று அறுவை சிகிச்சை வாழ்நாள் முழுவதும் நீடித்து நிற்கும் தன்மை கொண்டது. ஒரு சிலருக்கு தான் சிகிச்சைக்கு பின்னரும் முடி கொட்டுதல் பிரச்சனை இருந்து வருகிறது. அதுவும் மிக குறைந்த அளவு முடியே கொட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இந்த சிகிச்சை ஒரு நிரந்தர தீர்வாக கருதப்படுகிறது.

நமது உடலில் உள்ள முடிகளையே எடுத்து பயன்படுத்தும் நுட்பம் பயன்படுத்தப்படுவதால் உடல் இதை ஏற்று கொள்ளாமல் இருக்க குறைந்த அளவு சாத்திய கூறுகளே உள்ளது. ஆகவே இந்த சிகிச்சை முறை பாதுகாப்பானதாகவும் இருக்கிறது . பொதுவாக கழுத்து பகுதி, முதுகு பகுதி அல்லது தலையின் இரு பக்கங்களில் இருக்கும் முடிகள் தான் சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த பகுதியில் இருக்கும் முடியை வேர்கால்களுடன் எடுத்து வழுக்கை இருக்கும் பகுதியில் பொருத்துகின்றனர். வெளிப்புற காரணிகள் எதுவும் பயன்படுத்தப்படாத காரணத்தால், உடல் இந்த சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்கிறது.

hair transplantation is only permanent solution for baldness

கூடுதல் சிகிச்சை:

இது ஒரு நிரந்தர சிகிச்சை முறையாக இருந்தாலும் சில காலங்களுக்கு கொஞ்சம் கவனிப்பு தேவைபடுகிறது. அறுவை சிகிச்சை செய்யாத இடங்களில் முடி உதிர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆகையால் அந்த இடங்களுக்கு பராமரிப்பு அவசியம். அவ்வப்போது அறுவை சிகிச்சை அல்லாத முறைகளில், லேசர் , ரோகன் போன்ற கூடுதல் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த தீர்வு நிரந்தரமாக்கப்படுகிறது. இந்த கூடுதல் சிகிச்சையின் மூலம் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட முடியின் வேர்க்கால்கள் பலமாகின்றன. மேலும் மற்ற முடியின் வேர்கால்களும் வலிமையாகி முடி கொட்டுதல் அறவே தடுக்கப்படுகிறது.

வழுக்கைக்கு பிற காரணங்கள் :

மரபணு தவிர பிற காரணங்களான மன அழுத்தம், வேலைப் பளு, மற்றும் உபயோகிக்கும் ரசாயனம் மிகுந்த ஷாம்பு போன்றவற்றாலும் உங்கள் முடி வலுவிழந்து நாளைடைவில் சொட்டைத் தலையாகலாம். அந்த சமயத்தில் நீங்கள் இயற்கை முறையில் முயர்சி செய்யலாம். வெங்காயம், புரத உனவுகள் சொட்டை விழுந்த இடங்களில் மீண்டும் முடி வளர்க்கச் செய்யும் ஆற்றல் உண்டு.

இதில் முக்கியமான தெரிந்து கொள்ள வேண்டியது நம்பகமான மருத்துவமனை மற்றும் தரமான சிகிச்சை முறைகளைப் பற்றி தீர ஆராய்ந்து அதன் பின்னரே நீங்கள் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பணமும், நேரமும் விரயாமாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வேலை பளுவாலும், மன அழுத்தத்தாலும், தலை முடியை சரிவர பராமரிக்காமல் முடி உதிர்ந்தால், இனி கவலையை விடுங்கள். இருக்கவே இருக்கிறது முடி மாற்று அறுவை சிகிச்சை. நீங்களும் சல்மான் கான் ஆகலாம்!

English summary

hair transplantation is only permanent solution for baldness

hair transplantation is only permanent solution for baldness
Story first published: Wednesday, October 11, 2017, 21:00 [IST]