வியர்வையினால் தலை ரொம்ப அரிக்குதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

கோடைக்காலத்தில் எப்போதுமே அதிகமாக வியர்வை வெளியேறும். அதுவும் குளித்து முடித்து உடுத்திய உடை 1 மணிநேரத்திலேயே மீண்டும் ஈரமாகும் அளவில் கோடைக்காலத்தில் அனல் அதிகமாக இருக்கும். அதிலும் அக்னி நட்சத்திர நாட்கள் மிகவும் கொடுமையாக இருக்கும்.

Hair Care Tips To Prevent Itching Of Scalp Due To Sweating

கோடையில் மட்டும் வியர்வையினால் சருமத்தில் மட்டுமின்றி, தலையிலும் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் தலை அரிப்பு. ஆம், அதிகமாக வியர்ப்பதால், தலை பயங்கரமாக அரிக்க ஆரம்பிக்கும். இக்கட்டுரையில் வியர்வையால் ஏற்படும் தலை அரிப்பைத் தடுக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

இந்தியர்கள் அனைத்து பருவ காலங்களிலும் தங்களது தலைக்கு தினமும் தவறாமல் எண்ணெய் வைப்பார்கள். ஆனால் மற்ற காலங்களை விட, கோடையில் ஸ்கால்ப்பில் சற்று அதிகமாக எண்ணெய் உற்பத்தியாகும் என்பதால், தலையில் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களின் அளவு அதிகரித்து, பொடுகு வருவதால் அரிப்பு ஏற்படுகிறது. எனவே கோடையில் எண்ணெய் வைக்காதீர்கள்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

மற்ற காலங்களை விட கோடைக் காலத்தில், ஸ்கால்ப்பில் அழுக்குகளின் அளவு அதிகரிப்பதால், வாரத்திற்கு 2-3 முறை தவறாமல் தலைக்கு குளித்துவிட வேண்டும். ஒருவேளை அளவுக்கு அதிகமாக வியர்த்தால், தினமும் தலைக்கு குளியுங்கள்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

ஷாம்பு போட்ட பின் பயன்படுத்தும் கண்டிஷனரை ஸ்கால்ப்பில் படும்படி போட வேண்டாம். இல்லாவிட்டால் அது மயிர்கால்களை கடுமையாக பாதித்து, தலையில் அரிப்பு மற்றும் பொடுகை அதிகரித்துவிடும்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

முக்கியமாக தலைமுடிக்கு கெமிக்கல்கள் கலந்த கலரிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதில் உள்ள கெமிக்கல்களே ஸ்கால்ப்பை கடுமையாக பாதித்து அரிப்பை ஏற்படுத்தும். ஆகவே கலரிங் செய்வதைத் தவிர்த்து, முடிந்தவரை முடியின் இயற்கை நிறத்தைப் பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

வெளியே வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்கள் நேரடியாக தலைமுடியைத் தாக்காதவாறு, தலைக்கு தொப்பி போடுங்கள் அல்லது துணியைக் கட்டிக் கொண்டு செல்லுங்கள். அதுவும் காட்டன் துணியை தலைக்கு கட்டிக் கொண்டு சென்றால், வியர்வை முழுமையாக உறிஞ்சப்பட்டு, அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hair Care Tips To Prevent Itching Of Scalp Due To Sweating

Here are some hair care tips to prevent itching of scalp due to sweating. Read on to know more...
Story first published: Friday, May 5, 2017, 13:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter