ஹேர் டை கறையை போக்கனுமா? இதோ சூப்பர் வழிகள்!!

Posted By: S. Hari Dharani
Subscribe to Boldsky

நீங்கள் எவ்வளவு தான் பொறுமையாகவும் கவனமாகவும் வீட்டில் அமர்ந்து முடிக்கு டை அடித்தாலும் கூட அதில் கொஞ்சம் உங்கள் சருமத்தில் படமால் இருப்பதில்லை. உங்கள் நெற்றி, கைகள், அல்லது கழுத்துப்பகுதி போன்று வேறெங்காவது கறை பட்டுவிடும். ஹேர் டையை அடிக்கும் முயற்சிகளில் தான் நம் தவறுதலாக சருமத்தில் அடித்து விடுகிறோம்.

நரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை !!

மக்கள் பொதுவாக கறை பட்ட இடங்களை உடனே தண்ணீரில் கழுவ முயல்வார்கள். இது முதன்மையாக செய்யப்பட வேண்டிய ஒன்றே. இருந்தாலும் அந்த இடம் காய்ந்த பிறகும் கீழிருக்கும் வழிகளில் நீங்கள் அந்த ஹேர் டை கரையை நீக்கலாம்.

Easiest Ways To Remove Hair Dye Stain From The Skin

சாயத்தை உங்கள் சருமத்தில் இருந்து முழுமையாக நீக்க சிலநாட்கள் அவகாசம் தேவைப்படும், அதுவரை பொறுமை காக்க வேண்டும் அதனால் எளிதாக உடனே சருமத்தில் உள்ள ஹேர் டை கரையை போக்குவதை பற்றி சில குறிப்புகள்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெயில் பாலிஷ் ரிமூவர் :

நெயில் பாலிஷ் ரிமூவர் :

காட்டன் உருண்டைகளை அல்லது காட்டன் திண்டுகளை நகப்பூச்சை நீக்கும் திரவத்தில் ஊறவைத்து பின் ஹேர்டை கறை பட்ட இடத்தில் வைத்து தேய்க்கவும்.

நகப்பூச்சு நீக்கி உங்கள் சருமத்தில் பட்டதும் சிறு எரிச்சல் போன்ற உணர்வு ஏற்படும், இருப்பினும் நீங்கள் தொடரலாம். உங்களுக்கு நகப்பூச்சு நீக்கும் திரவத்தால் ஏதேனும் ஒவ்வொமை தோல் பிரச்சினைகள் ஏற்படுமென்றால் இதை உபயோகிக்காதீர்கள்.

பற்பசை

பற்பசை

பற்பசை கொண்டு கரையை அழிப்பதனால் சரியான பற்பசையை தேர்ந்தெடுத்து அதை உடனே ஹேர்டை கறைபட்ட இடத்தில் தேய்க்கவும். பழைய டூத்பிரஷ் கொண்டு சருமத்தில் கறைபட்ட இடத்தில நன்கு தேய்த்து பின் கழுவவும்.

தயவுசெய்து பற்பசையை சருமத்தில் ஹேர்டை பட்ட இடங்களில் பூசி சிறிதுநேரம் கழித்து பின் கழுவ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 எண்ணெய்கள்

எண்ணெய்கள்

இரண்டு எண்ணெய்கள் ஹேர்டையை நீக்குவதற்கு பெரும் உதவியாக இருக்கிறது அவை ஆலிவ் எண்ணெய் மற்றும் பேபி ஆயில் ஆகும். ஒரு கரண்டி எண்ணெய்யை எடுத்து ஹேர்டை பட்ட இடத்தில வைத்து தேய்க்கவும் பின்னர் சோப்பு தேய்த்து கழுவவும். ஹேர்டை பட்ட நாளில் மூன்று முதல் ஐந்துமுறை இந்த எண்ணெய்யை பூசிகழுவுவதால் நல்ல முடிவு கிடைக்கும்.

தொழில்முறை ஹேர்டை நீக்கம்

தொழில்முறை ஹேர்டை நீக்கம்

நீங்கள் எந்த அளவில் ஹேர்டையை சருமத்தில் பூசியுள்ளீர்கள் என்பதை பொருத்தும் மேற்கூறிய முறையில் சரி செய்ய முடியாத கறைகளை நீக்க முயன்றால் சருமம் பாதிக்கப்படும். இதை நீங்கள் வீட்டில் சரி செய்ய இயலாது எனும்போது நீங்கள் அழகு நிலைய நிபுணரை அணுகலாம்.

அழகு நிலையத்தில் நிபுணர்கள் ஹேர் டை நீக்கத்திற்கு சில சிகிச்சைகள் செய்வார்கள். அதை பயன்படுத்தி உங்கள் சருமத்தில் உள்ள ஹேர் டை கரையை நீக்கி கொள்ளலாம்.

பெட்ரோலிய ஜெல் :

பெட்ரோலிய ஜெல் :

ஹேர்டை கரையை சருமத்தில் நீக்கும் சிறந்த முறைகளில் ஒன்று பெட்ரோலிய களிம்பு பயன்படுத்துதல். ஒரு கரண்டி பெட்ரோலிய களிம்பு எடுத்து சருமத்தில் ஹேர்டை கறை படிந்த இடத்தில் பூசி காட்டன் திண்டுகளை வைத்து நன்கு தேய்க்கவும்.

இது முதல் முறையில் நல்ல முடிவை தருவதில்லை, எனவே கறை நீங்கும் வரை தொடர்ந்து செய்யுங்கள். இது உங்கள் சருமத்தில் உள்ள கரையை முற்றிலும் நீக்குவதோடு இந்த முறை ம் மிகவும் செலவு குறைந்த எளிய முறையாகும்.

 மேக்கப் ரிமூவர் :

மேக்கப் ரிமூவர் :

நீங்கள் ஒப்பனை நீக்கியை (makeup remover) எப்போதும் இரவு முழுதும் பூசி விடுவது போல, ஒரு காட்டன் திண்டில் வைத்து சருமத்தில் கறைபட்ட இடத்தில பூசி தேய்த்தால் ஏற்கனவே உள்ள கறைகள் நீங்கிவிடும். நீங்கள் ஒப்பனை நீக்குவானை பயன்படுத்துவதால் சருமத்தில் கறைபட்ட இடத்தை இதற்கு முன்னர் கழுவ வேண்டியதில்லை. காட்டன் திண்டை வைத்து நன்கு தேய்த்துப்பின் கழுவினால் மாற்றம் தெரியும்.

பாத்திரம் கழுவும் திரவம்

பாத்திரம் கழுவும் திரவம்

உங்கள் சருமத்தில் ஹேர்டை கறை பட்டவுடன், சமயலறைக்கு சென்று கொஞ்சம் பாத்திரம் கழுவும் திரவத்தை எடுக்கவும். அந்த பாத்திரம் கழுவும் திரவம் எலுமிச்சையின் குணங்களை உள்ளடக்கியதாக இருப்பது நல்லது.

நீங்கள் சிறிது சமையல் சோடாவையும் பாத்திரம் கழுவும் திரவத்தோடு கலந்து சருமத்தில் ஹேர்டை கறைபட்ட இடத்தில் காட்டன் திண்டு அல்லது துணியின் உதவியோடு நன்கு தேய்க்கவும். ஓரிரு நிமிடங்கள் தேய்த்து பின் கழுவி விடவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Easiest Ways To Remove Hair Dye Stain From The Skin

Easiest Ways To Remove Hair Dye Stain From The Skin
Story first published: Monday, August 14, 2017, 9:00 [IST]