தலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமா? அப்ப இந்த மாஸ்க்கை போடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

கைகளை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் மருதாணி, நம் தலைமுடி பிரச்சனைகளைப் போக்க வல்லது. குறிப்பாக இது பொடுகு, தலைமுடி உதிர்வது, முடி வறட்சி போன்ற பிரச்சனைகளைப் போக்கி, முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அதிலும் தற்போது வெயில் கொளுத்துவதால், உடல் மிகுந்த வெப்பத்துடன் இருக்கும்.

Different Henna Hair Masks That Can Help To Pamper Your Hair

உடல் வெப்பத்தைத் தணிக்க, மருதாணியை கைக்கு வைப்பதோடு, தலைக்கு மாஸ்க் போலவும் பயன்படுத்தலாம். இக்கட்டுரையில் மருதாணி பவுடரைக் கொண்டு எப்படியெல்லாம் தலைமுடிக்கு மாஸ்க் போடலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து தலைமுடியைப் பராமரித்து நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருதாணிப் பவுடர் மற்றும் க்ரீன் டீ ஹேர் மாஸ்க்

மருதாணிப் பவுடர் மற்றும் க்ரீன் டீ ஹேர் மாஸ்க்

மருதாணிப் பவுடருடன், க்ரீன் டீ சேர்த்து மாஸ்க்காக போடும் போது ஸ்கால்ப்பில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்கும். மேலும் இது கூந்தலை மிருதுவாக மாற்றுகிறது. தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய க்ரீன் டீ இலைகளை 2 டீஸ்பூன் எடுத்து கொள்ளவும். அத்துடன் 2 முதல் 3 டீஸ்பூன் மருதாணிப் பவுடரை சேர்த்துக் கலந்து சிறிது க்ரீன் டீ சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரையும் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும்.

மருதாணிப் பவுடர் மற்றும் கடுகு எண்ணெய் ஹேர் மாஸ்க்

மருதாணிப் பவுடர் மற்றும் கடுகு எண்ணெய் ஹேர் மாஸ்க்

மருதாணிப் பவுடர் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து உபயோகிப்பதால் முடியின் வேர்கள் வலுவடைந்து அடர்த்தியை தரும். ஒரு டீஸ்பூன் மருதாணிப் பவுடருடன் சிறிது கடுகு எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறும் தயிரும் சேர்த்துக் கலந்து தலைமுடியில் தடவி சிறிது நேரம் ஊற வையுங்கள். பின்னர், குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.

மருதாணிப் பவுடர் மற்றும் வெந்தயம் ஹேர் மாஸ்க்

மருதாணிப் பவுடர் மற்றும் வெந்தயம் ஹேர் மாஸ்க்

மருதாணிப் பவுடருடன் வெந்தயம் கலந்து உபயோகிப்பதால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம். இரவு தூங்கும் முன்பு ஒரு கப் வெந்தயத்தை நீரில் ஊற வைத்துவிட்டு தூங்குங்கள். காலையில் எழுந்து ஊற வைத்த வெந்தயத்தை நன்கு ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு கப் மருதாணிப் பவுடர் மற்றும் சிறிது தயிர் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் அலச வேண்டும்.

மருதாணிப் பவுடர் மற்றும் மயோனைஸ் மாஸ்க்

மருதாணிப் பவுடர் மற்றும் மயோனைஸ் மாஸ்க்

வறட்சியடைந்த முடியினை சரி செய்வதில் இந்த மாஸ்க் சிறந்து செயல்படும். மருதாணிப் பவுடர் மற்றும் மயோனைஸ் இரண்டையும் சம அளவில் எடுத்து அடர்த்தியான பேஸ்ட்டாக செய்துக் கொள்ள வேண்டும். அத்துடன் 4 முதல் 5 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து ஸ்கால்ப்பில் தடவி அரை மணிநேரம் கழித்து நீரில் அலச வேண்டும்.

மருதாணிப் பவுடர் மற்றும் முட்டை வெள்ளைக் கரு மாஸ்க்

மருதாணிப் பவுடர் மற்றும் முட்டை வெள்ளைக் கரு மாஸ்க்

இந்த மாஸ்க் ஸ்கால்ப்பில் இருக்கும் பொடுகை எளிதில் போக்கி முடிக்கு வலிமை சேர்க்கும். ஒரு கப் மருதாணிப் பவுடர், ஒரு முட்டையின் வெள்ளை கரு, 10 ஸ்பூன் தயிர் மற்றும் 5 ஸ்பூன் ஆலிவ் ஆயில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊற விட வேண்டும். பின்னர் இந்தக் கலவையை ஹேர் பிரஸ் உபயோகித்து ஸ்கால்ப்பில் தடவி பின்னர் ஷாம்பு உபயோகித்து குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும்.

மருதாணிப் பவுடர் மற்றும் நெல்லிக்காய் மாஸ்க்

மருதாணிப் பவுடர் மற்றும் நெல்லிக்காய் மாஸ்க்

முடி உதிர்வதைத் தடுத்து, முடி அடர்த்தியாக வளர இந்தக் கலவை உதவும். ஒரு கப் மருதாணிப் பவுடருடன் நெல்லிக்காய் பவுடரை சேர்த்து எலுமிச்சைச் சாறு சிறிது ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை ஸ்கால்ப்பில் தடவி, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Different Henna Hair Masks That Can Help To Pamper Your Hair

Here are some different henna hair masks that can help to pamper your hair, take a look.
Subscribe Newsletter