பொடுகு தொல்லையிலிருந்து உங்களை எவ்வாறு நீங்கள் பாதுகாக்கலாம்?

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

பொடுகுத் தொல்லை ஒரு பொதுவான பிரச்சனை ஆகும்.உலகம் முழுவதும் உள்ள மக்களில் பலர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தப் பிரச்சனை அனைத்து வகை வயதினருக்கும்,பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் வருகிறது.பொடுகு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பொதுவான காரணங்களாக ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,மன அழுத்தம் மற்றும் சுற்றுப்புற மாசு ஆகியவை உள்ளன.

நீங்களும் இந்த பொடுகு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் எனில் பொடுகுத் தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு பெற  சிறந்த வழிகள் உள்ளன.அதை பின்பற்றினாலே நிரந்தர தீர்வைப் பெறலாம்.ஆனால் அதை பின்பற்றுவதற்கு முன்னால் இந்த பொடுகுப் பிரச்னையை நினைத்து அதிக கவலைப் படாமல் இருப்பதே நல்லது இல்லையெனில் இது இன்னும் மோசமான பிரச்னையை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொடுகின் வகைகள் :

பொடுகின் வகைகள் :

முதல் படியாக உங்களுக்கு அருகில் உள்ள தோல் மருத்துவரிடம் சென்று கலந்தாலோசிக்க வேண்டும்.எதனால் இந்த பொடுகு வந்துள்ளது என்றும்,எந்த வகையான பொடுகால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.பொடுகுகளில் 2 வகைகள் உள்ளன.அவை:

1.எண்ணெய் பசையால் ஏற்படும் பொடுகு

2.அதிக வறட்சியினால் ஏற்படும் பொடுகு.

எண்ணெய் பசையால் ஏற்படும் பொடுகு ஸ்கல்ப்பில் ஒட்டிக் கொள்கின்றன.

வறட்சியால் ஏற்படும் பொடுகு நுண் துகள்களாக செதில் செதில்களாக உதிரும்.

நிரந்தர தீர்வு :

நிரந்தர தீர்வு :

கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான ஆன்ட்டி-dandruff ஷாம்பு பொதுவாக மேலோட்டமாக பொடுகை அலச உதவும் ஆனால் ஸ்கல்ப்-பில் இருந்து முழுவதுமாக நீக்கி நிரந்தர தீர்வை அளிக்காது.எனவே தோல் மருத்துவரிடம் தேவையான ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம்.

சிறப்பு வல்லுநரிடம் ஆலோசனை

சிறப்பு வல்லுநரிடம் ஆலோசனை

இரண்டாவது படியாக பொடுகை சரி செய்யும் சரியான பொருட்களுடன்,ஸ்கல்ப்பை அலசி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.உங்கள் கூந்தலுக்கென இருக்கும் ட்ரைகாலஜிஸ்ட்டிடம் நீங்கள் செல்லலாம். உங்கள் பொடுகு எந்த வகையைச் சேர்ந்தது?என்ன காரணத்தினால் பொடுகு வந்தது? என்று கண்டறிந்து முடியின் விதத்தைப் பொறுத்து அதற்கேற்றாற் போல சிகிச்சையோ (அ) பொருட்களாகவோ பரிந்துரைப்பார்.

பூஞ்சிய தொற்று :

பூஞ்சிய தொற்று :

பொடுகு ஏற்பட வறண்ட/உலர்ந்த ஸ்கல்ப் காரணமெனில் எளிதாக சிகிச்சை செய்ய முடியும் ஆனால் பூஞ்சை தொற்றால் பொடுகு ஏற்பட்டால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் மருத்துவர் பொடுகு பிரச்சனைகளுக்கு ஏற்ப ஒரு தீர்வைத் தருவார்.ஆனால் நிரந்தர தீர்வு வேண்டுமெனில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

உணவு :

உணவு :

ஆரோக்கியமான உணவுமுறை ஆரோக்கியமான ஸ்கல்ப்பை உருவாக்கும் மற்றும் ஆரோக்கியமான ஸ்கல்ப் பொடுகிற்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

உடற்பயிற்சிக்கும் பொடுகிற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா? தினசரி உடற்பயிற்சி செய்தால் முடியின் துளைகளில் இருந்து வியர்வை வெளிப்படும். இதனால் அழுக்குகள் வெளியேறும். ஆனால் தலைக்கு குளிக்க மறக்காதீர்கள். இதனால் அழுக்குகள் வெளியேறி பொடுகின்றி இருக்கும்.

நீர் :

நீர் :

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் முடிந்த வரை ஒப்பனை பொருட்கள் அதிகம் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிகளையும் பின்பற்றினால் நிச்சயமாக எளிதாக பொடுகு பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best ways to get rid of dandruff

Best ways to get rid of dandruff
Story first published: Friday, March 3, 2017, 13:05 [IST]
Subscribe Newsletter