For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?

|

நகரங்களில் இருக்கும் ட்ராஃபிக் அசாதரணமானது. பஸ்ஸிலோ , காரிலோ போவதை விட பைக்கில் போவது மிகவும் வசதி. சிக்னலில் நிற்கும் வண்டிகளின் சந்து பொந்துகளில் கூட போய் விடலாம். நேரம் மிச்சமாகும். இரு சக்கரங்களில் ஹெல்மட் அணியாமல் போக முடியாது . ஆனால் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும் என்பது தெரியுமா?

Wearing a helmet leads to hair loss

தொடர்ந்து உபயோகித்தால் பத்துவருடங்களில் முடி சொட்டையாகிவிடக் கூட வாய்ப்புண்டாம். அதற்காக ஹெல்மெட் அணியாமல் போகாதீர்கள். ஏனெனில் தலை முடியை விட உங்கள் தலை மிக மிக முக்கியம் . மாறாக தலைமுடி உதிர்வதை எப்படி தடுக்க முடியும்.அதற்கான வழிமுறைகளை என்னெவென்று கையாளுங்கள் . அதுதான் சிறந்தது. இதோ உங்கள் முடியை பாதுகாக்க சில டிப்ஸ்.

ஹெல்மெட் அணிவதனால் எப்படி முடி உதிர்கிறது?

தலையில் வெகு நேரம் ஹெல்மெட் அணியும்போது , சூடும் ,வியர்வையும் ஒருசேர உங்கள் தலைமுடியில் ஏற்படுகிறது. இதனால் உங்கள் ஸ்கால்ப் பாதிக்கப்படுகிறது. கிருமிகளின் தொற்றுக்களால், பொடுகு,அரிப்பு , ஏற்பட்டு முடி பலமிழந்து உதிர ஆரம்பித்து விடுகிறது.

எப்படி முடி உதிர்வதை தடுக்கலாம்?

ஹெல்மெட் அணியும் முன் தலையில் ஸ்கார்ஃப் கட்டிக் கொள்ளுங்கள். இறுக்கமாக கட்டக் கூடாது. இது ரத்த ஓட்டத்தை பாதிக்கும். ஸ்கார்ஃப் காட்டனாக இருக்க வேண்டும். இதனால் ஹெல்மெட்டினால் வரும் வெப்பம் தலையினைப் பாதிக்காது. தலையில் ஏற்படும் வெப்பததை காட்டன் ஸ்கார்ஃப் உறிஞ்சுக் கொள்ளும்.

ஸ்கார்ஃபை வாரம் இரு முறை துவைப்பதை மறந்துவிடாதீர்கள். இல்லையென்றால் அதில் அழுக்கு சேர்ந்து அதுவும் தலைமுடி உதிரக் காரணமாகிவிடும்.
அவ்வப்போது சிக்னலில் ஹெல்மெட் கழட்டி தலையில் காற்று படும்படி விடுங்கள்.இது வியர்வை ஏற்படாமல் தடுக்கும்.

உங்களுக்கு முன்னதாகவே ஸ்கால்ப்பில் பிரச்சனை இருந்தால் அவற்றிற்கு வைத்தியம் செய்த பின் ஹெல்மெட் அணியுங்கள். இல்லையென்றால் வெகு சீக்கிரம் முடியை இழக்க நேரிடும் .

உங்கள் ஹெல்மெட்டினை வேறொருவருக்கு தராதீர்கள் அல்லது வேறொருவரின் ஹெல்மெட்டினை நீங்கள் போடாதீர்கள். இதனால் மற்றவரிடமிருந்து வரும் பொடுகு அல்லது ஸ்கால்ப் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

இது தவிர்த்து நீங்கள் வீட்டில் பண்ண வேண்டியது உங்கள் முடியையும் ஸ்கால்ப்பையும் பராமரிப்பதே. அதற்கான வழிகளை கீழே காணுங்கள்

சோற்றுக் கற்றாழை :

இரு ஸ்பூன் சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை 1 ஸ்பூன் புளிப்பான தயிரில் கலந்து தலையின் வேர்க்கால் மற்றும் முடி நுனி வரை தடவ வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்வதால் தொற்றுக்களிலிருந்து உங்கள் முடியை மீளச் செய்யும். வேர்க்கால்கள் பலப்படும்.

இஞ்சிச் சாறு:

இஞ்சியை துருவி அதிலிருந்து சாற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். போதிய அளவு இஞ்சிச் சாற்றினை எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து தலையில் ஸ்கால்ப்பில் படும்படி செய்ய வேண்டும்.காய்ந்த பின்ழுவங்கள். வாரம் இருமுறை செய்யலாம். பொடுகு, அரிப்பு பிரச்சனைகள் குறைந்த பின் வாரம் ஒரு முறை செய்தால் போதுமானது.

வாரம் மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும் . அதில் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளியுங்கள். போதிய அளவு நீர் குடியுங்கள். அதோடு மேற்கூறியவைகளை பின்பற்றுங்கள். அதன் பின் உங்கள் தலைமுடி மிக பத்திரமாக இருக்கும்.

தித்திக்கும் தேன் மிட்டாய் இப்போது ஆன்லைனில்..!!

English summary

Wearing a helmet leads to hair loss

Wearing a helmet leads to hair loss
Desktop Bottom Promotion