தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

தலைமுடி ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அத்தகைய தலைமுடியில் ஏராளமான பிரச்சனைகளை இன்றைய தலைமுறையினர் சந்திக்கின்றனர். அதில் ஒன்று தலைமுடி அதிகம் உதிர்ந்து, முடியின் அடர்த்தி குறைவாக காணப்படுவது.

இதற்கு காரணம் ஹார்மோன்கள், மோசமான பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவையுடன், சரியான பராமரிப்பு கொடுக்காமல் இருப்பதும் முக்கியமானவைகளாகும். தலைமுடி மெலிந்து இருந்தால், அது ஒருவரின் அழகை மோசமாக வெளிக்காட்டும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க சில எளிய வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் 2 அத்தியாவசிய அமிலங்களான லாரிக் மற்றும் கேப்ரிக் அமிலங்கள் உள்ளது. இவை பாதிக்கப்பட் தலைமுடியை சரிசெய்யவும், பலவீனமான தலைமுடியை வலிமையாக்கவும், முடியின் அடர்த்தியை மேம்படுத்தவும் உதவும். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி வாரம் 2 முறை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் அனைத்து வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கும். தலைமுடி மெலிவதற்கு போதிய ஈரப்பசை இல்லாமையும், ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் தான் காரணம். ஆனால் கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு 3 முறை தலையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து அலசினால், தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளது. எனவே அந்த நெல்லிக்காய் பொடியை நீர் கலந்து வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு தடவி வந்தால், தலைமுடியின் அடர்த்தி அதிகிரிக்கும்.

உருளைக்கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அதனை வாரத்திற்கு 2-3 முறை தலையில் தடவி ஊற வைத்து அலசி வர, தலைமுடியின் அடர்த்தி அதிகரிப்பதோடு, முடி சம்பந்தமான பிரச்சனைகளும் அகலும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயும் ஓர் அற்புதமான தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் பொருள். இதற்கு இதில் உள்ள ஃபேட்டி அமிலங்கள் தான் காரணம். இந்த அமிலங்கள் பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு, நல்ல பாதுகாப்பையும் வழங்கி, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து, அடர்த்தியையும் கூட்டும்.

முட்டை

முட்டை

பழங்காலம் முதலாக தலைமுடி பிரச்சனைகளைப் போக்க முட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இதில் முடியின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் அதிகம் உள்ளது. ஆகவே உங்களுக்கு அடர்த்தியான தலைமுடி வேண்டுமானால், நல்லெண்ணெயுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை தலையில் தடவி ஊற வைத்து அலசுங்கள்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

கறிவேப்பிலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், தலையில் இருக்கும் பொடுகு நீங்குவதோடு, முடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try These Home Remedies To Naturally Increase Hair Volume

Give a try to these home remedies to increase hair volume in a natural way without causing damage to your hair.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter