ஒரே வாரத்தில் பொடுகைப் போக்கும் அற்புதப் பொருள் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பொடுகைப் போக்க எத்தனையோ வழிகளை முயற்சித்திருப்பீர்கள், அதேப் போல் நிறைய முறை தோல்வியையும் சந்தித்திருப்பீர்கள். பொடுகு வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முறையற்ற தலைமுடி பராமரிப்பு மட்டுமின்றி, மன அழுத்தம், உடல் சூடு, ஸ்கால்ப்பில் நோய்த்தொற்று போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஒருவருக்கு பொடுகு வர ஆரம்பித்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயல வேண்டும். இல்லாவிட்டால், அது முற்றி தலைமுடியை அதிகம் உதிரச் செய்து, நாளடைவில் தலையில் முடியே இல்லாமல் செய்துவிடும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒரே வாரத்தில் தலையில் உள்ள பொடுகைப் போக்க உதவும் ஓர் அற்புத வழியைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி பயன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஸ்பிரின் மாத்திரை

ஆஸ்பிரின் மாத்திரை

பொதுவாக ஆஸ்பிரின் மாத்திரையை காய்ச்சல், தலைவலி, சளி பிடித்திருக்கும் போது தான் எடுத்து வருவோம். ஆனால் அந்த அஸ்பிரின் பொடுகைப் போக்கவும் உதவும் என்பது தெரியுமா?

காரணம்

காரணம்

ஆஸ்பிரின் மாத்திரை பொடுகைப் போக்குவதற்கு முக்கிய காரணம், அதில் உள்ள ஆன்டி-செப்டிக் குணம் தான். அது ஸ்கால்ப்பைத் தாக்கிய பாக்டீரியாக்களை அழித்து, பொடுகுத் தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் தரும்.

வேறு நன்மை

வேறு நன்மை

ஆஸ்பிரின் மாத்திரையைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுத்தால், அதனால் ஸ்கால்ப்பில் அதிகம் உற்பத்தியாகும் எண்ணெயின் அளவு குறைந்து, தலையில் எண்ணெய் வழிவதைத் தடுக்கும்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

ஆஸ்பிரின் மாத்திரை - 3-4

ஷாம்பு - தேவையான அளவு

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

ஆஸ்பிரின் மாத்திரையை பொடி செய்து, தேவையான அளவு ஷாம்புவுடன் கலந்து, ஈரமான தலைமுடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நன்கு தேய்த்து அலச வேண்டும்.

எத்தனை முறை பயன்படுத்த வேண்டும்?

எத்தனை முறை பயன்படுத்த வேண்டும்?

இந்த முறையை வாரத்திற்கு 2 முறை மேற்கொண்டால், பொடுகு குறைந்திருப்பதை நீங்களே நன்கு உணர்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Common Ingredient Can Reduce Dandruff In A Week!

Dandruff can be quite embarrassing and it needs to be taken care of. If you are looking for natural remedy, try this homemade recipe..
Please Wait while comments are loading...
Subscribe Newsletter