தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தலைமுடி உதிர்வதைக் குறித்து வருத்தப்படாதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக ஆண்கள் தான் தலைமுடி உதிர்வதால் அதிக மன வருத்தத்திற்கு உள்ளாவார்கள். முடி கொட்டுகிறது என்று நினைத்து வருந்தினால் தான் இன்னும் அதிகமாக முடி கொடடும்.

எனவே முடி உதிர ஆரம்பித்தால், வருத்தப்படாமல் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு, முடியை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள முயல வேண்டும்.

இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றினால், நிச்சயம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பீர்க்கங்காய்

பீர்க்கங்காய்

பீர்க்கங்காயின் சில துண்டுகளை தேங்காய் எண்ணெயில் போட்டு எண்ணெய் கருப்பாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் இறக்கி குளிர வைத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறையும்.

சீமைச்சாமந்தி

சீமைச்சாமந்தி

சீமைச்சாமந்தி பொடியை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி மீண்டும் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து, பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இந்த செயலை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி வலிமையடையும்.

கொய்யா இலை

கொய்யா இலை

கொய்ய இலைகள் சிறிதை தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். இதனாலும் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா

அஸ்வகந்தா பொடியை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சி அதிகரித்திருப்பதைக் காணலாம்.

சுரைக்காய்

சுரைக்காய்

சுரைக்காயை அரைத்து அதன் சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, பின் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் அடர்த்தி அதிகரித்திருப்பதைக் காணலாம்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

சிறிது வால்நட்ஸை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

மாங்காய் விதை

மாங்காய் விதை

மாங்காயினுள் உள்ள விதையை பொடி செய்து, அத்துடன் நெல்லிப் பொடி சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் முடி உதிர்வது குறைந்து, வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tested Home Remedies To Avoid Baldness

Read on to know how to stop hairfall and avoid baldness. Increase your hair volume by using these ingredients.
Story first published: Saturday, March 26, 2016, 11:31 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter