தலைமுடி பிரச்சனைகளுக்கு இந்த நெல்லிக்காய் மாஸ்க்கை ஒருமுறை ட்ரை பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைய தலைமுறையினர் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. இந்த தலைமுடி பிரச்சனைகளுக்கு மார்கெட்டில் எத்தனையோ பொருட்கள் விற்கப்பட்டாலும், அவற்றால் பலன் ஏதும் கிடைத்ததில்லை.

ஒருவருக்கு ஆரோக்கியமான தலைமுடி என்பது இயற்கை சிகிச்சைகளைப் பின்பற்றுவதன் மூலம் தான் பெற முடியும். அதிலும் சரியான பொருளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், நிச்சயம் நல்ல தீர்வை விரைவில் காணலாம்.

Rejuvenating Amla Hair Mask That Reverses Hair Fall

அதில் நெல்லிக்காய் மிகவும் சிறப்பான பொருள். ஆயுர்வேதத்தில் தலைமுடி பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் தான் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய நெல்லிக்காயைக் கொண்டு ஒருவர் தலைக்கு ஹேர் மாஸ்க் போட்டு வந்தால், அதனால் முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த நெல்லிக்காய் ஹேர் மாஸ்க்கையும், அந்த ஹேர் மாஸ்க் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை பொடி - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்

செய்முறை:

செய்முறை:

2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பவுடருடன், 1 டேபிள் ஸ்பூன் வெந்தய பொடி, 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை பொடி மற்றும் 1/2 கப் தயிர் சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து, தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

தலைமுடி வளர்ச்சி

தலைமுடி வளர்ச்சி

நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், செல்கள் பாதிக்கப்படுவதை எதிர்த்து, முடி உதிர்வதைத் தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதுமட்டுமின்றி இதில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள், மயிர்கால்களை வலிமைப்படுத்தி, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

நரை முடி

நரை முடி

உடலில் பித்தம் அதிகமானால், இளநரை வரும் என ஆயுர்வேதம் கூறுகிறது. நெல்லிக்காயில் உள்ள குளிர்ச்சித்தன்மை, முடி நரைப்பதைத் தடுக்கும். மேலும் நெல்லிக்காய் முடியின் கருமை நிறத்தைத் தக்க வைப்பதோடு, அடர்த்தியையும் அதிகரிக்கும்.

பொடுகு

பொடுகு

நெல்லிக்காய் ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் நுண் கிருமி எதிர்ப்பு பொருட்கள் தான் காரணம். இதனால் பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்றவை தடுக்கப்படும்.

ஹேர் கண்டிஷனர்

ஹேர் கண்டிஷனர்

நிறைய சரும நிபுணர்கள், நெல்லிக்காய் மிகவும் சிறப்பான நேச்சுரல் ஹேர் கண்டிஷனர் என்று கூறுகின்றனர். எனவே முடி மென்மையாகவும், பட்டுப்போன்றும் இருக்க நெல்லிக்காய் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rejuvenating Amla Hair Mask That Reverses Hair Fall

If you are one of those who want to give your locks a boost, here is a quick guide on how to get naturally healthy hair. Amla or Indian gooseberry is a staple ingredient in almost all Ayurvedic recipes for treatment of various ailments.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter