பொடுகு தொல்லை இனி இல்லை, இந்த இயற்கை ஷாம்பூ பயன்படுத்துங்க!

Written By: Hemalatha
Subscribe to Boldsky

எல்லாருக்கும் கூந்தல் அடர்த்தியாய் போஷாக்காக வேண்டும் என்ற ஆசை உண்டு. விதவிதமாய் சிகை அலங்காரம் பண்ணிக்க வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால் நிறைய காரணங்களால் கூந்தல் வலுவிழந்து , வளராமல் பொலிவின்றி காணப்படும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தேயிலை எண்ணெய் ஒரு வரப்பிரசாதம்.

Natural shampoo for Dandruff free hair

எதனால் முடி உதிர்கிறது?

உடலில் போதிய ஊட்டச்சத்து இல்லை என்றால் , கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை உபயோகிப்பது, கலரிங் செய்வது, ஹார்மோன் மாற்றங்கள் , சரியாக பராமரிப்பில்லாமல் இருத்தல் என சொல்லிக் கொண்டே போகலாம்.

நீங்கள் கடையில் வாங்கும் ஷாம்புவை விட, வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கூந்தலை பராமரிப்பது எளிது, விலையும் குறைவு.பக்க விளைவுகளற்றது.அதற்கு தேயிலை எண்ணெயில் செய்யப்படும் இந்த ஷாம்பு சிறந்த தீர்வு தருகிறது.

Natural shampoo for Dandruff free hair

தேவையானவை:

தேயிலை எண்ணெய்-3 டேபிள் ஸ்பூன்

கேஸ்டைல் லிக்விட் சோப் -2 ஸ்பூன்.

தேயிலை எண்ணெய் நிறைய அழகு சாதன பொருட்களில் உபயோகப்படுத்தப் படுகிறது. சருமத்திற்கும் கூந்தலுக்கும் ஃப்ரண்ட்லியானது. கிருமிகளை அழிக்கும்.

ஸ்கால்ப்பில் ஏற்படும் அரிப்பிற்கும் எரிச்சலுக்கும் சிறந்த நிவாரணம் தருகிறது.

Natural shampoo for Dandruff free hair

லிக்விட் கேஸ்டைல் சோப் என்பது ஆலிவ் எண்ணெய் மற்றும் சில மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் நீர்த்த சோப்பாகும்.இதில் சிறிதும் கெமிக்கல் கலப்பது இல்லை. இதனை வீட்டிலேயே செய்யலாம் அல்லது சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும்.

Natural shampoo for Dandruff free hair

இந்த இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது இயற்கையான இந்த ஷாம்பு தயார்.இதனை தலையில் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து சில நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்யவும்.பின் நன்றாக முடியை அலாசவும். வாரம் 2 அல்லது 3 முறை உபயோகித்தால் பொடுகு எட்டிக் கூடப் பார்க்காது.

English summary

Natural shampoo for Dandruff free hair

Natural shampoo for Dandruff free hair
Please Wait while comments are loading...
Subscribe Newsletter