For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கும் நேச்சுரல் ஹேர் ஆயில்!

By Maha
|

தலைமுடியில் பிரச்சனை இல்லாதவர்களைக் காணவே முடியாது. அதில் தலைமுடி உதிர்வது, பொடுகுத் தொல்லை, முடியின் முனைகளில் வெடிப்பு, முடி வளராமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இதற்காக கடைகளில் அல்லது விளம்பரங்களில் விற்கப்படும் எண்ணெய்களை வாங்கிப் பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் தலைமுடியில் இருந்த பிரச்சனை அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்காது.

ஆனால் தமிழ் போல்ட் ஸ்கை தலைமுடி பிரச்சனைக்கான ஓர் எளிமையான நேச்சுரல் ஹேர் ஆயிலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தயாரித்து தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால், தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

கற்றாழையில் புரோடியோலிடிக் என்னும் நொதி உள்ளது. இது ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்கும். மேலும் இது சிறந்த கண்டிஷனர் போன்றும் செயல்படும். அதுமட்டுமின்றி, கற்றாழை முடியின் வளர்ச்சயைத் தூண்ட, பொடுகைக் குறைக்க, உச்சந்தலை அரிப்பைத் தடுக்கவும் செய்யும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் மயிர்கால்களை வலிமைப்படுத்தும் ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் இது மயிர்கால்கள் நன்கு சுவாசிக்க உதவும். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி, முடியின் நிறத்தைத் தக்க வைக்க உதவும்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயத்தில் முடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான சல்பர் வளமாக நிறைந்துள்ளது. வெங்காயம் முடி உடைவதையும், பாதிக்கப்பட்ட மயிர்கால்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வளரவும் உதவும். ஏனெனில் சல்பரானது முடியின் வளர்ச்சிக்கு வேண்டிய கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்.

மிளகு

மிளகு

மிளகில் கேப்சைசின் என்னும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சேர்மம் உள்ளது. முக்கியமாக மிளகு தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் பெற வழிவகுக்கும்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

கற்றாழை - 1 பெரிய இலை

கறிவேப்பிலை - சிறிது

சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது)

மிளகு - 1/2 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 1/4 கப்

செய்முறை

செய்முறை

* முதலில் கற்றாழை இலையின் முனைகளில் உள்ள கூர்மையை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் மிக்ஸியில் கற்றாழைத் துண்டுகளையும், கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அதனை வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இக்கலவையை வடிகட்டும் போது சற்று பொறுமை அவசியம்.

செய்முறை

செய்முறை

* பின்பு ஒரு வாணலியை நன்கு சூடேற்றிக் கொண்டு, அதில் வடிகட்டி வைத்துள்ள கற்றாழை சாற்றினை ஊற்றி நன்கு பாதியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.

* பிறகு அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்.

* கலவை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வெங்காயம் மற்றும் மிளகு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், எண்ணெய் தயார்.

குறிப்பு

குறிப்பு

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், தலை முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்றவை குறைந்து, முடி நன்கு வளர்வதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Natural Hair Oil Recipe for Hair growth

Here is one of the best homemade natural hair oil recipe for hair growth, hair damage problems and dandruff treatment. Read on to know more.
Story first published: Monday, February 22, 2016, 13:07 [IST]
Desktop Bottom Promotion