For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளநரையை மறையச் செய்யும் ஒரு மூலிகை எண்ணெய் !!

இள நரையை போக்க இங்கே குற்ப்பிட்டுள்ள மூலிகை எண்ணெயை உபயோகித்துப் பாருங்கள். இவை பலனளிக்கும். ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காய் பயன்படுத்தினால் விரைவில் பலன் தெரியும்.

|

உடல் சூட்டினால் கூட இள நரை உண்டாகலாம். சத்து குறைபாடு, அதிக மன அழுத்தம், உபயோகிக்கும் ஷாம்பூக்கலும் இள நரைக்கு காரணம்.

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. இவ்வாறு செய்தால் இள நரையை தவிரக்க முடியும்.

Herbal hair oil for grey hair

உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இள நரையை போக்கும் கீரை :

இள நரையை போக்கும் கீரை :

முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும்.

 இளநரை போக்கும் மூலிகை எண்ணெய்

இளநரை போக்கும் மூலிகை எண்ணெய்

தேவையானவை :

தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.

சீரகம் - 1 ஸ்பூன்

சோம்பு - 1/2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 3

கறிவேப்பிலை - கைப்பிடி அளவு

கொத்தமல்லலி - சிறிதளவு

நெல்லி வற்றல் - 10 கிராம்

வெட்டிவேர் - 5 கிராம்

செய்முறை :

செய்முறை :

எண்ணெயை சூடுபடுத்தி அதில் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு காய்ச்சி எடுங்கள். ஆறியபின் வடிகட்டி அந்த எண்ணெயை வாரம் இருமுறை தேய்த்து குளித்தால் இள நரை மறையும்..

நன்மை :

நன்மை :

அதோடு இவை உடலுக்கு குளிர்ச்சியும் நரம்புகளுக்கு ஊட்டமும் அளிக்கும். கூந்தலுதிர்தலையும் கட்டுப்படுத்தும். உபயோகித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Herbal hair oil for grey hair

Use this herbal hair oil twice a week to get rid of premature grey hair
Story first published: Saturday, December 3, 2016, 12:05 [IST]
Desktop Bottom Promotion