கோடையில் தலைமுடி அதிகம் உதிர்வது ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, முதுமை, காயங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சில சமயங்களில் காலநிலை மாறுதல்களாலும் தலைமுடி உதிர்வது என்பது ஏற்படும். குறிப்பாக கோடையில் தலைமுடி உதிர்வது என்பது அதிகமாக இருக்கும். இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. இப்போது கோடையில் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களையும், அதற்கான தீர்வையும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வியர்வை

வியர்வை

கோடையில் தலைமுடி அதிகமாக உதிர்வதற்கு முக்கிய காரணம், வியர்வை. கோடையில் அதிகம் வியர்ப்பதால், மயிர் கால்கள் வலிமையின்றி இருக்கும். இந்த சமயத்தில் சீப்பு கொண்டு அளவுக்கு அதிகமாக சீவினால், தலைமுடியை வேரோடு கையில் பெற வேண்டியது தான்.

கிருமிகளின் வளர்ச்சி

கிருமிகளின் வளர்ச்சி

கோடையில் அதிகப்படியான வியர்வை வெளியேற்றத்தினால், ஸ்கால்ப் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும். இப்படி ஈரப்பசையுடன் ஸ்கால்ப் இருந்தால், அதனால் அவ்விடத்தில் கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் அரிப்புக்களும், எரிச்சல்களும் ஏற்படும். இப்படி தலையை அதிகம் சொரியும் போது, தலைமுடி உதிர்வது இன்னும் அதிகமாகும்.

டோலோஜென் அதிகம்

டோலோஜென் அதிகம்

ஆய்வு ஒன்றில் கோடைக்காலத்தில் பெண்களின் டோலோஜென் சற்று அதிகமாக இருப்பதாக சொல்கிறது. டோலோஜென் என்பது மயிர்கால்களின் இளைப்பாறும் கட்டமாகும். இதனால் இக்காலத்தில் தலைமுடிக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும் செயல்களில் ஈடுபடும் போது தலைமுடி அதிகமாக உதிர்கிறது.

வழி 1

வழி 1

கோடையில் தினமும் தலைக்கு குளிப்பது. இதனால் தலையில் வியர்வையினால் சேர்ந்த அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும். ஆனால், தினமும் தலைக்கு ஷாம்பு போடாதீர்கள். இல்லாவிட்டால் தலைமுடி அதிகம் உதிர்வதோடு, ஸ்கால்ப்பில் உள்ள இயற்கை எண்ணெய்களும் நீங்கிவிடும்.

வழி 2

வழி 2

முக்கியமாக கோடையில் சூரியக்கதிர்கள் நேரடியாக தலைமுடியைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு வெளியே செல்லும் போது தலைக்கு ஏதேனும் துணியை சுற்றிக் கொண்டோ அல்லது தொப்பை அணிந்து கொண்டோ அல்லது குடையைப் பிடித்துக் கொண்டோ செல்லலாம்.

முடி வளர்ச்சியும் அதிகம்

முடி வளர்ச்சியும் அதிகம்

கோடையில் எப்படி முடி அதிகம் உதிருமோ, அதேப் போல் முடியின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். மற்ற காலங்களை விட கோடையில் உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதற்கு வெப்பமான காலநிலையில் உடலின் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் உடலில் இரத்த ஓட்டமும் அதிகமாக இருக்கும். ஆகவே இக்காலத்தில் முடி வளர்வதற்கு தேவையான பராமரிப்புக்களை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Experiencing Hair Fall During Summer Season

Here are some reasons and solutions for hair fall during summer season. Read on to know more...
Story first published: Monday, April 25, 2016, 11:55 [IST]
Subscribe Newsletter