Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா?
தலைமுடி உதிர்வதைத் தடுக்க வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி?
தலைமுடியின் வலிமையை அதிகரிக்க என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் நேச்சுரல் ஹெர்பல் ஹேர் ஆயிலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
தலையில் கையை வைத்தாலே, முடி கையோடு வருகிறதா? படுக்கையில் இருந்து எழுந்தால், தலையணையில் முடி அதிகம் ஒட்டி இருக்கா? எப்போது வீட்டைப் பெருக்கினாலும், கொத்தாக தலைமுடி கிடைக்கிறதா? அப்படியெனில் உங்கள் தலைமுடி மிகவும் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.
ஒருவருக்கு ஒரு நாளைக்கு 100-க்கும் அதிகமான மயிர்கால்கள் உதிருமானால், உடனே தலைமுடிக்கு பராமரிப்பு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். தலைமுடியின் வலிமையை அதிகரிக்க என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். ஹேர் மாஸ்க், ஹேர் ஆயில் போன்ற பலவற்றைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இப்போது நாம், தலைமுடியின் வலிமையை அதிகரிக்கும் ஓர் நேச்சுரல் ஹெர்பல் ஹேர் ஆயிலைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:
செம்பருத்திப் பூ - 2-3
துளசி இலைகள் - சிறிது
கறிவேப்பிலை - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 2
லாவெண்டர் எண்ணெய் - 10 துளிகள்

செய்முறை #1
முதலில் வெங்காயத்தின் தோலுரித்து, அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கறிவேப்பிலை, துளசி மற்றும் செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை #2
ஒரு வாணலியில் லாவெண்டர் எண்ணெயைத் தவிர்த்து, இதர அனைத்து எண்ணெய்களையும் ஊற்றி, குறைவான தீயில் சூடேற்ற வேண்டும். பின் அதில் வெங்காய சாற்றினை ஊற்றி கிளறி விட வேண்டும்.

செய்முறை #3
பின் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை, செம்பருத்தி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை துளையிட்டு சேர்த்து, குறைவான தீயில் 5 நிமிடம் கிளற வேண்டும்.

செய்முறை #4
பின்பு அதில் வெந்தயத்தை சேர்த்து, அது நிறம் மாறும் வரை சூடேற்றி இறக்கி, அறைவெப்ப நிலையில் குளிர வைக்க வேண்டும்.

செய்முறை #5
இறுதியில் எண்ணெய் மணத்தை அதிகரித்து சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கிளறி, ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை
தலைமுடியை பகுதிகளாகப் பிரித்து, ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி, 10 நிமிடம் விரலால் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

குறிப்பு
இந்த எண்ணெயைக் கொண்டு வாரத்திற்கு ஒருமுறை ஆயில் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது குறைவதை நன்கு காணலாம்.
உங்களுக்கு இதுப்போன்று வேறு ஏதேனும் சக்தி வாய்ந்த ஹேர் ஆயில் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
