பீரை கொதிக்க வைத்து தலைமுடியை அலசினால் கிடைக்கும் நன்மை பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு சுருட்டை முடி உள்ளதா? அதைப் பராமரிக்க முடியவில்லையா? பார்லர் சென்று சுருட்டை முடியை நேராக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய இயற்கை வழிகளைப் பின்பற்றுங்கள்.

ஏனெனில் இந்த இயற்கை வழிகளால் சுருட்டை முடி மறைவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்பட்டு, முடி நன்கு வளரும். சரி, இப்போது சுருட்டை முடியை நேராக்கும் இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பால் தலைமுடியை நேராக்குவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுக்களையும் போக்கும். அதற்கு தேங்காயை அரைத்து பால் எடுத்து, அதனை ஸ்கால்ப் முதல் தலைமுடியின் முனை வரை படும்படி நன்கு மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், சுருட்டை முடி வேகமாக மறையும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையில் உள்ள நொதிகள், தலைமுடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்கும். மேலும் கற்றாழை சுருட்டை முடியைப் போக்கும். அதற்கு 1/2 கப் வெதுவெதுப்பான எண்ணெயில் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து, தலையில் நன்கு தடவி 30 நிமிடம் கழித்து, பின் அலச வேண்டும்.

பீர்

பீர்

ஒரு கப் பீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மிதமான தீயில் சூடேற்றி, பீர் பாதியானதும் இறக்கி, குளிர வைத்து, அதனை பயன்படுத்தும் ஷாம்புவுடன் கலந்து, தலைமுடியை அலசி வந்தால், சுருட்டை முடி நீங்குவதோடு, முடி நன்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயும் தலைமுடியை நேராக்கும். அதற்கு வாரத்திற்கு ஒருமுறை விளக்கெண்ணெயைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

1-2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து, ஷாம்பு போட்டு தலைமுடியை அலசியப் பின், அக்கலவையைக் கொண்டு அலசினால், சுருட்டை முடி நேராகும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

நன்கு கனிந்த 2 வாழைப்பழத்தை மசித்து, அதனை தலைமுடியில் தடவி 20 நிமிடம் கழித்து அலச வேண்டும். இப்படி செய்வதால், தலைமுடியின் முரட்டுத்தன்மை நீங்கி, முடி நன்கு மென்மையாகவும் நேராகவும் இருக்கும்.

முட்டை மற்றும் ஆலிவ் ஆயில்

முட்டை மற்றும் ஆலிவ் ஆயில்

2 முட்டையை நன்கு அடித்து, அத்துடன் 4 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி, ஷவர் கேப் அணிந்து, 30 நிமிடம் கழித்து, ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Boil a Beer And Lather Your Hair With Mixture –The Benefit Just May Surprise You

You can have gorgeous straight hair without spending money or destroy your hair. Try a natural approach for straight hair. Here are some..
Subscribe Newsletter