For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகுத் தொல்லையில் இருந்து முழுமையாக விடுதலைத் தரும் சில ஆயுர்வேத வழிகள்!

By Maha
|

பொடுகு என்பது குளிர் காலத்தில் தான் வரும் என்பதில்லை. அனைத்து காலங்களிலும் பலரையும் அவஸ்தைப்படக் செய்யும். பொடுகுத் தொல்லையை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், தலைமுடியை இழக்க வேண்டி வரும்.

சிலருக்கு தலைக்கு ஷாம்பு போட்டு அலசிய பின், தலைச்சருமத்தில் வெள்ளையாக தோல் உரியும். இதற்கு ஷாம்புவில் உள்ள கெமிக்கல் ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் பசையை முழுமையாக வெளியேற்றிவிடுவது தான் காரணம்.

மேலும் பொடுகுத் தொல்லை இருந்தால், தலைமுடியின் மேல் வெள்ளை நிறத்தில் தூசி படிந்தது போன்று அசிங்கமாக காணப்படும். ஆனால் ஆயுர்வேதத்தில் பொடுகுத் தொல்லையில் முழுமையாக விடுதலைத் தரும் வழிகள் உள்ளது. அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் வழி

முதல் வழி

எலுமிச்சையில் உள்ள அமிலம், ஸ்கால்ப்பில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் ஸ்கால்ப்பிற்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

செய்முறை

செய்முறை

2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில், சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

இரண்டாம் வழி

இரண்டாம் வழி

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் ஓர் அற்புதமான கலவை. இதனைக் கொண்டு ஸ்கால்ப்பை பராமரித்தால், வறட்சி நீங்குவதோடு, கற்பூரத்தில் உள்ள ஆன்டி-பாக்டீயரில் தன்மை ஸ்கால்ப்பில் பொடுகை ஏற்படுத்திய கிருமிகளை அழிக்கும்.

செய்முறை

செய்முறை

தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதனை இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.

மூன்றாம் வழி

மூன்றாம் வழி

ஆயுர்வேதத்தின் படி, வினிகர் பொடுகைப் போக்கும் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வினிகர் ஸ்கால்ப்பை ஈரப்பசையூட்டவும் செய்கிறது.

செய்முறை

செய்முறை

ஒரு கப்பில் சிறிது வினிகரை எடுத்து, அதனை ஒரு பஞ்சு பயன்படுத்தி ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

நான்காம் வழி

நான்காம் வழி

வெந்தயம் மயிர்கால்களை வலிமையடையச் செய்வதோடு, ஊட்டமளித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மை ஸ்கால்ப்பில் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுத்து, முடி உதிர்வதையும் தடுக்கும்.

செய்முறை

செய்முறை

இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

ஐந்தாம் வழி

ஐந்தாம் வழி

மிளகுத் தூளும் ஓர் அற்புதமான பொடுகைப் போட்டும் பொருள். இதில் உள்ள காரத்தன்மை நுண்கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை அழித்து, பொடுகு ஏற்படுவதைத் தடுத்து, ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

செய்முறை

செய்முறை

சிறிது மிளகை பொடி செய்து, நீரில் அல்லது தேங்காய் எண்ணெயில் கலந்து ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Remedies To Cure Dandruff Completely

Are you getting tired of dealing with dandruff issues everyday? Then you can consider ayurvedic remedies that can be made at home to cure dandruff...
Desktop Bottom Promotion