For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரு மடங்கு அடர்த்தியான கூந்தல் கிடைக்கனுமா? இதை ட்ரை பண்ணுங்க!!

கூந்தல் அடர்த்தியாக இருந்தால்தான் அழகு. சிலருக்கு இயற்கையிலேயே கூந்தல் அடர்த்தி இருக்காது. அவர்கள் கூந்தல் வளர்ச்சியை தூண்டும் விதமாக நெல்லிக்காய்யை பயன்படுத்தினால் இருமடங்கு அடர்த்தி கிடைக்கும்

|

கூந்தல் நீளமோ குறைவோ அடர்த்தி இல்லையென்றால் குறையாகவே தென்படும். சிலருக்கு கூந்தல் நீண்டு இருந்தாலும் ஒல்லியாக இருக்கும்.

இவர்களுக்கு எந்த வித சிகை அலங்காரமும் எடுபடாது. இதுவே அடர்த்தி இருந்தால் நீளமோ குறைவோ ஒரு தனி அழகை தரும்.

Amla hair recipes to thickening hair

உங்கள் கூந்தலை இரு இருடங்குஅடர்த்தியாக்க நெல்லிக்காய் உதவி செய்கிறது. அதிக விட்டமின் சி இருக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட் இரும்பு ஆகிய சத்துக்களும் உள்ளன.

கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதில் பெரும்பங்கு நெல்லிக்காய் கொண்டுள்ளது. நரை முடி தடுத்து கருமையான முடியையும் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையானவை :

தேவையானவை :

நெல்லிக்காய் கையளவு

செம்பருத்தி இலை -5-6

தேங்காய் எண்ணெய் - 1 கப்

செய்முறை

செய்முறை

எண்ணெயை சூடுபடுத்துங்கள். நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி இலையை பொடியாக நறுக்கி அவற்றை எண்ணெயில் போடுங்கள்.

20 நிமிடம் குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தியபின் அடுப்பை அணைத்து ஆற விடுங்கள். எண்ணெய் ஆறிய பின் அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதனை தடவிக் கொள்ளுங்கள். ஒரு மாதத்தில் மிக அடர்த்தியாக முடி வளரும்.

தேவையானவை :

தேவையானவை :

வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்

நெல்லிக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

யோகார்ட்- தேவையான அளவு

செய்முறை

செய்முறை

வெந்தயத்தை முந்தைய இரவில் ஊற வைத்து அதனை மறு நாள் அரைத்து அதனுடன் நெல்லிக்காய் பொடி யோகார்ட் ஆகியவற்றை கலந்து தலையில் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும்.

தேவையானவை :

தேவையானவை :

ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்

நெல்லிக்காய் எண்ணெய் - 10 துளிகள்

தேன்- 1 டீ ஸ்பூன்

நீர் - 1 கப்.

செய்முறை

செய்முறை

மேல் கூறியவற்றை எல்லாம் சேர்த்து ஒன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். தலைக்கு குளித்த பின் இந்த நெல்லிக்காய் நீர் கொண்டு தலை முடியை மசாஜ் செய்து 5 நிமிடம் கழித்து அலாசவும். கூந்தல் பளபளக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amla hair recipes to thickening hair

Use Amla regularly to give good amount of volume for your hair.These amla hair recipes stimulates the hair growth quickly.
Story first published: Friday, October 21, 2016, 10:40 [IST]
Desktop Bottom Promotion