திருமணத்திற்கு முன் உங்கள் முடியை பராமரிப்பதற்கான எளிய வழிகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

உங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை எண்ணி உற்சாகமாக உள்ளீர்களா? திருமண நாளன்று மிகவும் அசத்தலாக இருக்க வேண்டும் என ஆசையாக உள்ளதா? சரி, அதற்கு எப்படி திட்டமிட்டுள்ளீர்கள்? அருகிலுள்ள பியூட்டி பார்லருக்கு சென்று விலை உயர்ந்த பொருட்களை கொண்டு முடியை ஸ்டைல் செய்ய போகிறீர்களா? அப்படியானால் தீமையான ரசாயனங்களால் உங்கள் முடி பாழாய் போகப் போகிறது.

அப்படியானால் உங்களுக்கு மிகவும் முக்கிய நாளான உங்கள் திருமண நாளன்று சிறப்பான தோற்றத்துடன் காட்சியளிக்க வேறு வழியே இல்லையா என்ற கேள்வி எழலாம் உங்களுக்கு. உங்கள் திருமண நாளன்று ஒரு ராக் ஸ்டாரை போல் காட்சியளிக்க எளிய மற்றும் சிறந்த வழி இல்லையா என்ன? கவலையை விடுங்கள்! ஒரு வழி உள்ளது - அது தான் வீட்டு முடி சிகிச்சைகள்!

திருமண நாளன்று நீங்கள் பளிச்சென இருக்க, திருமணத்திற்கு முன்பு முடியை எப்படி பராமரிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் பொறுமையாக நாங்கள் கூறப்போகும் டிப்ஸை படியுங்கள்! முக்கியமாக இந்த டிப்ஸ்கள் அனைத்தும் ஆண்களுக்கும் பொருந்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மன ரீதியாக தயாராகுதல்

மன ரீதியாக தயாராகுதல்

வீட்டு முடி சிகிச்சைகளை தான் பின்பற்ற வேண்டும் என்று முதலில் மன ரீதியாக உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். குறைந்தது 6 மாத காலத்திற்கு முன்பாகவே இந்த சிகிச்சைகளை தொடங்கி விடுங்கள். திருமண தேதி முடிவான பிறகு, ஒரு நிமிடத்தை கூட வீணாக்கக் கூடாது. வீட்டு சிகிச்சைகள் என்பது ஒரே இரவில் மாயங்களை நிகழ்த்தி விடாது என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். ரசாயனங்களின் ஆபத்தான தாக்கங்களில் இருந்து உங்கள் முடியை பாதுகாக்க இயற்கை மற்றும் மூலிகை பொருட்களையே பயன்படுத்துங்கள்.

ஆழமான கண்டிஷனிங்

ஆழமான கண்டிஷனிங்

ஆழமான கண்டிஷனிங் சிகிச்சைக்கு, வெறும் தயிரில் முட்டை ஒன்றை கலந்திடவும். வழுவழுப்பான கலவையை தயார் செய்ய, அவற்றை நன்றாக அடித்திடவும். பின் உங்கள் முடியில் தடவவும். இதனை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் உங்கள் முடி புத்துணர்வு பெறும். இதை செய்வதன் மூலம் ஆழமான புரத கண்டிஷனிங் நன்மையை உங்கள் முடி பெறும். பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயின் கலவையை கொண்டு வாரம் ஒரு முறை உங்கள் முடிக்கு சிகிச்சை அளித்திடவும். தலைப்பாகை சிகிச்சையைப் பின்பற்றி இயற்கையான முறையில் உங்கள் முடியை புத்துணர்வு பெறச் செய்யுங்கள்.

முடி பிரச்சனைகளுக்கான சிகிச்சைகள்

முடி பிரச்சனைகளுக்கான சிகிச்சைகள்

சீக்கிரமாகவே சிகிச்சையை தொடங்கி விட்டால், முடி பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதும், அவற்றை நீக்குவதும் சுலபாகி விடும். உதாரணத்திற்கு, நீங்கள் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை ஜூஸை கலந்து, அதனை சீரான முறையில் பயன்படுத்தினால், இந்த தொல்லை நீங்கும். நீங்கள் முடி கொட்டும் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை தவிர்க்க வெங்காய ஜூஸை பயன்படுத்துங்கள். ஆனால் இவற்றை சீரான முறையில் பின்பற்றி வந்தால் தான் இந்த பிரச்சனைகள் முழுமையாக நீங்கும்.

ரசாயனங்களை விட்டெறியுங்கள்

ரசாயனங்களை விட்டெறியுங்கள்

ரசாயனம் சார்ந்த முடி பராமரிப்பு மற்றும் அழகு சாதனங்களை வேண்டாம் என விட்டெறியுங்கள்! மாறாக, இயற்கையான சோப்பு நட் ஷாம்புக்களை பயன்படுத்துங்கள். அப்படி இல்லையென்றால் தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து அதனை ஷாம்புவாக பயன்படுத்தலாம்.

ஹேர் டைகளை தவிர்க்கவும்

ஹேர் டைகளை தவிர்க்கவும்

முடிக்கு ஹேர் டை அடிப்பதை அடியோடு மறந்து விடுங்கள். மாறாக, மருதாணி கலவையை பயன்படுத்தி முடிக்கு நிறம் கொடுங்கள். இதுப்போக வாரம் மூன்று முறை, உங்கள் முடி எண்ணெய் பதமாக இருந்தால் ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு முடியை அலசுங்கள். இதுப்போக காபி பொடி மற்றும் தேநீருடன் ஊற வைத்த மருதாணியையும் பயன்படுத்தலாம். இதனை சீரான முறையில் பயன்படுத்தினால் உங்கள் நரை முடிகள் வேகமாக மறையும். இவற்றை சீக்கிரமாக பின்பற்ற தொடங்கினால், உங்கள் முடிக்கு போதிய அளவில் இயற்கை வீட்டு சிகிச்சைகளின் பயன் கிடைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Steps To Take Care Of Your Hair Before Marriage

Are you excited about your marriage and are all set to look the best on your wedding day? Then how do you plan to go about it? Rush to the nearest beauty parlour and have your hair stylised with expensive products?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter