Latest Updates
-
லான்ச்பாக்ஸிற்கு ஒருடைம் இந்த பீட்ருட் தேங்காய் சாதம் செய்யுங்க - குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
இன்னிக்கே உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்!
இயற்கையான முறையில் முடியை நேராக்க சில அருமையான டிப்ஸ்....
நவீன நாகரீகத்தில் பலவிதமான வாழ்க்கை முறைகளும் நாள்தோறும் புதிய ஃபேஷன்களும் உருவாகி வருகின்றன. அவற்றில் ஒன்று முடியை நேராக்கிக் கொள்வது. பெண்கள் தங்கள் கூந்தலை நேராக்கிக் கொள்ள பல ஆயிரங்களை வாரி வழங்குகிறார்கள். ஆனால் அது கடைசியில் உங்கள் முடியை ஆரோக்கியமானதாக மாற்றாமல் கேடுகளையே விளைவிக்கின்றது.
பல வேதிப்பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவதால், முடியின் வலு குறைந்து திறனைக் குலைக்கின்றது. இது முடிக்கு மட்டுமல்ல சில சமயம் உடலிற்கே கேடாக அமைகின்றது. எனவே வீட்டிலேயே இயற்கைப் பொருட்களைக் கொண்டு, பாதிப்பின்றி உங்கள் முடியை நேராக்க முடியும். உங்கள் முடிக்கு இயற்கையான அழகைக் கூட்ட நீங்கள் தயாரா...?

பால்
ஸ்ப்ரே செய்யக்கூடிய பாட்டிலில், ஒரு கப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை எடுத்துக் கொண்டு அதே அளவு பாலைக் கலந்து கொள்ளவும். பிறகு அதை உங்கள் முடியில் அனைத்து இடங்களிலும் ஸ்ப்ரே செய்யவும். பிறகு நன்கு பரவுமாறு தடவி கலந்து விடவும். பின் ஒரு அகலமான சீப்பை எடுத்துக்கொண்டு முடியில் உள்ள சிக்கல்களையும், ஒட்டுகளையும் நீக்கவும். அப்போது தான் முடி முழுவதும் பால் பரவும். குளிப்பதற்கு முன் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன் இதைச் செய்து பின்னர் தலைக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு அலசவும். அவ்வளவு தான்! நீங்கள் அடுத்த முறை தலையை அலசும் வரை முடி நேராக குலையாமல் இருக்கும்.

பால் மற்றும் தேன்
பால் மட்டுமே உங்கள் முடியை நேராக்கும். ஆனால், தேனானது உங்கள் முடிக்கு ஆரோக்கியமளிக்கும். இதனால் முடி வறண்டு போகாமலும் எளிதில் கையாளக்கூடியதாகவும் இருக்கும்.

முல்தானி மெட்டி
ஃபுல்லர்ஸ் எர்த் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூல்தானி மெட்டி ஒரு கப் அளவு எடுத்துக் கொண்,டு அதில் ஒரு முட்டையும் 5 ஸ்பூன் அரிசி மாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு அகலமான சீப்பை எடுத்து முடியிலுள்ள சிக்கலைக் களையவும். பின் குழைத்து வைத்துள்ள கலவையை தடவும் முன் நன்கு 2-3 முறை தலையை வாரவும். பின்னர் வாரும் போது கலவையைத் தடவவும். முடிந்தவரை முடியை நேராக வைத்துக் கொள்ளவும். முடி முழுவதும் காய குறைந்தது 40 நிமிடங்கள் பிடிக்கும். பின்னர் முடியை சுத்தமான நீரில் அலசவும். இந்த கலவையை மாதம் இருமுறை முடியை நேராக்கப் பயன்படுத்துங்கள்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் முட்டை
இரண்டு முட்டைகளை எடுத்துக் கொண்டு நன்கு அடித்துக் கலக்கவும். அதில் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்க்கவும். ஒரு பிரஷை வைத்து ஸ்கால்ப்பில் படும்படி முடியில் தடவவும். தலையை சில மணிநேரம் காயவிடவும். பின்னர் ஷாம்பு போட்டு நன்கு அலசவும். இது உங்கள் முடியை நன்கு நேராக்குவதோடு நல்ல வலுவையும் தரும்.

தேங்காய்ப் பால் மற்றும் எலுமிச்சை சாறு
தேங்காயை நன்கு துருவி அதை பிழிந்து பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து கொள்ளுங்கள். அதை நன்கு குழைத்து பசை போன்று செய்து கொள்ளுங்கள். அந்த கலவையை ஃபிரிட்ஜில் ஒரு நாள் வைக்க வேண்டும். மறுநாள் அதை தலையில் தடவி நன்கு ஸ்கால்ப்பில் மசாஜ் செய்யவும். சூடான ஒரு டவலை முடியில் சுற்றி முடி வெளியில் தெரியாதவாறு மூடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து நன்கு அலசவும். வாரத்திற்கு மூன்று முறையேனும் இதைச் செய்தால் உங்கள் முடி வலுவாகி நேராக ஆவதை நீங்கள் விரைவிலேயே உணர முடியும்.

சூடான தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சிறிது எடுத்துக் கொண்டு சூடேற்றி நன்கு தலையில் தடவவும். அதை அரை மணிநேரம் ஒரு சூடான டவல் கொண்டு மூடிக் கட்டிவிடவும். பின்னர் ஷாம்பு போட்டு நன்கு தலையை அலசி, மீண்டும் முடியை துணியால் சில நிமிடங்கள் கட்டி மூடவும் (சராசரியாக 5 நிமிடங்கள்). பின்னர் இயற்கையாக உரல விடுங்கள். முடிவில் உங்கள் முடி பளபளப்புடனும், இயற்கையாகவே நேராகவும் ஆவதைக் காண்பீர்கள்.



Click it and Unblock the Notifications