Latest Updates
-
குளிப்பதற்கு சிறந்தது குளிர்ந்த நீரா? வெந்நீரா? உடலில் முதலில் எந்தப் பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்? -
முட்டையும், காளானும் இருந்தால் இந்த மாதிரி வித்தியாசமா ஆம்லெட் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
நவம்பர் 12-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு புதிய வருமான வழிகள் உருவாகும்! -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிற்குள் இருக்கும் கிராமம் - இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 11, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நவம்பர் 13-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வது இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்தில் தள்ளப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி வித்தியாசமான குருமா செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
உங்கள் முழங்கால் ரொம்ப கருப்பா இருக்கா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை வைச்சே வெண்மையாக்கிரலாம்
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்!!!
தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலில் வாழ்வதால் பல பிரச்சனைகளை சந்திக்கிறோம். அதில் ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டும் கூந்தல் பிரச்சனையும் ஒன்று. எப்படியெனில் நம்மை சுற்றி தூசி அதிகம் நிறைந்திருப்பதால், அந்த தூசியானது தலையில் படிந்து மயிர்கால்களைச் சுற்றி தங்கி மயிர்கால்களின் ஆரோக்கியத்தை கெடுத்து, கூந்தலின் வளர்ச்சியை தடுப்பதோடு, கூந்தல் உதிர்தலையும் ஏற்படுத்துகிறது.
இதனால் பலர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி, உடலில் போதிய சத்துக்கள் இல்லாவிட்டாலும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்களானது கிடைக்காமல், கூந்தல் வளர்ச்சியானது தடைப்படுகிறது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும் ஒருசில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அவற்றை உட்கொண்டு வந்தால், கூந்தல் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, கூந்தல் ஆரோக்கியமாக வளரும்.

சால்மன்
சால்மன் மீனில் வைட்டமின் டி மற்றம் புரோட்டீன் போன்றவற்றுடன் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இதனை வாரம் ஒருமுறை தவறாமல் உட்கொண்டு வந்தால், கூந்தல் வளர்ச்சியானது அதிகரிப்பதுடன், கூந்தலும் வலுவுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

மஞ்சள் நிற குடைமிளகாய்
மஞ்சள் நிற குடைமிளகாயில் ஆரஞ்சு பழத்தை விட 5 மடங்கு அதிக அளவில் வைட்டமின் சி சத்தானது நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் சியானது உடலில் இருந்தால், அவை கூந்தலை வலுவோடு வைப்பதுடன், மயிர்கால்களை ஆரோக்கியமாகவும், முடி வெடிப்பு போன்றவை ஏற்படாமலும் தடுக்கும்.

கடல் சிப்பி
உடலில் ஜிங்க் குறைபாடு இருந்தால், முடி உதிர்தல் மற்றும் ஸ்காப் ஆரோக்கியத்தை இழந்து இருக்கும். எனவே ஜிங்க் அதிகம் நிறைந்த கடல் சிப்பியை அவ்வப்போது உடகொண்டு வந்தால், அதனால் ஜிங்க் கிடைப்பதுடன், கால்சியமும் அதிக அளவில் கிடைக்கும்.

முட்டை
முட்டையில் கூந்தலுக்கு வேண்டிய பயோடின் என்னும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெள்ளைக்கருவை விட, மஞ்சள் கரு தான் மிகவும் நல்லது. எனவே தினமும் ஒரு முட்டையை சாப்பிட்டு வாருங்கள்.

சூரியகாந்தி விதை
சூரியகாந்தி விதைகளில் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ போன்றவை நிறைந்துள்ளது. இவை ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன், கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

அவகேடோ
அவகேடோவில் ஃபேட்டி ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், அவற்றை உட்கொண்டு வந்தால், சருமம் நன்கு பொலிவோடு மென்மையாக காணப்படும. மேலும் அதனை அரைத்து, சிறிது புளித்த தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.

பாதாம்
பாதாம் கூட முடியின் வளர்ச்சியை, அடர்த்தியையும் அதிகமாக்கும். ஏனெனில் இவற்றில் பயோடின் வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் தவறாமல் ஒரு மாதத்திற்கு உட்கொண்டு வந்தால், முடி ஆரோக்கியமாக வளர்வதை நன்கு உணரலாம்.



Click it and Unblock the Notifications
