For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் தேங்காய் பால் ஹேர் பேக்குகள்!!!

By Maha
|

அனைவருக்குமே வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் தலைக்கு மசாஜ் செய்வது நன்கு தெரியும். இதனால் கூந்தலுக்கு எண்ணெய் பசை அதிகரித்து, வறட்சியால் கூந்தல் உதிர்தலை தடுக்கலாம் என்பது தெரிந்தது. ஆனால் எப்படி தேங்காய் எண்ணெய் கூந்தல் உதிர்தலைத் தடுப்பதில் சிறந்த பொருளாக உள்ளதோ, அதேப் போல் தேங்காய் பாலும் கூந்தல் உதிர்தலைத் தடுக்கும். அதற்கு தேங்காய் பாலை கூந்தலுக்கு தடவினால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, தேங்காய் பால் கூந்தலை அடர்த்தியாக்கவும் உதவும்.

எனவே சமைக்கப் பயன்படும் தேங்காயை கூந்தல் பராமரிப்பிற்கு பயன்படுத்தி, கூந்தல் உதிர்தலைத் தடுத்து, நீளமாக அடர்த்தியான கூந்தலைப் பெறுங்கள். இப்போது அந்த தேங்காய் பாலை வைத்து எப்படியெல்லாம் ஹேர் பேக் போடலாம் என்று பார்ப்போமா!!!

Coconut

தேங்காய் பால் ஹேர் பேக்குகள்:

தேங்காய் பால்: தேங்காய் பால் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள். இந்த தேங்காய் பால் கடைகளிலும் கிடைக்கும் அல்லது வீட்டிலேயே செய்யலாம். அதற்கு ஒரு தேங்காயை நன்கு அரைத்து, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தலைக்கு குளிக்கும் போது தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போல் இருக்கும. வேண்டுமெனில் இதனை ஷாம்பு போட்டு குளித்தப் பின்னரும் போடலாம். இதனால் கூந்தல் நன்கு மென்மையுடன் இருக்கும்.

தேங்காய் பால் மற்றும் தேன்: இந்த முறையில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, தேங்காயை நறுக்கி போட்டு, நீரை நன்கு 5-10 நிமிடம் கொதிக்கவிட்டு, பின் அதனை குளிர வைத்து, அதில் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி, 40 நிமிடம் ஊற வைத்து, பின் கூலுந்தலை அலசினால், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

தேங்காய் பால், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு: தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொண்டு, அத்துடன் தயிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, கூந்தலில் தடவி, ஊற வைத்து குளித்தால், அதில் உள்ள எலுமிச்சை சாறு கூந்தல் உதிர்தலை தடுத்து, ஸ்கால்ப்பில் இருக்கும் பாக்டீரியாவை அழித்துவிடும். அதுமட்டுமின்றி எலுமிச்சை சாறு பொடுகுத் தொல்லையை போக்கும். மேலும் இதில் உள்ள தயிரும் கூந்தலுக்கு ஏற்ற ஒரு பொருள். எனவே இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் உதிர்தலோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

தேங்காய் பால் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய்: இயற்கையாகவே கூந்தல் உதிர்தலை தடுப்பதற்கு இந்த ஹேர் பேக்கை ட்ரை செய்து பார்க்கலாம். இதற்கு தேங்காய் பாலை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது வெதுவெதுப்பான நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து, தலைக்கு மசாஜ் செய்து, 25 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் ஷாம்பு போட்டு குளித்தால், சிறந்ததாக இருக்கும்.

தேங்காய் பால் மற்றும் வெந்தயம்: இந்த ஹேர் பேக்கில் வெந்தயப் பொடியில் தேங்காய் பால் ஊற்றி, பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போன்று மென்மையாக, பட்டுப் போன்று மின்னும்.

இவையே கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் தேங்காய் பால் ஹேர் பேக்குகள். வேறு ஏதாவது தேங்காய் பாலை வைத்து செய்யக்கூடிய ஹேர் பேக்குகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Treat Hair Fall With Coconut Milk | கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் தேங்காய் பால் ஹேர் பேக்குகள்!!!

We all know the benefits of massaging hair with hot coconut oil. Did you know that you can treat hair fall by using coconut milk as well? Applying fresh coconut oil nourishes your hair and can help you treat hair fall and scalp problems. Here are ways to treat hair loss with coconut milk.
Story first published: Monday, January 28, 2013, 10:22 [IST]
Desktop Bottom Promotion