Latest Updates
-
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
பிக்ஸி ஸ்டைலில் வெட்டிய முடியை பராமரிக்க சில டிப்ஸ்...
இன்றைய நவநாகரீக காலத்தில் பெண்கள் பல விதமான சிகை அலங்காரத்தில் ஈடுபடுகின்றனர். பல பெண்கள் அடிக்கடி தலை முடி ஸ்டைலை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். நீண்ட கூந்தல் என்ற மோகம் எல்லாம் குறைந்து இப்பது ஆண்களை போல் முடியின் நீளத்தை குறைவாக வைக்க பல பெண்கள் விரும்பின்றனர். அது தலைமுடியை பராமரிப்பதற்கும் அவர்களுக்கு சௌகரியமாக இருக்கிறது. அப்படி உள்ள பல ஸ்டைல்களில் ஒன்று தான் பிக்ஸி வகை. இது கூந்தலை குட்டையாக (கிட்டத்தட்ட ஆண்களின் தலைமுடியை போல) வெட்டும் வகையாகும்.
இன்றைய காலத்தில் பிக்ஸி வகை தலை முடி நாகரீகமாக கருதப்படுகிறது. ஏன் நீங்களே கூட பிக்ஸி பேஷன் படி கூந்தலை மாற்றி அமைக்க ஒரு நாள் உங்கள் சலூனுக்கு செல்லும் காலம் வரலாம். ஆனால் அதன் படி கூந்தலை வெட்டிக் கொள்வது பெரிதல்ல. அதற்கு பிறகு அதனை பராமரிப்பது என்பது தான் பெரிய சவாலே. அதனை சரிவர பராமரிக்க நீங்கள் கற்றுக் கொண்டால் தான் பிக்ஸி முறையில் நீங்கள் மாற்றிய உங்கள் தலைமுடி அழகை கொடுக்கும்.

தலைமுடி குட்டையாக இருந்தால் அதற்கான பராமரிப்பு குறைவு தான் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் உங்கள் மயிர்த்தண்டு ஆரோக்கியமாக நீடிக்கவும் சரியாக வளரவும் சிறிதளவாவது பராமரிப்பு கண்டிப்பாக தேவை. அது குறைவான பராமரிப்பு தானே தவிர பராமரிப்பே தேவை இல்லை என்று கூறி விட முடியாது. அதனால் சிறிதளவு அக்கறை கண்டிப்பாக தேவைப்படுகிறது. பொதுவாகவே தலை முடியை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது அவசியமாக விளங்குகிறது. அதனால் பிக்ஸி ஸ்டைல் படி தலைமுடியை மாற்றி அமைக்கும் போது இன்னும் என்ன தேவைப்படும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இது உங்களுக்கான முழுமையான பராமரிப்பு டிப்ஸ். இவற்றில் உங்களுக்கு ஏற்றவைகளை அல்லது அனைத்தையும் கூட நீங்கள் பின்பற்றி உங்கள் முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நேரான கூந்தலும்.. பிக்ஸி ஸ்டைலும்..
உங்கள் தலைமுடி குட்டையாகவும் நேராகவும் இருக்கிறதா? அப்படியானால் அதனை சுத்தமாக வைத்துக் கொள்ள ட்ரை (முடியை வறட்சியாக வைத்துக் கொள்ள) ஷாம்பூவை பயன்படுத்துங்கள். தலைமுடி சுத்தமாக இருந்தாலும் கூட கூடுதல் கவனம் தேவை. குட்டையான தலைமுடி நேராக இருந்தால் அவை பிசுபிசுப்பாக இருக்கும். அதனால் உங்கள் தலைமுடியை சீரான முறையில் ஷாம்பூ போட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடிந்தால் இரவு நேரத்தில் முடியை கழுவி, தடவிய பின் கழுவ தேவையில்லாத கண்டிஷனரை தடவி விட்டு, ட்ரையரை கொண்டு உலர்த்துங்கள். இதனை பகல் நேரத்தில் செய்ய நேரம் கிடைக்காதனாலேயே இரவில் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
அலை போன்ற பிக்ஸி ஸ்டைலும்
இயற்கையான தோற்றத்தை பெற முடியை அப்படியே விட்டு விடலாம். அல்லது கொஞ்சம் ஜெல் தடவி தலை முடியை நேராக்கலாம். அலை போன்ற பிக்ஸி ஸ்டைல் வைத்துக் கொண்டால் குறைவான பராமரிப்பே போதுமானது. எங்கே போக வேண்டுமானாலும் அப்படியே செல்லலாம். சில கண்டிஷனர் மற்றும் ஜெல்களை பயன்படுத்தி தலைமுடியை படிந்து வாரிக் கொள்ளலாம். கண்டிப்பாக தலைமுடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாரம் இருமுறை ஷாம்பூ போட்டு குளித்து முடியை உலர்த்துங்கள். உங்கள் முடி ஸ்டைலாக காட்சி அளிக்க வேண்டுமானால் தலைமுடியை சூடுபடுத்த வேண்டும்.
சுருட்டை முடியும்.. பிக்ஸி ஸ்டைலும்..
உங்கள் தலை முடி சுருள் சுருளாக இருந்தால் அவ்வகை தலை முடிக்கு பராமரிப்பு அதிகமே. வாரம் ஒரு முறை உங்கள் தலை முடியை கழுவ வேண்டும். ஆனால் முடியை ஒழுங்காக பராமரிக்க முடியை கழுவ தேவையில்லாத கண்டிஷனர் மற்றும் ஜெல்லை பயன்படுத்துங்கள். சரியான தோற்றத்தை கொடுக்க முடியை ட்ரையரை கொண்டு உலர்த்த வேண்டும். கை குட்டை அல்லது ஹேர் பாண்ட் போன்றவற்றை பயன்படுத்தி உங்கள் அழகை இன்னமும் அதிகரிக்கலாம்.
பிக்ஸி ஸ்டைலில் களை கட்டுங்கள்
உங்கள் கூந்தல் எந்த வகையாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; ஆனால் உங்கள் பிக்ஸி வகை முடியை எப்படி ஸ்டைலாக மெருகேற்றுவது என்பதை கற்றுக் கொள்ளுங்கள். நேரான தலை முடியை கொண்டவர்கள் நேர்த்தியான அழகிய தலைமுடியே சிறந்தது. அது உங்கள் கண்களையும் கன்னங்களையும் தனியாக எடுத்துக் காட்டும்.
உச்சந்தலையில் இருந்து நீளமாக முடி விழுந்தால், பிக்ஸி ஸ்டைலால் காலை எழுந்தவுடன் தலை சீவாமல் அப்படியே வெளியே செல்லலாம். அதனை ஸ்டைலாக மாற்ற வேண்டும் என்று நீங்கள் மெனக்கெட தேவையில்லை. அப்படியே இயற்கையாக விட்டு விடலாம். ஸ்பைக் வகை ஸ்டைலும் புகழ் பெற்று இருப்பதால் நேரான அல்லது அலை அலையான முடியை விரும்புபவர்கள் அதனை தேர்ந்தெடுக்கலாம். சுருள் முடியை கொண்டவர்கள் இதனை தவிர்க்கலாம். அதற்கு காரணம் சுருள் முடியோடு இது ஒத்துப் போவதில்லை.
அடுக்குகளை கொண்ட பிக்ஸி ஸ்டைல் எந்த வகையான முடியை கொண்டவர்களும் ஒத்துப் போகும். சுருள் முடி உள்ளவர்களுக்கும் கூட அது ஒத்துப் போகும். அதனால் பல வகை தோற்றத்தை அது உண்டாக்கும்.
இப்போது பிக்ஸி வகை ஸ்டைலை எப்படி பராமரிப்பது என்பதை தெரிந்து கொண்டீர்களா? அழகிய ஸ்டைலான பிக்ஸி வகை முடியை அமைத்து நன்றாக பராமரியுங்கள். வசீகர தோற்றத்துடன் நீங்கள் ஸ்டைலாக காட்சி அளிப்பது உறுதி. சரி என்ன வகை பிக்ஸி ஸ்டைலை வைக்க போகிறீர்கள்?



Click it and Unblock the Notifications











