For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? நெல்லிக்காய் யூஸ் பண்ணுங்க...

By Maha
|

சாதாரணமாகவே நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் அதனை சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் தான் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துவார்கள். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இவை உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைக் கொடுத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

அத்தகைய நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது. தற்போது நிறைய மக்கள் ஆம்லா/நெல்லிக்காய் எண்ணெய், நெல்லிக்காய் இருக்கும் ஹென்னா போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது, கூந்தல் உதிர்தலை தடுப்பது, அடர்த்தியான கூந்தலை வளரச் செய்வது என்ற பலனைத் தருகின்றன. மேலும் நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக இருக்கும். ஏனெனில் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றிவிடும் என்பதால் தான்.

சரி, இப்போது அத்தகைய நெல்லிக்காயை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், என்ன பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூந்தல் உதிர்தல்

கூந்தல் உதிர்தல்

தினமும் நெல்லிக்காய் எண்ணெய் கொண்டு, தலைக்கு 45 நிமிடம் மசாஜ் செய்து, பின் தலைக்கு குளித்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.

அடர்த்தியில்லாத கூந்தல்

அடர்த்தியில்லாத கூந்தல்

கூந்தல் அடர்த்தியில்லாமல் இருந்தால், அப்போது கூந்தலை சுருட்டையாக்கி புதிய ஹேர் ஸ்டைல் செய்வதற்கு பதிலாக, நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்தினால், கூந்தல் அடர்த்தியாகும். இல்லையெனில் நெல்லிக்காய் பொடியை, சீகைக்காய் பொடி மற்றும் ஹென்னாவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்து வந்தால், கூந்தல் அடர்த்தியாகும்.

பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லை

தலையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகுத் தொல்லை. அத்தகைய பிரச்சனையைப் போக்குவதற்கு நெல்லிக்காய் பயன்படுத்தினால், தலை நன்கு சுத்தமாகவும் பொடுகின்றி இருக்கும்.

ஹேர் கண்டிஷனர்

ஹேர் கண்டிஷனர்

நெல்லிக்காய் ஒரு இயற்கையான ஹேர் கண்டிஷனர். எனவே இதனை தலைக்கு போட்டுக் குளித்தால், தலைக்கு கண்டிஷனர் போட்டது போன்று இருக்கும்.

நரைமுடி

நரைமுடி

மன அழுத்தம், செரிமானப் பிரச்சனை மற்றும் ஆரோக்கியமற்ற டயட் காரணமாக நரைமுடியானது இளமையிலேயே வந்துவிடுகிறது. எனவே இதனை தடுக்க, தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து, நெல்லிக்காய் எண்ணெய் தடவி வந்தால், நரைமுடியைத் தடுக்கலாம்.

அரிப்பு

அரிப்பு

தலையில் அதிகமான அரிப்பு ஏற்பட்டால், நெல்லிக்காய் பொடியுடன், தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் ஏற்படும் அரிப்புகள் நீங்கும்.

கூந்தல் வளர்ச்சி

கூந்தல் வளர்ச்சி

நெல்லிக்காயை தலைக்கு பயன்படுத்தும் போது, அது மயிர்துளைகளை நன்கு ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

பொலிவிழந்த முடி

பொலிவிழந்த முடி

போதிய கூந்தல் பராமரிப்பு இல்லாததாலும், அதிக மாசுபாடு காரணமாகவும், கூந்தலானது பொலிவிழந்துவிடுகிறது. எனவே இதனை சரிசெய்யவும், கூந்தலை வலுவாக்கவும், நெல்லிக்காயை பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

முடியின் நிறம் மாறுவது

முடியின் நிறம் மாறுவது

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் கூந்தல் வறட்சி, நறம் மாறுதல் போன்றவை ஏற்படுகிறது. எனவே அவ்வாறு முடியின் நிறம் இளமையிலேயே மாறாமல் இருக்க, நெல்லிக்காய் எண்ணெயை தினமும் தடவி கூந்தலை பராமரிப்பது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hair Care With Amla (Indian Gooseberries) | ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? நெல்லிக்காய் யூஸ் பண்ணுங்க...

Amla oil is applied to improve hair growth and get thick hair. Want to find out how to care for your hair using amla? Check out...
Story first published: Tuesday, April 9, 2013, 13:28 [IST]
Desktop Bottom Promotion