Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
கூந்தல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் தேவை!!!

வைட்டமின் ஏ சத்து கூந்தலின் வளர்ச்சி மற்றும் வலுவில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. அதற்காகத் தான் தலைக்கு குளித்தப் பின் கண்டிஷனரைப் பயன்படுத்துகிறோம். அதுமட்டுமல்லாமல் வைட்டமின் பி-இல் இன்னும் பல வகைகள் உள்ளன. அதில் வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் பி5 சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, கூந்தல் உதிர்வதை தடுத்து, வெள்ளை முடிகள் வருவதையும் தடுக்கிறது. இத்தகைய சத்துக்கள் பால் பொருட்கள், தானியங்கள், இறைச்சி மற்றும் முட்டையில் அதிகம் இருக்கின்றன.
வைட்டமின் சி மற்றும் டி சத்துக்களும், அதே வேலையைத் தான் செய்கிறது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதால், அதில் இருக்கம் இரும்புச் சத்துக்களை உறிஞ்சி, கூந்தல் உதிர்வது குறைந்து கூந்தல் ஆரோக்கியமாக, நீளமாக வளரும். சொல்லப்போனால் வைட்டமின் சி, வைட்டமின் ஏ-யை விட மிகுந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட். இந்த வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை உண்பதால், தலையில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் நன்கு வேலை செய்து, கூந்தலுக்கு தேவையான எண்ணெயை அளிப்பதோடு, கூந்தலை ஆரோக்கியமாக வளரச் செய்கிறது.
வைட்டமின் ஈ தான் மிக முக்கியமான சத்தாகும். இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்டால், உடலில் இரத்த ஓட்டம் தலையில் சரியாக நடப்பதோடு, புதிதான செல்களை உருவாக்கி, கூந்தலை வளரச் செய்கிறது. இந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் கிடைப்பது மிகவும் ஈஸியானது. அதற்காகத் தான் நம் முன்னோர்கள் சொல்வார்கள், கிடைக்கும் உணவுகளை உண்டு வாழ்ந்தால், எந்த பிரச்சனையும் உடலில் வராமல் இருக்கும்.
ஆகவே வைட்டமின் அதிகம் இருக்கும் உணவுகளான இறைச்சியில் சிக்கன், மட்டன், மாட்டு இறைச்சி, முட்டை, பால் பொருட்கள், காய்கறிகள், கீரை, பழங்கள் மற்றும் இதர தானியங்கள் என்று அனைத்தையும், தினமும் உணவில் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால், எந்த குறையுமின்றி ஆரோக்கியமாக வாழலாம்.



Click it and Unblock the Notifications
