For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுருட்டை முடியை ஈஸியாக பராமரிக்க!!

By Maha
|

Hair Care
முகத்திற்கு அழகைத் தரும் கூந்தலில் பல வகைகள் இருக்கின்றன. அதில் சிலருக்கு சுருட்டை முடி பிடிக்கும், சிலருக்கு நேரான முடி பிடிக்கும். ஆனால் இயற்கையிலேயே சுருட்டை முடி இருக்கும் சிலருக்கு, அந்த முடியானது பிடிக்காது, ஆனால் நேரான முடி இருப்பவர்களுக்கு சுருட்டை முடி மிகவும் பிடிக்கும். அவ்வாறு நேரான முடி இருப்பவர்கள் சுருட்டை முடி வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்று முடியை சுருட்டையாக மாற்றிக் கொள்வர். அவ்வாறு மாற்றியப் பின்னர், அதனை முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டால், சுருட்டை முடி போய்விடும். ஆகவே அவ்வாறு சுருட்டை முடியை பராமரிக்க ஒரு சில இயற்கை வழிகள் இருக்கின்றன. அந்த இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

எண்ணெய் : அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக சுருட்டை முடிக்கான சிகிச்சையை அழகு நிலையங்களுக்குச் சென்று செய்து கொண்ட பின்னர், கூந்தலுக்கு முறையாக எண்ணெய் தடவாமல் இருந்தால் கூந்தலானது சுருட்டையை இழந்துவிடும். ஆகவே தினமும் 4-5 துளிகள் பாதாம் எண்ணெயால் அரை மணிநேரம் நன்கு மசாஜ் செய்து, பின்னர் கூந்தலை அலச வேண்டும். இவ்வாறு செய்தால் கூந்தல் எண்ணெய் பசையுடன் இல்லாமல், அழகாக ஆரோக்கியமாக இருக்கும்.

குளிர்ந்த தண்ணீர் : எப்போதும் குளிர்ந்த தண்ணீராலேயே கூந்தலை அலச வேண்டும். ஏனெனில் சுருட்டை முடியாக மாற்றிய பின்னர், சுடு தண்ணீர் சுருட்டையை போக்கிவிடும். ஆகவே குளிர்ந்த நீரால் கூந்தலை அலசும் போது, கூந்தலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, கூந்தலும் உதிராமல் இருக்கும். மேலும் கூந்தலை துணியால் துடைக்கும் போது மென்மையாக துடைக்க வேண்டும்.

ரோஸ்மேரி மற்றும் முட்டை பேக் : சுருட்டை முடியாக மாற்றியவர்கள், ரோஸ்மேரி மற்றும் முட்டை பேக்கை செய்தால், முடியானது நன்றாக இருக்கும். அதற்கு இரண்டு முட்டை, ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அதில் 4-5 துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை விட்டு, கூந்தலுக்கு தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். இதனால் அதில் இருக்கும் முட்டை கூந்தலுக்கு எண்ணெய் பசையை தருவதோடு, ரோஸ்மேரி சுருட்டையை பாதுகாக்கும். ஆகவே இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முடியானது நன்றாக சுருட்டையோடு காணப்படும்.

கற்றாழை : இரண்டு டேபிள் ஸ்பூன் காற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அதனை தலைக்கு நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதனால் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, ஈரப்பசையோடும் இருக்கும். வேண்டுமென்றால் கற்றாழையால் ஆன ஹேர் பேக்குடன் 4-5 துளிகள் ஜிஜோபா எண்ணெய் விட்டு, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளிக்கலாம். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.

புதினா எண்ணெய் : புதினா சுருட்டை முடியை பராமரிக்க உதவும் ஒரு சிறந்த பொருள். 1 டேபிள் ஸ்பூன் தேன், 4-5 துளி புதினா எண்ணெய் மற்றும் 3-4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு நன்கு கலந்து, கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற விடவும். பின் அதனை ஷாம்புவால் அலச வேண்டும். இதனால் முதலில் இருந்ததை விட தற்போது சுருட்டை முடியானது அழகாக பொலிவோடு இருக்கும்.

எனவே இயற்கையில் சுருட்டை முடி இல்லாதவர்களுக்கு, மேற்கூறியவை ஒரு சிறந்த பராமரிப்பு முறைகள். இவ்வாறெல்லாம் செய்தால் கூந்தலானது சுருட்டையோடு காணப்படுவதோடு, ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் இருக்கும்.

English summary

natural care for permed hair | சுருட்டை முடியை ஈஸியாக பராமரிக்க!!

Are you worried about your permed hair? Once you perm your hair you need to maintain it with great care. Instead of going to expensive salons and spending huge on products use some natural hair care ways to maintain your perm. Care for your permed hair using these methods.
Story first published: Monday, July 30, 2012, 12:50 [IST]
Desktop Bottom Promotion