Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
உங்க முடி கொட்டுவதை நிறுத்தி இழந்த முடிகளை மீண்டும் வளர வைக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க...!
Hair Care Tips: உங்கள் முடியை பராமரிக்க என ஷாம்புகள், சீரம்கள் மற்றும் எண்ணெய்கள் எல்லாவற்றையும் பயன்படுத்துகிறோம். அவை நமது தலைமுடி பிரச்சனையை சரி செய்யும் என நம்புகிறோம். ஆனால் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியம் அமைகிறது. உங்கள் முடிக்கு புரதம், இரும்பு சத்துக்கள், மற்றும் வைட்டமின்கள் தேவை. அதனுடன் தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
நமது இந்திய உணவு வகைகளில் இயற்கையாகவே முடிக்கு தேவைப்படும் சத்துக்கள் நிரம்பி முடிவளர்ச்சியை ஊக்குவித்து முடி உதிர்வை குறைக்கும் பொருட்கள் அதிக அளவில் இருக்கின்றன. அதிக அளவில் செலவு செய்து வாங்காமல் எளிதாக கிடைக்கும் நெல்லிக்காய் முதல் பூசணி விதை வரை சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளால் நிரம்பி இருக்கிறது.

தலைமுடியின் வலிமைக்கு வெந்தய விதைகள்
இரவு தூங்க செல்லும் முன் வெந்தயத்தை தண்ணீரில் அலசி ஊறவைக்கவும். மறுநாள் காலையில் ஸ்மூத்தி அல்லது குழம்புகளில் சாப்பிடலாம். இதில் அதிக அளவில் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் முடி உதிர்வை குறைப்பதோடு புதிய முடியையும் வேரிலிருந்வலுவாக வளர உதவுகின்றன.
அடர்த்தியான முடியை பெற பூசணி விதைகள்
பூசணி விதைகளில் ஜிங்க் சத்து நிறைந்து இருக்கிறது. இது உங்கள் முடியின் வேர் பகுதியை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கியமான ஒன்று. பூசணி விதைகளை சாலடுகள், கஞ்சி அல்லது வீட்டில் தயாரிக்கும் பொடி வகைகள் போன்றவற்றில் சேர்த்து கொள்ளலாம். இதை தொடர்ந்து செய்தால் முடி உதிர்வை குறைக்கவும், அடர்த்தியான மற்றும் முழுமையான முடி வளர்ச்சியை தூண்டவும் உதவுகின்றன.
முடி உதிர்வை மற்றும் உடைவதை சரி செய்ய நெல்லிக்காய்
இந்திய நெல்லிக்காய்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதை பச்சையாகவோ, உலர வைத்ததையோ அல்லது சாறாகவோ எடுத்துக் கொள்ளலாம். இது கொலாஜனை அதிகரிப்பதால் முடி வேர்களை வலுப்படுத்துகிறது. இது சுற்றுசூழல் மாசுபாடு அல்லது மன அழுத்தத்தால் ஏற்படும் தலைமுடி சேதத்தை சரிசெய்ய உதவுகிறது. தினசரி ஒரு நெல்லிக்காய் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த வழியாகும்.
ஈரப்பதத்தை தக்க வைக்க கீரைகள்
முடியின் அடர்த்தி குறைந்து மெலிந்து போவதற்கு முக்கிய காரணம் போதுமான இரும்பு சத்து இல்லாதது தான். கீரைகளில் ஃபோலேட், இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைந்துள்ளன. இதை பொரியல் அல்லது ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம். இது முடியின் ஈரப்பதத்தை தக்க வைப்பதோடு முடியின் வளர்ச்சியை தூண்டி சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது.
உரோமக்க்கால்களை குளிர்சியாக வைக்க எள்ளு
எள்ளு பெரும்பாலும் இந்திய இனிப்பு மற்றும் கார வகைகளில் பயன்படுத்தப்படும். சில கடை தின்பண்டங்களில் கூட அழகிற்காக சேர்க்கப்பட்டிருக்கும். இது மயிர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் இயற்கையான குளிர்ச்சி விளைவு பொடுகு அல்லது அரிப்பு போன்ற வெப்பம் சம்பந்தமான முடி பிரச்சினைகளை சரி செய்கிறது.
புரததிற்கு நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்
பாதாம், வால்நட்ஸ் மற்றும் பேரீச்சம்பழம் போன்றவை சிறப்பான நன்மைகளை வழங்க கூடிய அருமையான ஸ்னாக்ஸ் வகைகள். அவற்றில் பயோட்டின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களால் நிறைந்திருக்கின்றன. அவை முடி உதிர்வை குறைப்பதோடு மென்மையாகவும் வலுவாகவும் இருக்க உதவுகின்றன. தினசரி குறிப்பிட்ட அளவில் இவற்றை எடுத்து கொள்ளுவது நல்ல பலனை தரும்.



Click it and Unblock the Notifications

