Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
தீபாவளி நாளில் அழகா ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து 2 நாள் போடுங்க...
Diwali 2024 Skin Care Tips: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நன்னாளில் ஒவ்வொருவருமே புத்தம் புதிய ஆடைகளை அணிந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவோம். அப்படி புதிய ஆடைகளை அணியும் போது முகம் மட்டும் பளிச்சென்று இல்லாமல், டல்லாக இருந்தால் நன்றாக இருக்காது அல்லவா?
எனவே இந்த தீபாவளி பண்டிகையில் நீங்கள் நல்ல புத்துணர்ச்சியான மற்றும் பொலிவான முகத்துடன் ஜொலிக்க விரும்பினால், ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட்டு வாருங்கள். அதுவும் உங்களுக்கு பார்லர் செல்லும் அளவில் எல்லாம் நேரம் இல்லையா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே தீபாவளி பண்டிகையின் போது அழகாக ஜொலிக்க எந்த மாதிரியான ஃபேஸ் பேக்குகளை போடலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

1. மஞ்சள் மற்றும் தேன்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கில் உள்ள மஞ்சள் பொலிவிழந்து முகத்தை பொலிவாக்க உதவும் மற்றும் தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
2. கடலை மாவு மற்றும் தயிர்
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரைக் கொண்டு, முகத்தை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை இரவு தூங்கும் முன் போட்டு வந்தால், முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
3. கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர்
* ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லுடன், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தொடர்ந்து 2-3 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வர, ஒரு நல்ல மாற்றத்தை முகத்தில் காணலாம்.
4. பப்பாளி மற்றும் தேன்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு சிறிது பப்பாளியை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும்.
5. வாழைப்பழம் மற்றும் பால்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை பாதி எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக பட்டுப் போன்று வைத்துக் கொள்ள உதவும்.
6. ஓட்ஸ் மற்றும் பால்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும பொலிவை அதிகரிக்கும்.
7. சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பொடியை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications