Latest Updates
-
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப சரும டாக்டர் சொல்ற இந்த சூப்பர் உணவுகளை அதிகம் சாப்பிடுங்க போதும்..!
Foods For Glowing Skin In Tamil: நாம் ஒவ்வொருவருமே நல்ல பொலிவான சருமத்தைப் பெற விரும்புவோம். இப்படி பொலிவான சருமத்தைப் பெற நினைக்கும் பலரும் முதலில் செய்வது சருமத்திற்கு ஃபேஸ் பேக், ஃபேஷியல், ஸ்க்ரப் போன்றவற்றை மேற்கொள்வதோடு, மாய்ஸ்சுரைசர், சன் ஸ்க்ரீன் லோஷன், சீரம் போன்ற பல பொருட்களையும் வாங்கி பயன்படுத்துவது தான்.
இவை அனைத்துமே சருமத்தை எப்போதும் பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் விஷயங்களாக இருந்தாலும், உண்மையான சரும பொலிவு என்பது நாம் உண்ணும் உணவுகளின் மூலம் தான் பெறமுடியும். ஆம், சரும பராமரிப்புக்கள் மட்டும் சருமத்திற்கு நல்ல பொலிவைத் தந்துவிடாது.

இயற்கையாகவே முகம் பொலிவோடும், அழகாகவும் இருக்க வேண்டுமானாலும், சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சரும ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்களை தவறாமல் பெற வேண்டும். அதுவும் இந்த சத்துக்களை உணவுகளின் மூலம் எளிதில் பெறலாம்.
"இயற்கையாகவே பொலிவான சருமம் வேண்டுமானால் குறிப்பிட்ட மூலக்கூறுகளை தினமும் எடுக்க வேண்டும். இந்த மூலக்கூறுகள் நமது உணவுகளிலேயே உள்ளன. அந்த உணவுகள் என்னென்ன" என்பது குறித்து சரும நிபுணரான டாக்டர் மோனிஷா அரவிந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த உணவுகள் எவையென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கற்றாழை
"கற்றாழையில் பாலிசாக்ரைடுகள் மற்றும் கிளைகோபுரோட்டீன்கள் உள்ளன. இவை வயதான தோற்றத்தை எதிர்க்கும் திறனை அதிகரிக்கும்." என்று டாக்டர் கூறினார். எனவே கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்துவதை தவிர, அதை ஜூஸ் வடிவில் உட்கொண்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
கேரட்
"கேரட்டில் பீட்டா கரோட்டீன் உள்ளது. ரெட்டினால் நீங்கள் பயன்படுத்துபவரானால், அந்த ரெட்டினால் பீட்டா கரோட்டீன் நிறைந்த கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆப்ரிகாட், பசலைக்கீரை போன்றவற்றில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. எனவே கேரட்டை ஜூஸாக எடுப்பதை விட, அப்படியே சாப்பிட்டால் நார்ச்சத்துடன் நல்ல பலன் கிடைக்கும்" என்று டாக்டர் கூறினார்.
பீட்ரூட்
"பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் மற்றும் பீட்டனின் என்னும் இரண்டு பொருட்கள் உள்ளன. இவை சருமத்தில் உள்ள கருமையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். ஆனால் அதற்கு பீட்ரூட்டை ஜூஸாக எடுக்காமல், சாலட் அல்லது பொரியல் போன்று செய்து சாப்பிட வேண்டும். அதுவும் தினமும் உட்கொள்ளக்கூடாது, வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தான் சாப்பிட வேண்டும்" என்று டாக்டர் கூறினார்.
மீன்
"மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவற்றை வாரத்திற்கு 3 முறை உட்கொண்டு வந்தாலும், சருமம் பொலிவாக இருக்கும்" என்று டாக்டர் மோனிஷா கூறினார்.
அவகேடோ
"அவகேடோ பழத்தில் வைட்டமின் ஈ உள்ளது. இந்த வைட்டமின் வேறு எந்த ஒரு உணவிலும் அவ்வளவு சிறப்பான அளவில் கிடைக்காது. அதற்காக இதை தினமும் எடுக்கக்கூடாது. வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம்" என்று டாக்டர் கூறினார்.
வாழைப்பழம்
"வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 மற்றும் சிலிகா உள்ளது. இவை கொலாஜனை சிறப்பாக மேம்படுத்த உதவி புரியும்" என்று டாக்டர் கூறினார். எனவே பொலிவான சருமத்தைப் பெற விரும்பினால், வருடம் முழுவதும் விலைக்குறைவில் கிடைக்கும் வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வாருங்கள்.
ஆரஞ்சு
"ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். மேலும் இந்த வைட்டமின் சி பற்றியும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதை தினமும் கூட எடுக்கலாம். ஆனால் ஜூஸாக இல்லை, பழமாக உட்கொள்ளலாம்" என்று டாக்டர் மோனிஷா அரவிந்த் கூறினார்.
எனவே நண்பர்களே! நீங்கள் உங்களின் சருமம் இயற்கையாகவே பொலிவாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உங்களின் உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications