For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாரு பக்கத்துலயும் போய் பேச முடியாத அளவு உங்க வாய் நாற்றமடிக்குதா? அப்ப இத யூஸ் பண்ணுங்க...

சிலர் தங்களது வாய் துர்நாற்றத்தினால், துணையின் அருகில் கூட செல்ல தயங்குவார்கள். கடைகளில் விற்கப்படும் மௌத் வாஷைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே ஒருசில பொருட்களைக் கொண்டு மௌத் வாஷ் தயாரிக்கலாம்.

|

வாய் துர்நாற்றம், இன்று ஏராளமானோர் அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை. இப்பிரச்சனையால் ஒருவரது தன்னம்பிக்கை இழக்கக்கூடும் என்பது தெரியுமா? ஆம், வாய் துர்நாற்ற பிரச்சனை உள்ளவர்கள், தங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் சொல்வதற்கு தயக்கம் கொள்வதோடு சங்கடப்படுவார்கள். எங்கு நமது வாய் துர்நாற்றத்தினால் நம்மை வெறுத்து நம் அருகே வருவதைத் தவிர்ப்பாகளோ என்ற எண்ணத்தால், அதிகம் பேசாமலேயே இருப்பார்கள்.

Make Your Own DIY Mouthwash To Get Rid Of Bad Breath

சிலர் தங்களது வாய் துர்நாற்றத்தினால், துணையின் அருகில் கூட செல்ல தயங்குவார்கள். இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு கடைகளில் விற்கப்படும் மௌத் வாஷ் கூட பலர் பயன்படுத்தியிருப்பார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைத்தவாறு தெரிந்திருக்காது. கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த மௌத் வாஷைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே ஒருசில எளிய பொருட்களைக் கொண்டு மௌத் வாஷ் தயாரித்து பயன்படுத்தலாம் தானே!

காலையில் வெறும் வயிற்றில் வெல்லம் சாப்பிட்டு சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இந்த கட்டுரையில் வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் ஒரு அற்புதமான நேச்சுரல் மௌத் வாஷ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து பயன்படுத்தி, வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் நேச்சுரல் மௌத் வாஷ் சிறந்தது?

ஏன் நேச்சுரல் மௌத் வாஷ் சிறந்தது?

கெமிக்கல் கலந்த மௌத் வாஷ், வாயில் உள்ள pH அளவில் இடையூறை ஏற்படுத்துவதோடு, நீண்ட நாட்கள் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தினால், பற்கள் சொத்தையாகக்கூடும். எனவே தான் செயற்கைக்கு பதிலாக இயற்கை மௌத் வாஷைத் தயாரித்துப் பயன்படுத்துங்கள். இதனால் எந்த ஒரு பக்க விளைவையும் சந்திக்க வேண்டியிருக்காது.

இப்போது நேச்சுரல் மௌத் வாஷை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

ஆண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சில எச்சரிக்கை அறிகுறிகள்!

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 2 கப்

* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* புதினா எண்ணெய் - 7-8 துளிகள்

* கல் உப்பு - 1 சிட்டிகை

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

* ஒரு கண்ணாடி பாட்டிலில் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை இந்த கலவையைப் பயன்படுத்தும் முன்பும் ஒருமுறை குலுக்கிக் கொள்ள வேண்டும்.

* இந்த நேச்சுரல் மௌத் வாஷில் வாயின் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பளிக்கும் வகையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

இப்போது வாய் துர்நாற்றத்தைப் போக்கும் வேறு சில இயற்கை வழிகளைக் காண்போம்.

மதுப் பழக்கத்தைக் கைவிட நினைக்கிறீர்களா? இதோ சில இயற்கை வழிகள்!

சோம்பு

சோம்பு

சோம்பு வாய்க்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, வாய் துர்நாற்றத்தைக் குறைக்க உதவும். வாய் துர்நாற்றத்திற்கு காரணம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் தான். ஒவ்வொரு முறை உணவு உண்ட பின்னரும் சிறிது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் வாய் துர்நாற்றம் அகலும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா என்றதும் பல எண்ண விசித்திரமாக உள்ளது என்று நினைக்கலாம்.ஆனால் ஒரு கப் நீரில் 1 அல்லது 2 டீஸ்பூன் பேக்கிடங் சோடாவைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் பற்களைத் துலகுக்ம் போது கலவையைக் கொக்டு வந்தால், வாய் துர்தற்றம் போய்விடும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அம்லம், வாயில் எச்சில் உற்பத்தியை அதிகரித்து, வாய் துர்நாற்றத்தைக் குறைக்கும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து வாயில் ஊற்றி வாயைக் கழுவினால், துர்நாற்றம் காணாமல் போகும்.

நீங்க பீர் குடிப்பீங்களா? அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...

பட்டை

பட்டை

பட்டை துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடக்கூடியவை. எனவே இது வாய் துர்நாற்றத்தைப் போக்க வல்ல ஒரு பொருளாகும். அதுவும் நீரில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்து, அந்நீரால் தினமும் வாயைக் கொப்பளித்து வந்தால், வாய் துர்நாற்றம் போய்விடும். வேண்டுமானால், அத்துடன் ஏலக்காய் மற்றும் பிரியாணி இலையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் எடையைக் குறைப்பது மட்டுமின்றி, வாயில் pH அளவை நிலையாக பராமரித்து, வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, அந்நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படி சில வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

எடையை குறைக்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...

பார்ஸ்லி

பார்ஸ்லி

பார்ஸ்லியில் உள்ள குளோரோஃபில் வாய் துர்நாற்றத்தை நடுநிலையாக்கி, வாய்க்கு புத்துணர்ச்சியை அளிக்கும். அதற்கு சிறிது பார்ஸ்லியை வாயில் போட்டு சிறிது நேரம் மெல்ல வேண்டும். இப்படி அடிக்கடி சாப்பிட்டால், வாய் துர்நாற்றத்தை முழுமையாக விரட்டலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Make Your Own DIY Mouthwash To Get Rid Of Bad Breath

Bad breath is a problem that a lot of people suffer with. Want to make your own diy mouthwash to get rid of bad breath? Read on...
Desktop Bottom Promotion